நெஞ்சம் நிறைந்த நினைவுகள்
நெஞ்சம் நிறைந்த நினைவுகள், ஏ.சி. திருலோகசந்தர், வசந்தா பிரசுரம், பக். 352, விலை 220ரூ.
கதாசிரியர், திரைப்பட இயக்குநர் என்ற புகழுக்கு உரியவரான கலைமாமணி ஏ.சி. திருலோகசந்தர் தன் சமகாலத்து சினிமா அனுபவங்களை இந்நூலில் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
திரு. ஏவி.எம். சரவணன் நட்பு தொடங்கி, அவரது பிறப்பின் பிரமிப்பில் ஆரம்பித்து, கல்லூரி வாழ்க்கை, முதல்பட வாய்ப்பு, எம்.ஜி.ஆர். சிவாஜி உள்ளிட்டோரை இயக்கியது, ‘அன்பே வா’ உள்ளிட்ட மாபெரும் வெற்றிப் படங்களை இயக்கிய அனுபவம், ஜனாதிபதி பரிசு பெற்றது. ஜெயலலிதா நடித்த ‘எங்கிருந்தோ வந்தாள்’, கே.ஆர். விஜயா உள்ளிட்ட பிரபலங்களை இயக்கியது, சிவகுமார் நடித்த ‘பத்ரகாளி’ தந்த வெற்றி – போன்றவை திரைத்துறையை ஒரு தவமாகச் செய்த ஒரு உயர்ந்த கலைஞனின் வாழ்வை அப்படியே படம் பிடித்து காட்டியுள்ளதுபோல் உள்ளது.
நன்றி: குமுதம், 31/8/2016.