கண்டுகொண்டேன் சாயிபாபா

கண்டுகொண்டேன் சாயிபாபா, த.மா.ஜெம்புலிங்கம், ஸ்ரீரங்கம் சீரடி சாய் பவுண்டேஷன், விலை 100ரூ. சாயிபாபா நிகழ்த்திய அற்புதங்கள் மற்றும் அவரது அருமை பெருமைகளைக் கூறும் 230 பாடல்களைக் கொண்டு இந்த நூல் எழுதப்பட்டு இருக்கிறது. அத்தனை பாடல்களும் மரபுக் கவிதைகள் என்றாலும், அவற்றைப் பேச்சு வழக்குத் தமிழில் கொடுத்து இருப்பதால் எளிதில் பொருள் விளங்கிப் படிக்க முடிகிறது. பல்வேறு கடவுள்களின் அவதாரங்கள் பற்றிய தகவல்களும் இந்த நூலில் உள்ளது. நன்றி: தினத்தந்தி, 26/9/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

சாதி ஒழிப்பு

சாதி ஒழிப்பு, கசி.விடுதலைக்குமரன், மக்கள் விடுதலை பதிப்பகம், விலை 90ரூ. இந்தியாவில் சாதி முறை தோன்றியது எவ்வாறு என்பதும், சாதியை ஏன் ஒழிக்க வேண்டும் என்பதும், சாதி ஒழிப்புக்கு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் இந்த நூலில் விளக்கமாகச் சொல்லப்பட்டு இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 26/9/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

அறுபது கவிதைகள்

அறுபது கவிதைகள், அய்யாறு ச.புகழேந்தி, பாரதி பித்தன் பதிப்பகம், விலை 60ரூ. கவிஞர் அய்யாறு புகழேந்தி, தனது 60-வது பிறந்த நாளையொட்டி, 60 கவிதைகள் கொண்ட இந்தத் தொகுப்பைப் படைத்து இருக்கிறார். பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட இந்தப் புதுக் கவிதைகள், ரசித்துப் படிக்கும் வகையில் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 26/9/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

புரட்சியை உண்டாக்கிய நாவல்கள்

புரட்சியை உண்டாக்கிய நாவல்கள், முல்லை பிஎல். முத்தையா, முல்லை பதிப்பகம், விலை:ரூ.600. இலக்கிய உலகில் புரட்சியை உண்டாக்கிய ‘மேடம் பவாரிகுஸ்தால் பிளாபர்), புது வாழ்வு போரும் காதலும்(லியோ டால்ஸ்டாய்), அதிசய மாளிகைருத்தானியல் ஹாவ்த்தான்), பெண் வாழ்க்கையாப்பஸான்). நான்கு நண்பர் கள்(அலெக்சாண்டர் டுமாஸ்) ஆகிய 6 நாவல்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. நாவல்களின் சுருக்கம் என்ற போதிலும், அதன் பாதிப்பே தெரியாத வகையில் நேர்த்தியாகச் சுருக்கித் தரப் பட்டு இருக்கின்றன. அந்தந்த கலாச்சாரத்தினை வெளிப்படுத்தும் வகையில் நாவல்கள் மொழி பெயர்க்கப்பட்டு இருப்பதால், மூலக் கதையைப் படிக்கும் திருப்தி […]

Read more

திருமூலர் வாழ்வும் வாக்கும்

திருமூலர் வாழ்வும் வாக்கும், டாக்டர் துரை.இராஜாராம், நர்மதா பதிப்பகம், விலை 100ரூ. திருமூலர் எழுதிய மூவாயிரம் மந்திரங்களில் முக்கியமான சில மநதிரங்களுக்கு, அவற்றில் பொதிந்துள்ள அர்த்தங்கள் என்ன என்பது இந்த நூலில் சொல்லப்பட்டு இருக்கின்றது. திருமூலரின் வாழ்க்கைக் குறிப்பு, சித்தர்களின் சிறப்பு ஆகியவையும் இந்த நூலில் காணப்படுகின்றன. நன்றி: தினத்தந்தி, 26/9/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000006461_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பச்சைப் பாம்பும் அழகிய லில்லியும்

பச்சைப் பாம்பும் அழகிய லில்லியும், மூலம்: யொஹான் வோல்ப்கங்க் பான் கோதெ, தமிழில்: சுஜாதா ராஜகோபால், கார் முகில் எஜூகேஷனல் டிரஸ்ட், பக். 48; விலைரூ.80; ஜெர்மன் கவிஞர் ஷில்லெர் ‘ஹோரன்’ எனும் பத்திரிகைக்கு எழுதிய கடிதங்களில் தத்துவ ரீதியாக உள்ள கருத்துகளை மையப்படுத்தி உயிரோட்டமுள்ள கதையாக ஜெர்மானிய பன்முக ஆளுமை ‘கோதெ’வால் எழுதப்பட்டதுதான் இந்நூல். ஓர் உன்னதமான இலட்சிய சமுதாயம் எப்படி இருக்க வேண்டும்? என்பதை பஞ்சதந்திர வகைமையிலான கதை சொல்லும் பாணியில் எழுதியிருப்பது இந்நூலின் சிறப்பு. இந்தக் கதையில் வரும் பித்தளை, […]

Read more

பனை ஓலையும் பழந்தமிழும்

பனை ஓலையும் பழந்தமிழும், வி.ஜி.சந்தோசம், பழனியப்பா பிரதர்ஸ், பக்.140, விலை ரூ.125. பனை ஓலையும் பழந்தமிழும் என்ற நூலின் தலைப்புக்கேற்ப பனை ஓலை தொடர்பான அனைத்துத் தகவல்களும், பழந்தமிழர் வாழ்க்கை தொடர்பான அனைத்துத் தகவல்களும் இந்நூலில் நிரம்பியுள்ளன. மன்னர் காலத்துக்கு முன்பிருந்து மனிதர்களிடையே தகவல் தொடர்புகள் எவ்வாறு இருந்தன, அதில் ஓலைச்சுவடிகளின் பங்கு என்ன என்பதை நூல் தெளிவாக விளக்குகிறது. பனை ஓலை தொடர்பான கட்டுரையில் பனை மரத்தின் பயன்கள், பனைமரத்திலிருந்து கிடைக்கும் பொருள்கள், பனைத் தொழிலாளர்களின் வாழ்க்கை, பனை பொருள்களின் விற்பனை என […]

Read more

கரிசல்காட்டு ஜமீன்தார்கள்

கரிசல்காட்டு ஜமீன்தார்கள், முத்தாலங்குறிச்சி காமராசு, காவ்யா, பக். 270, விலை ரூ. 270. பாளையக்காரர்கள் எனப்படும் ஜமீன்தார்கள் குறித்த நூல்கள் தமிழில் ஏற்கெனவே வெளியாகியுள்ளன. இந்த நூல் தென் தமிழகத்தைச் சேர்ந்த இளையரசனேந்தல், குருவிகுளம் ஜமீன்தார்களைப் பற்றியது. அந்த வகையில், இரு ஜமீன்களின் பூர்விகம், வாழ்க்கை முறை, ஆன்மிக, சமுதாயப் பணிகள் பற்றிய ஆய்வுத் தகவல்கள் சுவாரசியமான முறையில் கூறப்பட்டுள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிடும் சம்பவத்தின்போது, அனைத்து பாளையக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்கள்அழைப்பு விடுத்தனர். அதைப் பார்க்கும் பாளையக்காரர்கள் அஞ்சி ஒழுங்காக கப்பம் கட்டுவார்கள் என்பதே அந்த […]

Read more

பிரபஞ்சன் சில நினைவுகள்

பிரபஞ்சன் சில நினைவுகள், பி.ராஜ்ஜா, இனிய நந்தவனம் பதிப்பகம், விலை:ரூ.100 தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமையோடு எழுதக்கூடிய இந்த நூலின் ஆசிரியர், பிரபல எழுத்தாளரான பிரபஞ்சனுடன் பழகிய நாட்களில் நடைபெற்ற செய்திகளை தனக்கே உரித்தான பாணியில் தந்து இருக்கிறார். இதில் பிரபஞ்சனின் தனித் திறமை நன்றாக வெளிப்பட்டு இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 13/2/22 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

கண்டதைச் சொல்கிறேன்

கண்டதைச் சொல்கிறேன், வழக்கறிஞர் சுமதி, சந்தியா பதிப்பகம், பக்.192, விலை ரூ.200. வெகுஜன மாத இதழ்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. தொழில் ரீதியாக தான் கண்டவற்றை 27 தலைப்புகளில் கதை சொல்வது போல சொல்லிச் செல்கிறார் நூலாசிரியர். பெற்றோர் விவாகரத்து பெற்றுப் பிரியும் நிலையில், பிள்ளைகள் எவ்வளவு பாதிக்கப்படுகின்றனர்; குடிகாரக் கணவனால் பாதிக்கப்படும் பெண்களின் எதிர்காலம்; வயதான தாய்-தந்தையை பராமரிக்காமல் முதியோர் இல்லத்தில் விடும் பிள்ளைகள்; தற்கொலை செய்து கொள்ள நினைப்போர்; தாய்-தந்தை பேச்சைக் கேட்டு கணவனை விட்டுப் பிரியும் பெண்களின் நிலைமை; கட்டாயத் […]

Read more
1 2 3 8