சின்ன அரும்பு மலரும்

சின்ன அரும்பு மலரும், கவிஞர் சுபஸ்ரீ சுப்ரமணியம், சுபஸ்ரீ பதிப்பகம், விலைரூ.150. சிறுவர்கள் பாட ஏற்ற வகையில் எழுதி தொகுக்கப்பட்டுள்ள சந்தப் பாடல்களின் தொகுப்பு நுால். மிகச் சாதாரணமான பொருள்களில் பாடப்பட்டுள்ளன; அனைத்திலும் சந்தம் பொதிந்துள்ளன. உற்சாகமாக பாட ஏற்ற வகையில் உள்ளன. பாடல்கள் நம்பிக்கை ஊட்டும் வகையில் அமைந்துள்ளன. குழந்தைகளின் முன் இனிமையாக பாடி கற்றுக் கொடுத்து அறிவூட்ட உதவும் நுால். – ஒளி நன்றி: தினமலர், 6/3/22 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

நாதஜ்யோதி ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் அடிச்சுவட்டில் இசைப்பயணம்

View Post நாதஜ்யோதி ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் அடிச்சுவட்டில் இசைப்பயணம், ரா.கிருஷ்ணன், திருப்புகழ் சங்கமம், விலைரூ.396. கர்நாடக சங்கீத வித்தகர் முத்துஸ்வாமி தீட்சிதர் பாடியுள்ள தலங்களைப் பற்றிய விரிவான யாத்திரை நுால். அவர் பாடியுள்ள 66 தலங்களின் வரலாறு, புராண, இலக்கியச் செய்திகள் இடம் பெற்றுள்ளன. கோவில் அமைப்பு, இறைவன் அருள்பாலிக்கும் விதம், துணை சன்னிதிகள், தீர்த்தகுளம் ஆகியவை பற்றியும் விரிவாக கூறியுள்ளார் தீட்சிதர். அந்த கோவில்களின் தற்போதைய நிலை குறித்து விரிவாக எழுதியுள்ளார் ஆசிரியர். தீட்சிதர் பாடியுள்ள தலங்கள் மற்றும் க்ருதிகளின் பட்டியலைத் […]

Read more

ஆயக் கலைகள் அறுபத்து நான்கு

ஆயக் கலைகள் அறுபத்து நான்கு,  செந்துறை முத்து,  முல்லை பதிப்பகம், பக்.576, விலை  ரூ.500. கட்டடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை, நடனக் கலை, நாடகக் கலை, இசைக் கலை, சோதிடக் கலை என நமக்குத் தெரிந்த கலைகள் சில இருந்தாலும் தெரியாத கலைகள் நிறைய உள்ளன. எமகண்டக்கவிதைக் கலை, கனா நூற்கலை, தம்பலக் கலை, தொகுப்புக் கலை, திருவிழாக் கலை ஆகியவற்றைப் பற்றி கேள்விப்படாதவர்களே இருப்பார்கள். இந்நூல் அறுபத்து நான்கு கலைகள் எவை எவை என்று சொல்வதுடன் மட்டும் நின்றுவிடாமல், ஒவ்வொரு […]

Read more

நல்லன எல்லாம் அருளும் நாரத புராணம்

நல்லன எல்லாம் அருளும் நாரத புராணம், பிரபு சங்கர், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.220. நாரதர் கலகம் நன்மையில்தானே முடியும். அது தேவலோகமோ, பூலோகமோ… மக்களுக்காகவே, மற்றவர்களுக்காகவே ஆன்மிகத் தொண்டு செய்த பிரம்ம தேவனின் – புதல்வர்நாரதர் பற்றிய முழுமையான தொகுப்பு இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. நாரதரின் பெருமைகள், தவ வலிமை, மானிடப் பிறப்பு, மறு பிறப்பு, தேவலோக வரவேற்பு, திரிலோக சஞ்சாரி, அகங்கார நாரதர்… என மாண்புகள் சொல்லப்படுகின்றன. நாரதரைப் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் கலகங்களையும், அவற்றின் […]

Read more

பிஃபோர் பிகமிங் பிளைண்டு

பிஃபோர் பிகமிங் பிளைண்டு, டிராயிங்ஸ் பை நடேஷ், மு.நடேஷ், கடவு வெளியீடு, கூத்துப்பட்டறை, விலை: ரூ. 750 பெண்மையும் இயற்கையும் இணையும் கோடுகள் கறுப்பு மைக் கோட்டுச் சித்திரங்களின் வழியாக இசைமையையும் புலன் ஈர்ப்பையும் ஏற்படுத்த வல்ல தமிழ் நவீன ஓவியர்கள் சிலர்தான். ஆதிமூலம், சந்ரு, மருது, மனோகரின் பட்டியலில் ஓவியரும் நிர்மாணக் கலை முன்னோடியுமான மு.நடேஷுக்கும் பிரதான இடம் உண்டு. அரசு அலுவலகத்தில் வேலை பார்த்த அம்மா, வீட்டுக்குக் கொண்டுவரும் துண்டுக் காகிதங்களில் சிறுவயதிலேயே கிறுக்கி வரையத் தொடங்கிய நடேஷுக்குக் கோட்டோவியம் என்பது […]

Read more

நாதஜ்யோதி ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் அடிச்சுவட்டில் இசைப்பயணம்

நாதஜ்யோதி ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் அடிச்சுவட்டில் இசைப்பயணம்,  வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன்,திருப்புகழ்ச் சங்கமம்,  பக்.464,  விலை ரூ.396. கர்நாடக சங்கீத உலகின் மும்மூர்த்திகளுள் ஒருவர் என்று போற்றப்படுபவர் ஸ்ரீ முத்துஸ்வாமி தீட்சிதர். ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்று பல தலங்களுக்கும் சென்று அங்குள்ள இறைவன், இறைவியைப் போற்றி கீர்த்தனைகள் இயற்றியுள்ளார். தமிழகத்துக் கோயில்கள் மட்டுமல்லாது, திருவேங் கடம், காஷ்மீர், காசி, இமயமலை போன்ற தலங்களில் உள்ள தெய்வங்களையும் போற்றிப் பாடியுள்ளார் தீட்சிதர். இவருடைய கீர்த்தனைகள் பெரும்பாலும் சம்ஸ்கிருதத்தில் அமைந்தவை. இந்நூலில் தீட்சிதர் 66 தலங்களில் பாடிய […]

Read more

தமிழிசை : ஓர் எளிய அறிமுகம்

தமிழிசை : ஓர் எளிய அறிமுகம், புதுகை கு.வெற்றிச்சீலன், களம் வெளியீடு, விலை: ரூ.20. தமிழ்த் தேசிய அரசியல் மேடைகளில் உணர்ச்சிக் கொந்தளிப்போடு முழங்கும் கு.வெற்றிச்சீலன், இசை குறித்த ஆய்வுகளில் தோய்ந்து, அறிமுக நூலொன்றை எழுதியிருக்கிறார் என்பது ஆச்சரியம்தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இசைத்தமிழ் அறிஞரான தஞ்சை ஆப்ரகாம் பண்டிதரின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரைக் குறித்து எழுதிய ஒரு முகநூல் குறிப்பானது தொடர் கட்டுரைகளாக விரிந்து, தற்போது நூல் வடிவம் கண்டிருக்கிறது. 31 தலைப்புகளில் எழுதப்பட்ட இந்த அறிமுக நூல், சங்க காலம் தொடங்கி […]

Read more

திரை இசை மும்மூர்த்திகள்

திரை இசை மும்மூர்த்திகள், பி.ஜி.எஸ்.மணியன், வைகுந்த் பதிப்பகம், விலைரூ.325. திரை இசையமைப்பாளர்கள் எஸ்.வி.வெங்கட்ராமன், சி.ஆர்.சுப்பராமன், ஜி.ராமநாதன் பற்றிய தொகுப்பு நுால். எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடி நடித்த மீரா திரைப்பட இசையமைப்பாளர் எஸ்.வி.வெங்கட்ராமன்.பட்டினத்தார் நாடகத்தில் நடிக்கத் துவங்கிய வெங்கட்ராமனுக்கு, நள தமயந்தி என்னும் திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. அதில், கதாநாயகனாக நடித்து புகழ் பெற்றார். ஏ.வி.எம்.மெய்யப்ப செட்டியார் தான், எஸ்.வி.வெங்கட்ராமனை இசையமைப்பாளராகத் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகம் செய்தார். பரசுராமன் என்னும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனவர் பி.ஆர்.சுப்பராமன். பாடகர்கள் கண்டசாலா, பி.லீலா, இசையமைப்பாளர்கள் […]

Read more

தமிழ்த் திரையிசை ஆளுமைகள்

தமிழ்த் திரையிசை ஆளுமைகள்,  ஞா.கற்பகம், கற்பக வித்யா பதிப்பகம், பக்.400, விலை ரூ.300.   தமிழ்மொழியில் முதல் பேசும் படம் 1931 – ஆம் ஆண்டில் வெளியானது. அதற்கு முன்னர் மெளனப் படங்களே வெளிவந்தன. தமிழ்த் திரைப்படம் பேசத் தொடங்கிய, பாடத் தொடங்கிய 1931 முதல் 2000 -ஆம் ஆண்டு வரையிலான 70 ஆண்டுகளில் தமிழ்த் திரைப்பட உலகில் பணியாற்றிய 61 இசையமைப்பாளர்கள், 64 பாடகர்கள், 54 பாடகிகள், 22 இசைக்கருவி இசைக்கும் கலைஞர்கள் என மொத்தம் 201 பேரைப் பற்றிய தகவல்கள் இந்நூலில் தொகுத்துக் […]

Read more

வரலாற்றில் புலிப்புரக்கோவில்

வரலாற்றில் புலிப்புரக்கோவில், மா.சந்திரமூர்த்தி, கலைத்தாய் பதிப்பகம், விலைரூ.200. கோவில்களால் பெருமை பெற்றது தமிழகம். சங்க காலத்தில் மரம், செங்கல்லாலும், பல்லவர் காலத்தில் பாறைகளைக் குடைந்து கற்றளிகளாகவும் அமைத்தனர். சோழர், பாண்டியர், விஜய நகர ஆட்சிகளில் கலை நுட்பமிக்க கோவில்களைக் கட்டினர் என்ற முகவுரையுடன் துவங்குகிறது நுால். மதுராந்தகம் அருகே படாளம் கிராமத்தில் பழமை மிக்க புலிப்புரக்கோவில் பற்றி விளக்குகிறது. வரலாறு, கல்வெட்டு ஆதாரங்களைக் காட்டி வியக்க வைக்கிறது. கொடியாத்தம்மன் கோவில், முக்தீசுவரர், அழகு திருவாத்தம்மன் கோவில் சிறப்புகள் விரிவாக தரப்பட்டுள்ளன. ஆலக்கோவில் என்பது ஆல […]

Read more
1 2 3 8