பண்டைத் தடயம்

பண்டைத் தடயம், பதிப்பாசிரியர்கள்: நடன.காசிநாதன், மா.சந்திரமூர்த்தி, மணிவாசகர் பதிப்பகம், பக்.320, விலை ரூ275. தமிழகத்தின் வடபகுதியும், ஆந்திர மாநிலத்தின் சிறு பகுதியும் இணைந்த பகுதிதான் தொண்டை நாடு. ஜவ்வாது மலை, வேங்கடமலை, வங்கக்கடல், பெண்ணையாறு ஆகிய நான்கும் தொண்டை நாட்டின் எல்லைகள். அப்பர், சுந்தரர், வள்ளலார் மற்றும் முதல் மூன்று ஆழ்வார்கள் முதலிய அருளாளர்களும், ஆன்மிகப் பெரியோர்களும் தோன்றிய பெருமைக்குரியது இந்நாடு. அத்தகைய தொண்டை மண்டலத்தின் தொன்மைச் சிறப்புகளையும், வரலாற்று உண்மைகளையும், அங்கு கிடைத்த தடயங்களையும் இந்நூல் பறை சாற்றுகிறது.  அதுமட்டுமல்ல, திருமாணிக்குழி-சோழர்கால அளவுகோல், […]

Read more

வரலாற்றில் புலிப்புரக்கோவில்

வரலாற்றில் புலிப்புரக்கோவில், மா.சந்திரமூர்த்தி, கலைத்தாய் பதிப்பகம், விலைரூ.200. கோவில்களால் பெருமை பெற்றது தமிழகம். சங்க காலத்தில் மரம், செங்கல்லாலும், பல்லவர் காலத்தில் பாறைகளைக் குடைந்து கற்றளிகளாகவும் அமைத்தனர். சோழர், பாண்டியர், விஜய நகர ஆட்சிகளில் கலை நுட்பமிக்க கோவில்களைக் கட்டினர் என்ற முகவுரையுடன் துவங்குகிறது நுால். மதுராந்தகம் அருகே படாளம் கிராமத்தில் பழமை மிக்க புலிப்புரக்கோவில் பற்றி விளக்குகிறது. வரலாறு, கல்வெட்டு ஆதாரங்களைக் காட்டி வியக்க வைக்கிறது. கொடியாத்தம்மன் கோவில், முக்தீசுவரர், அழகு திருவாத்தம்மன் கோவில் சிறப்புகள் விரிவாக தரப்பட்டுள்ளன. ஆலக்கோவில் என்பது ஆல […]

Read more

ஆடிப்புலியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் வரலாறு

ஆடிப்புலியூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் வரலாறு, மா.சந்திரமூர்த்தி, சிவன் ராத்திரி விழா மன்றம், விலை 125ரூ. திருவாரூர் மாவட்டம், குடவாசலில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆடிப்புலியூரில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாறு மற்றும் கோவில் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 28/2/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026800.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more