பண்டைத் தடயம்

பண்டைத் தடயம், பதிப்பாசிரியர்கள்: நடன.காசிநாதன், மா.சந்திரமூர்த்தி, மணிவாசகர் பதிப்பகம், பக்.320, விலை ரூ275.

தமிழகத்தின் வடபகுதியும், ஆந்திர மாநிலத்தின் சிறு பகுதியும் இணைந்த பகுதிதான் தொண்டை நாடு. ஜவ்வாது மலை, வேங்கடமலை, வங்கக்கடல், பெண்ணையாறு ஆகிய நான்கும் தொண்டை நாட்டின் எல்லைகள்.

அப்பர், சுந்தரர், வள்ளலார் மற்றும் முதல் மூன்று ஆழ்வார்கள் முதலிய அருளாளர்களும், ஆன்மிகப் பெரியோர்களும் தோன்றிய பெருமைக்குரியது இந்நாடு. அத்தகைய தொண்டை மண்டலத்தின் தொன்மைச் சிறப்புகளையும், வரலாற்று உண்மைகளையும், அங்கு கிடைத்த தடயங்களையும் இந்நூல் பறை சாற்றுகிறது. 

அதுமட்டுமல்ல, திருமாணிக்குழி-சோழர்கால அளவுகோல், குஞ்சாந்தாங்கல் புதையல் சிலைகள், கடலூர் கலையமர் செல்வி, நெடுங்குன்றம் சந்திரசேகரர் உலோகச் சிலை, வீராங்குப்பம் நடுகற்கள் முதலிய புதிய கண்டுபிடிப்புகள் பற்றிய தகவல்களும் இந்நூலில் உள்ளன. 

சிதைந்த தலைநகர்-சேந்தமங்கலம், பெரும்பாணப்பாடி, புதுச்சேரி அகழ்வாய்வில் கிடைத்த ஈமச் சின்னங்கள், விழுப்புரம் சமணப் படுக்கைகள், விழுப்புரம் பைரவர் சிற்பம், திருவக்கரையின் தொன்மை வரலாறும் கல் மரப்பூங்காவும், ஆர்க்காட்டு நவாப் காலத்து நாணயங்கள், நாணயங்களில் உயிரினங்கள் என தொண்டை மண்டலத்தின் தடயம் குறித்து ஆய்வறிஞர்கள் 36 பேர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இது. 

நடுகல், கல்வெட்டுகள், சிற்பங்கள், நாணயங்கள், கோயில்கள், சாசனங்கள், ஆகியவற்றில் காணப்படும் பண்டைத் தடயங்களை வெளிக் கொணர்ந்திருக்கும் இந்நூலை வரலாற்றுச் சுரங்கம் என்றே கூறலாம்.

நன்றி: தினமணி, 28/3/22.

இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000017958_/

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609

இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *