நெஞ்சினில் ரஞ்சனி

நெஞ்சினில் ரஞ்சனி, வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.210. ‘வானமழை நீ எனக்கு’ நாவலில் அழகும் அறிவும் ஐஸ்வர்யமும் நிறைந்த ரஞ்சனியை பின்தொடர்ந்த ஆசிரியர், நான்கு வார சந்திப்பின் மூலம் அவளை நிரந்தர மாக பிரியும் நிலைக்கு தள்ளப்படுவார். அவள் அளித்த அன்புப் பரிசாக கைக்கடிகாரத்தை பார்த்து காலத்தை ஓட்டும் போது, திடீரென அவள் மீண்டும் வருகிறாள். மதுரை மீனாட்சி கோவிலில் ஒயிலாக நடந்து எழிலாக வளைய வந்து தன்னை ஆட்கொண்ட அந்த பேரழகு, இந்த நாவலில் நடை பயிலாமல் […]

Read more

மகிழ்ச்சி

மகிழ்ச்சி, நந்தவனம் சந்திரசேகரன், இனிய நந்தவனம் பதிப்பகம், விலைரூ.150. திருச்சி மாவட்ட எழுத்தாளர்களின் 21 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு நுால். மழபாடி ராஜாராமின் மவுனமொழி, விழுதுகளின் எழுச்சி, வேரின் மகிழ்ச்சி, பா.சேது மாதவனின் மனத்திறப்பு, கரையான், துறையூர் முருகேசனின் அருக்காணி, மாற்றும் ஏமாற்றும், மாராட்டி எம்.ஏ.ரமேஷின் திருத்தி எழுதிய கதை, உளி தாங்கும் கற்கள், கவுசிகனின் நான் இறந்து இருக்கிறேன், ஒன்றானோம்- ஒன்றாவோம், மிலிட்டரி போஸின் துரோகம் ஆகியவை சிறப்பாக உள்ளன. மூகாதேவி மகேஷின் ஆவியுடன் ஒரு நேர்காணல், பாசக் குடும்பம், ஜனனி அந்தோணி […]

Read more

வாழ்வின் தடங்கள் மருத்துவரின் தன் வரலாறு

வாழ்வின் தடங்கள் மருத்துவரின் தன் வரலாறு, ஞானசவுந்தரி, வெளியீடு: தி.லஜபதிராய், விலைரூ.250 தமிழில் வெளிவந்த, ‘மணப்பேறும் மகப்பேறும்’ புத்தகத்தை எழுதிய புகழ் பெற்ற மருத்துவர் ஞானசவுந்தரி. அவரது தன் வரலாற்று நுால். நெகழ்வும், அறமும் கலந்த படைப்பாக உள்ளது.வாழ்க்கை நிகழ்வுகளை, 20 இயல்களாக பிரித்து எழுதியுள்ளார். சம்பவங்களுடன் அறத்தை, நுட்பமாக பொருத்தி காட்டியுள்ளார். தமிழ் இலக்கிய மேற்கோள்களை இணைத்து, இலக்கியச் சுவையையும் கலந்துள்ளார். சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளை சுட்டிக்காட்டி, அதன் ஊடே மருத்துவ அனுபவத்தை விவரித்துள்ளார். ஒரு மகப்பேறு மருத்துவரின் பொறுப்பும், கடமையும் […]

Read more

மதப் புரட்சி செய்த மகான் ஸ்ரீ இராமானுஜர்

மதப் புரட்சி செய்த மகான் ஸ்ரீ இராமானுஜர், ம. கணபதி, மணிவாசகர் பதிப்பகம், விலைரூ.160. ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் நுால். காஞ்சிபுரத்திற்கு குடிபெயர்ந்த பின், யாதவப் பிரகாசர் என்னும் அத்வைதியிடம் வேதம் கற்று வந்தார் ராமானுஜர். அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.கங்கைக் கரைக்குத் தீர்த்த யாத்திரை சென்ற போது, நர்மதை ஆற்றங்கரையில் தன்னைக் கொல்லத் திட்டமிட்டிருப்பதை உணர்ந்தார் ராமானுஜர். உடனே தப்பி, மீண்டும் காஞ்சிபுரம் வந்தார். வழியில் வேட்டுவன் வடிவில் இறைவன் காத்த நிகழ்ச்சியை நாடகப் பாங்கில் படைத்து உள்ளார். திருக்கோட்டியூர் நம்பிகளிடம் […]

Read more

கிராமத்து தெருக்களின் வழியே

கிராமத்து தெருக்களின் வழியே…, ந.முருகேச பாண்டியன், டிஸ்கவரி புக் பேலஸ், விலைரூ.350. தமிழக கிராமிய வாழ்வியல் முறையை விவரிக்கும் நுால். முற்றிலும் அனுபவம் சார்ந்து எழுதப்பட்டுள்ளது. எளிய நடையில் காட்சிப் பூர்வமாக உள்ளது. மதுரை நகர் அருகே, 60 முதல், 80 வரையான காலத்தில், ஒரு கிராமத்தின் இயக்கம் மிக நுட்பமாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. அன்றாட வாழ்வியல் மிக இயல்பாக வரையப்பட்டு உள்ளது.புத்தகத்திலிருந்து… எழுபதுகளின் இறுதியில், மலையாளிகள் சிலர் எங்கள் ஊருக்கு வந்தனர். மந்தையில் கொட்டகை போட்டு, பல சரக்கு, மூலிகைகளை குவித்தனர். […]

Read more

அபரோக்ஷ அனுபூதி

அபரோக்ஷ அனுபூதி, க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலைரூ.270. தலைப்பைப் பார்த்ததும், ‘சமஸ்கிருத வார்த்தையாச்சே… நமக்கு எங்கே புரியப் போகுது…’ என நினைத்து விட வேண்டாம். அத்தனை விளக்கங்களும் தமிழில் உள்ளன. இனி புத்தகத்தில் எழுதியுள்ளதைப் பற்றி… பானையைப் பார்க்கிறோம்; பானை என்பதாகவே நம் கண்ணுக்குப் புலப்படுகிறது. தங்கத்திலான நகையைப் பார்க்கிறோம்; நகை தான் நம் கண்ணுக்குப் புலப்படுகிறது. வானத்தைப் பார்க்கிறோம்; நீல நிறமாகத் தெரிகிறது. உண்மை என்ன… பானையைச் செய்ய பயன்படுத்தப்பட்ட களிமண் தான் பானையில் உள்ளது; நகையைச் செய்ய பயன்படும் தங்கம் தான், […]

Read more

ஸ்ரீமந் நாராயணீயம் பாகம் – 1

ஸ்ரீமந் நாராயணீயம் பாகம் – 1, ஆசிரியர் : பதிப்பக வெளியீடு, வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.290. சரணாகதி என்பதே ஸ்ரீமந் நாராயணீயத்தின் சாராம்சம். குருவை பிடித்த வாதநோயை தனக்கு மாற்றி தன்னை வருத்திக் கொண்ட நாராயண பட்டத்திரி அந்த நோயை குணமாக்குமாறு குருவாயூரப்பனை வேண்டுகிறார். 1,034 ஸ்லோகங்கள் இயற்றி பாடப் பாட குருவாயூரப்பன் சரியென்று தலையாட்டியதாக வரலாறு. குழந்தைகளை கண்ணே, மணியே, என் செல்லமே… என்று கொஞ்சி கொஞ்சி சீராட்டி பாராட்டுவதைப் போலிருக்கிறது ஸ்ரீமந் நாராயணீயம். பெருமாளின் ஒவ்வொரு […]

Read more

சமூகவியல் பார்வையில் சிலப்பதிகாரம்

சமூகவியல் பார்வையில் சிலப்பதிகாரம், க.ப.அறவாணன், வெளியீடு: தமிழ்க் கோட்டம், விலைரூ.100 சிலப்பதிகாரத்தை சமூகவியல் பார்வையில் நோக்கிக் காப்பியத்தின் பாடுபொருள்களில் பொதிந்துள்ள, பொது வாசிப்புக்குப் புலப்படாத ஊடு பொருட்களைக் கூர்மையாக ஆய்வு செய்து பதிவு செய்யப்பட்டுள்ள நுால். பழமையான இலக்கியப் படைப்புகளுக்கு மாற்றாகக் காப்பியம் படைத்தல், சோதிடத்தை மீறுதல், அரச மரபினர் துறவு கொள்ளுதல், திங்களையும் ஞாயிற்றையும் போற்றுதல், தமிழில் மடல் வரைதல், பெண் துறவி உருவாக்கம், வஞ்சினம் கூறி நிறைவேற்றும் முதல் பெண், பெண்ணுக்கு முதல் கோவில், பரத்தைக்கு மகப்பேறு போன்றவற்றை மாறுபட்ட நோக்கில் […]

Read more

செத்தை

செத்தை,  வீரபாண்டியன், எழுத்து, பக்.144,  விலை ரூ.110.  சமூகத்தின் எளிய மனிதர்களின் வாழ்வையும் அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும் மையப்படுத்தி எழுதப்பட்ட 10 சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல்.  தனிப்பட்ட தேர்ந்த களங்களை, இதுவரை யாராலும் பதிவுசெய்யப்படாத அடித்தட்டு மக்களை கதை மாந்தர்களாகக் கொண்டு அம்மக்களின் அடிமனதின் அடுக்குகளிலிருந்து வெளிப்படும் உணர்வுகளையும், அவர்களின் கையறு நிலையையும் காட்சிப்படுத்துகிறது “செத்தை’.  மிக்கி மவுஸ், ரேபிட் போன்று பொம்மை உடைகளை அணிந்துகொண்டு, கொண்டாட்ட நிகழ்வுகளில் விருந்தினர்களை மகிழ்விக்கும் வேலையை பகுதி நேரமாகப் பார்க்கும் கல்லூரி இளைஞர்களின் வாழ்க்கைச் சூழலையும், […]

Read more

பாரதியாரைப் பற்றி புதிய பார்வை!

பாரதியாரைப் பற்றி புதிய பார்வை!, ஜி.சுப்பிரமணியன், மணிமேகலை பிரசுரம், விலைரூ.155. விடுதலைக் குயில் பாரதி குறித்த அரிய செய்திகளை விரித்துச் செல்லும் நுால். பாரதியின் பெருமித உணர்ச்சி, கவித்துவ மேன்மை, இசை அறிவு, நட்பு போற்றும் உருக்கம் எனப் பல்வேறு செய்திகளை விறுவிறுப்பு குறையாமல் சுவைபடச் சொல்கிறார் ஆசிரியர். காந்திமதிநாதனுடன் விளைந்த கவிதைப் போர், கிருஷ்ணசாமி செட்டியார், குவளைக்கண்ணனுடன் பாரதிக்கு இருந்த நெருக்கம், வ.ரா.,வின் பற்றும் ஈடுபாடும், சுதேசமித்திரன், இந்தியா நாளிதழ்கள் குறித்த செய்திகள், பாரதியின் இறுதிச் சொற்பொழிவு, ச.து.சி.யோகியார் பாரதியிடம் கொண்டிருந்த அன்பு […]

Read more
1 2 3 9