பச்சைப்புடவைக்காரியின் கொத்தடிமை

பச்சைப்புடவைக்காரியின் கொத்தடிமை, வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.340 ‘பச்சைப் புடவைக்காரி’ என உச்சரிக்கும்போதே தெய்வத்துடனான நெருக்கமான உறவு புலப்படுகிறது. மனிதனுக்கு மனசாட்சி எப்படி உள்ளுக்குள்ளேயே இருந்து நல்லது, கெட்டதைப் பகுத்தாய்ந்து வழி நடத்துமோ, அவ்வாறு பச்சைப் புடவைக்காரியான அன்னை மீனாட்சி உறுதுணையாக இருந்திருக்கிறார் என்பதை நுால் முழுதும் பல்வேறு சம்பவங்களை மேற்கோள் காட்டி, அலுப்பு ஏற்படாவண்ணம் விவரித்திருக்கிறார் வரலொட்டி ரெங்கசாமி. ஒவ்வொரு மனிதனுக்கும் சொந்த வாழ்விலும், மற்றவர்கள் வாழ்விலும் நிகழும் சில சம்பவங்கள், கடவுள் குறித்த சந்தேகத்தைக் கிளப்புவது […]

Read more

நாளாம் நாளாம் திருநாளாம்

நாளாம் நாளாம் திருநாளாம், வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.280. அகங்காரத்தில் ஆரம்பிப்பதாக நினைத்த எழுத்தாளருக்கு அள்ளித்தரும் அன்னையின் வரம் அந்த நிமிடமே கிடைத்தபோது மனம் மைசூர்ப்பாகாய் கரைந்துவிட்டது. துணையாக கண்ணீர் சேர்ந்து உப்புச்சீடையாக மாறிவிட்டது. சில நேரங்களில் யாரும் தான் கேட்கமாட்டார்களே என நிஜமான, ‘மைண்ட் வாய்சில்’ மனசுக்குள்ளேயே பேசிய நிகழ்வு நடந்திருக்கும். உடனடியாக நிறைவேறும் போது அதை அனுபவிக்க முடியாமல் மனம் தடுமாறும். இங்கும் அப்படித்தான் அன்னையின் அன்பை நினைந்து மனம் கரைந்து உப்புச்சுவடுகளின் வழியே அப்பனை […]

Read more

நெஞ்சினில் ரஞ்சனி

நெஞ்சினில் ரஞ்சனி, வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.210. ‘வானமழை நீ எனக்கு’ நாவலில் அழகும் அறிவும் ஐஸ்வர்யமும் நிறைந்த ரஞ்சனியை பின்தொடர்ந்த ஆசிரியர், நான்கு வார சந்திப்பின் மூலம் அவளை நிரந்தர மாக பிரியும் நிலைக்கு தள்ளப்படுவார். அவள் அளித்த அன்புப் பரிசாக கைக்கடிகாரத்தை பார்த்து காலத்தை ஓட்டும் போது, திடீரென அவள் மீண்டும் வருகிறாள். மதுரை மீனாட்சி கோவிலில் ஒயிலாக நடந்து எழிலாக வளைய வந்து தன்னை ஆட்கொண்ட அந்த பேரழகு, இந்த நாவலில் நடை பயிலாமல் […]

Read more

ஒரு கதைசொல்லியின் கதை

ஒரு கதைசொல்லியின் கதை, வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.230. கதை சொன்னா அன்பும் நம்பிக்கையும் வந்துருமா… ஏன் சின்ன குழந்தையா இருக்கறப்போ அம்மா நிலாவை காட்டி கதை சொல்லி தானே சோறு ஊட்டுனாங்க. அப்போ நம்பினோம். மனமும் உடலும் ரணப்பட்டு கிடக்கும் போது, யாராவது பேசுவாங்களானு ஏங்குற மனசுக்கு கதை சொன்னா பிடிக்கும். அதை சிவா செய்து கொண்டிருக்கிறான். வேண்டாமென்று உதறித் தள்ளிய காதலி, குண்டடிபட்டு கிடக்கும் போதும் அன்பு மாறாமல் சிவாவால் பாதுகாக்க முடிகிறதென்றால், அந்த காதல் […]

Read more

நம்மாழ்வார்

நம்மாழ்வார், வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.230. கயிற்றில் வித்தை காட்டும் கழைக் கூத்தாடி போல, எழுத்தில் வித்தை காட்டி நம்மை ஆட்டுவிப்பவர் நுாலாசிரியர் வரலொட்டி ரெங்கசாமி. அவர் வார்த்தைகளை படித்துக் கொண்டு வேறெதையும் சிந்திக்க முடியாது. அந்த வார்த்தைகள் படமாக மனக் கண்ணில் விரிந்து சிரிக்க வைத்து, சிந்திக்க வைத்து, அழ வைத்து நாடகமாடும். இது, அவரது வார்த்தைகளுக்கு கிடைத்த வரம் என்றே சொல்லலாம். சான்றின் ஒரு பருக்கையாக கிஸ்னா… என் கூட்டுக்காரா… ஆச்சார்யா கதாபாத்திரங்களைச் சொல்லலாம். அழகனை, […]

Read more

நிலவென வாராயோ!

நிலவென வாராயோ!,  வரலொட்டி ரெங்கசாமி,  தாமரை பிரதர்ஸ், விலை ரூ.300. அவளன்றி ஓர் அணுவும் அசையாது என்பதை தான் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை விவரித்துக் கொண்டு செல்கிறார், நுாலாசிரியர் வரலொட்டி ரெங்கசாமி. கதை மாந்தர்களின் பெயர்கள் அனைத்தும், அன்னையின் பல்வேறு பெயர்களைத் தாங்கியே நடைபயணிக்கிறது. காதல், பாசம், அன்பு, நேசம், கோபம், வேதனை, கசப்பு கலந்த உணர்வு குவியலாய் எழுத்துக்கள் படைக்கப்பட்டுள்ளது சிறப்பு.  வாழ்வின் எதார்த்தங்களை எழுத்தோட்டமாய் கொண்டு சென்று வெற்றி பெற்றிருக்கிறார் ஆசிரியர். புத்தகம் முழுதும் அன்னையை தவழவிட்டு,உலவவிட்டு, ‘நிலவென வாராயோ’ […]

Read more