நிலவென வாராயோ!
நிலவென வாராயோ!, வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ், விலை ரூ.300.
அவளன்றி ஓர் அணுவும் அசையாது என்பதை தான் வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை விவரித்துக் கொண்டு செல்கிறார், நுாலாசிரியர் வரலொட்டி ரெங்கசாமி. கதை மாந்தர்களின் பெயர்கள் அனைத்தும், அன்னையின் பல்வேறு பெயர்களைத் தாங்கியே நடைபயணிக்கிறது.
காதல், பாசம், அன்பு, நேசம், கோபம், வேதனை, கசப்பு கலந்த உணர்வு குவியலாய் எழுத்துக்கள் படைக்கப்பட்டுள்ளது சிறப்பு. வாழ்வின் எதார்த்தங்களை எழுத்தோட்டமாய் கொண்டு சென்று வெற்றி பெற்றிருக்கிறார் ஆசிரியர். புத்தகம் முழுதும் அன்னையை தவழவிட்டு,உலவவிட்டு, ‘நிலவென வாராயோ’ என, பூமியில் நடக்கும் அன்னையின் அன்பு கலந்த அதிசயங்களை நமக்குள் உணர்த்தி இருக்கிறார்.
நன்றி தினமலர்.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818