மனசெல்லாம்

மனசெல்லாம், கா.ந.கல்யாணசுந்தரம், வாசகன் பதிப்பகம், பக். 96, விலை 80ரூ. கொக்கும் தூண்டிலும் அருகருகே தடுமாறும் மீன்கள் – என்ற ஹைக்கூ கவிதையில் உள்ள சிந்தனை ஒன்றுபோதும், சமூகத்தின் அதிகார வர்க்கத்தின் நிலையையும் அப்பாவி மக்களின் தடுமாறும் நிலையையும் எடுத்துக்காட்டு. அன்பு, சமூகம், உலகம், ஆன்மீகம், அறிவியல் என்று பலதரப்பட்ட சிந்தனைகளின் வெளிப்பாடு இக்கவிதைத் தொகுப்பு. நன்றி: குமுதம், 22/3/2017.

Read more

சிந்தனைகளே நம்மை செதுக்குகின்றன

சிந்தனைகளே நம்மை செதுக்குகின்றன, த. இராமலிங்கம், கண்ணதாசன் பதிப்பகம், பக். 180, விலை 130ரூ. வாழ்க்கையை ஆடம்பரத்தாலும் இலவசங்களாலும் தொலைத்துவிட்ட பலருக்கு, அவர்களின் வாழ்வை முன்னேற்றும் விதமாக மனிதர்களின் சிந்தனைகளைச் செதுக்கித் தரும் நூல். படிப்பவர்களின் வாழ்வு முன்னேற்றம் காணும் என்பது உறுதி. நன்றி: குமுதம், 22/3/2017.

Read more

மாண்புமிகு வள்ளுவம்

மாண்புமிகு வள்ளுவம், க. அன்பழகன், கே.ஜி.பப்ளிகேஷன்ஸ், பக். 101, விலை 90ரூ. உலகப் பொதுமறையாம் திருக்குறளை ஒன்பது வகையான பொருண்மைகளில் ஆராய்ந்து, விளக்கம் தரும் நூல். திரும்பத் திரும்ப வாசித்தால் புதுப்புது பொருள் தரும் தன்மை கொண்ட திருக்குறளுக்கு, நூலாசிரியரின் விளக்கங்கள் மேலும் ஒரு புது விளக்கத்தைத் தருகிறது. உரையாசிரியர்களின் நோக்கில் நின்று குடும்ப உறவுகள் குறித்த விளக்கம் சிறப்பு. நன்றி: குமுதம், 22/3/2017.

Read more

ஆச்சரியம் நிறைந்த அமேசான் காடுகள்

ஆச்சரியம் நிறைந்த அமேசான் காடுகள், குன்றில் குமார், குறிஞ்சி, பக். 176, விலை 150ரூ. அமேசான் காட்டிற்குள் போகாதவர்கள், போக முடியாதவர்கள் இந்நூலைப் படித்தால் அதன் தன்மையை ஓரளவிற்கேனும் உணர முடியும். விசித்திரமான விலங்குகள், ஆறுகள், பாம்புகள், பழங்குடிகள் என்று நம் கண்முன்காட்டி, காட்டைப் பற்றிய ஒரு ஆய்வையும் மேற்கொண்டுள்ளார் நூலாசிரியர். கையை வைத்தால் சிலிர்ப்பூட்டும் ஆறும் இங்குண்டு, நொடியில் கையைப் பொசுக்கிவிடும் கொதிக்கும் ஆறுகளும் இங்குண்டு என்பது ஆச்சரியத் தகவல். நன்றி: குமுதம், 22/3/2017.

Read more

எண்ணும் எழுத்தும்

எண்ணும் எழுத்தும், பிருந்தா சாரதி, படி வெளியீடு, பக். 88, விலை 70ரூ. எண்களுக்குள் நுழைந்து வாழ்க்கையைத் தேடும் உத்தி. ஒன்றிலிருந்து இன்னொன்றைப் பிரித்தும் இன்னொன்றைச் சேர்த்தும் காணும் வாழ்வியல் தத்துவம் இக்கவிதைகளுக்குள் உட்புகுந்து பயணிக்கின்றன. ஒரே சிகரத்தில் இருந்து உருண்டு வந்து இரண்டான கூழாங்கற்களின் சந்திப்பும், எரிந்து கொண்டு இருக்கும் இரண்டு ஊதுவத்திகளின் புகை ஒன்றாய்க் கலப்பதும், வெற்றிடத்தில் ஒன்றைத் தேடுவதும் என வாழ்வின் பல கோணங்கள் ஆராயப்படம் களமாக இக்கவிதைகள் அலசப்படுகின்றன. நன்றி: குமுதம், 22/3/2017.

Read more

சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள்

சுகந்தி சுப்ரமணியன் படைப்புகள், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 330ரூ. எழுத்தாளர் சுப்ரபாரதி மணியனின் மனைவி சுகந்தி. சிற்நத கவிஞரான அவர், கவிதைகளுடன் சிறுகதைகளும் எழுதினார். அற்புதக் கவிஞராக புகழ் பெற்ற சுகந்தி திடீரென மனநிலை பாதிக்கப்பட்டார். அதன் பிறகும் கவிதைகள் எழுதினார். 11/2/2009ல் காலமானார். அவர் முன்பு எழுதிய ஆழமான கவிதைகளும், பிற்காலத்தில் எழுதிய கவிதைகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. சுகந்தியின் கணவர் சுப்ரபாரதிமணியன் இந்நூலை தொகுத்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 23/3/2017

Read more

தாம்பத்திய வழிகாட்டி அந்தப்புரம்

தாம்பத்திய வழிகாட்டி அந்தப்புரம், விகடன் பிரசுரம், விலை 125ரூ. புதிதாக மணம் செய்து கொண்டவர்கள், மணம் செய்யப்போகிறவர்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி பிரபல டாக்டர் டி. நாராயண ரெட்டி இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். கேள்வி – பதில் பகுதியும் அடங்கியுள்ளது. ஷ்யாம் வரைந்துள்ள படங்கள் கண்ணைக் கவருகின்றன. நன்றி: தினத்தந்தி, 23/3/2017   —-   இரா. இரவியின் படைப்புலகம், பேராசிரியர் இரா. மோகன், வானதி பதிப்பகம், விலை 70ரூ. இரா.இரவி எழுதிய 10 நூல்களுக்கு இரா. மோகன் எழுதிய அணிந்துரைகள் […]

Read more

நெஞ்சில் நிறைந்த ஏ.என்.

நெஞ்சில் நிறைந்த ஏ.என்., நன்னூல் அகம், விலை 160ரூ. சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் இயக்குனராகப் பணியாற்றிய ஏ. நடராஜன், எல்லோராலும் அன்புடன் “ஏ.என்.” என்று அழைக்கப்பட்டவர். எழுத்தாளர், இசை ஆர்வம் மிக்கவர், சொற்பொழிவாளர் என்று பன்முகம் கொண்டவர். அவரால் வாழ்க்கையில் முன்னேறியவர்கள் ஏராளம். நடராஜனின் சிறப்புகளை பல்வேறு கோணங்களில் பாராட்டியுள்ள பல வி.ஐ.பி.கள் எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் அடங்கியுள்ளன. ஏ. நடராஜனுடன் நெருங்கிப் பழகியவரான நல்லிகுப்புசாமி செட்டியார் இந்த நூலை மிகச் சிறப்பாகத் தொகுத்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 23/3/2017

Read more

ஐஎஸ்ஐஎஸ் கொலைகாரன் பேட்டை

ஐஎஸ்ஐஎஸ் கொலைகாரன் பேட்டை, பா. ராகவன், கிழக்கு பதிப்பகம், விலை 140ரூ. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் குறித்து எழுத்தாளர் பா. ராகவன் எழுதிய நூல். அல்கொய்தாவுக்கு பிறகு சர்வதேச சமூகத்திற்கு பெரும் சவாலாக இருக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் தோற்றம், அதன் செயல்பாடுகள் குறித்து விரிவாக எழுதியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 23/3/2017.   —-   திருவாசகம், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 200ரூ. மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்தின் மூலமும் உரையும் அடங்கிய நூல். உடலையும் உள்ளத்தையும் ஒருசேர உருக்குகின்ற திருவாசத்திற்கு உரையாசிரியர் தமிழ்ப்பிரியன் எளிய வகையில் விளக்கம் […]

Read more

தொல்காப்பியம் முதல் ஐக்கூ வரை

தொல்காப்பியம் முதல் ஐக்கூ வரை, துரை.குணசேகரன்,  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக்.148. விலை ரூ.140. இலக்கியப் பணிகள் (மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை), இலக்கணம் (தொல்காப்பியம்), யாப்பிலக்கணம்(யாப்பருங்கலக்காரிகை), அகப்புற நூல்கள் (கலித்தொகை, புறநானூறு), அறநூல்கள் (நான்மணிக்கடிகை, ஏலாதி), பதிப்புப் பணிகள் (ச.மெய்யப்பன்), வள்ளுவம் (மூன்று கட்டுரைகள்), ஐக்கூ (கவிதை) எனப் பல்வேறு துறைகளில் அமைந்த, பல்வேறு கருத்தரங்களில் வாசிக்கப்பட்ட பன்னிரு ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் இலக்கியப் பணிகள், தொல்காப்பிய மொழிமரபு, கலித்தொகையின் கருத்தும் காட்சியும், வள்ளுவத்தில் காணப்படும் ‘உடைமை 39‘, பண்புகள், நான்மணிக்கடிகை […]

Read more
1 2 3 8