மாண்புமிகு வள்ளுவம்
மாண்புமிகு வள்ளுவம், க. அன்பழகன், கே.ஜி.பப்ளிகேஷன்ஸ், பக். 101, விலை 90ரூ.
உலகப் பொதுமறையாம் திருக்குறளை ஒன்பது வகையான பொருண்மைகளில் ஆராய்ந்து, விளக்கம் தரும் நூல். திரும்பத் திரும்ப வாசித்தால் புதுப்புது பொருள் தரும் தன்மை கொண்ட திருக்குறளுக்கு, நூலாசிரியரின் விளக்கங்கள் மேலும் ஒரு புது விளக்கத்தைத் தருகிறது.
உரையாசிரியர்களின் நோக்கில் நின்று குடும்ப உறவுகள் குறித்த விளக்கம் சிறப்பு.
நன்றி: குமுதம், 22/3/2017.