வீட்டு வைத்தியர்

வீட்டு வைத்தியர், டாக்டர் தி.சே.செள.ராஜன், சந்தியா பதிப்பக வெளியீடு, விலை: ரூ.390 ராஜாஜியின் அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராகப் பணியாற்றிய டாக்டர் தி.சே.செள.ராஜன் சுதந்திரப் போராட்ட வீரர். சுதந்திரப் போராட்டத்துக்காகச் சிறை சென்றிருந்த காலகட்டத்தில், பல்வேறு சிரமங்களுக்கு இடையே அவர் எழுதிய புத்தகம் இது. முதற்பதிப்பு வெளியானது 1945-ல். அவருடன் சிறையில் இருந்த ராஜாஜியே இந்தப் புத்தகத்துக்குச் சுவையான முன்னுரை எழுதியிருக்கிறார். உடல் பாகங்கள் தொடர்பான விளக்கங்கள் தொடங்கி, பல்வேறு நோய்கள் தொடர்பான அறிகுறிகள், நோய்க்கான எளிய மருத்துவ முறைகள், சுகாதார மேம்பாட்டுக்கான எளிய […]

Read more

பெரியார் இன்றும் என்றும்

பெரியார் இன்றும் என்றும், (பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்), விடியல் பதிப்பகம், விலை: ரூ. 300. பெரியார் தன் வாழ்நாளில் எழுதிய கட்டுரைகள், தலையங்கங்கள், ஆற்றிய உரைகள் போன்றவற்றைப் படிக்க வேண்டுமென்றால் அதற்கு ஒரு ஆயுள் வேண்டும்! பெரியார் எழுத்துக்களின் தொகுப்புகள் அனைத்தையும் படிக்க முடியாதவர்களுக்கு இந்தப் புத்தகத்தை நிச்சயம் பரிந்துரைக்கலாம். பெரியார் தொட்ட எல்லா விஷயங்களையும் உள்ளடக்கிய பெருந்தொகுதி! மிகவும் மலிவான விலை என்பது கூடுதல் வாசகர்களை ஈர்க்கும் நன்றி: தமிழ் இந்து, 18/1/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை […]

Read more

அயோத்திதாசர்

அயோத்திதாசர், டி.தருமராஜ், கிழக்கு பதிப்பகம், விலை 300ரூ. 1845-ல் பிறக்கும் காத்தவராயன் எந்தக் காலகட்டத்தில் அயோத்திதாசர் ஆகிறார்? 1892 சென்னை மஹாஜன சபைக் கூட்டத்துக்குப் பிறகு, பிராமணியத்துக்கு எதிராகவும் இந்து அடையாளத்துக்கு வெளியிலும் அவருடைய புதிய பயணம் தொடங்குகிறது என்பது தெரிகிறது. அதற்கு முன் அவருடைய வாழ்க்கை எப்படி இருந்தது, என்னவாக இருந்தார்? அயோத்திதாசரைப் பற்றிய விவரங்கள் எதுவாக இருந்தாலும் அவர் 1907 முதலாக 1914 வரை நடத்திய ‘தமிழன்’ பத்திரிகையின் வாயிலாக நமக்குக் கிடைப்பவைதான். அதில் அவர் தனது வாழ்வைப் பற்றி என்ன […]

Read more

சிறுகோட்டுப் பெரும்பழம்

சிறுகோட்டுப் பெரும்பழம், விக்ரமாதித்யனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள், வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ், விலை: ரூ.250. பாரதியார் நூற்றாண்டில் அன்னம் வெளியிட்ட’ ஆகாசம் நீல நிறம்’ தொகுதி மூலம் புதுக்கவிதையில் அழுத்தமான தடத்தைப் பதிக்கத் தொடங்கியவர் விக்ரமாதித்யன். கவிதையையே வாழ்வாகவும் கவிஞர் என்பதையே பிரதான அடையாளமாகவும் கொண்ட விக்ரமாதித்யனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தான்’ சிறுகோட்டுப் பெரும்பழம்’. எளிய வாசகர்களும் தங்கள் வாழ்வின் பல்வேறு பருவங்கள் மற்றும் அனுபவங்களூடாக நினைவில் வைத்துக்கொள்ளும் அழகிய கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. சாதாரண மக்களின் காதல், பிரிவு, ஏக்கம், இல்லாமை, நம்பிக்கை, அவநம்பிக்கை […]

Read more

குட்டிரேவதி கவிதைகள்

குட்டிரேவதி கவிதைகள், எழுத்து பிரசுரம், தொகுதி 1, விலை 599ரூ, தொகுதி 2,விலை 450ரூ. கவிதைக்குள் எப்படி வந்தீர்கள்? அப்பா இளம் பருவத்திலேயே தமிழ் மொழி மீது உண்டாக்கிய ஆர்வம்தான் காரணம். நிறைய சங்கப் பாடல்களை மனனமாக அவர் எனக்குச் சொல்லிக் காட்டுவார். இதனால், எனக்குத் தொடர் வாசிப்புப் பழக்கம் ஏற்பட்டது. இதற்குத் தீனிபோடும் வகையில் பழைய புத்தகக் கடைகளிலிலிருந்து எனக்கான புத்தகங்களை அப்பா தேடித் தேடி வாங்கிவந்து தருவார். நான் படித்த சித்த மருத்துவத்தில் தமிழ்மொழிப் பாடத்திட்டம் ஒரு முக்கியமான காலகட்டத்தின் சொற்களை […]

Read more

தமிழரின் தாவர வழக்காறுகள்

தமிழரின் தாவர வழக்காறுகள், பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன், உயிர் பதிப்பகம் வெளியீடு, விலை 210ரூ. தமிழக நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளின் முன்னோடியும் மார்க்சிய அறிஞருமான நா. வானமாமலையின் மாணாக்கர்களில் ஒருவர் பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிய சிவசுப்பிரமணியன், மார்க்சியக் கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழ்ச் சமூகம், பண்பாடு, நாட்டார் வழக்காறு ஆகியவை சார்ந்து ஆய்வுமேற்கொண்டு, அத்துறைகளில் புது வெளிச்சம் பாய்ச்சிக்கொண்டிருப்பவர்; கோட்பாடுகளின் பெயரைச் சொல்லி அச்சுறுத்தாமல், தான் கண்டடைந்த மக்கள் வரலாற்றை எளிமையான மொழியில் சொல்லிச் செல்பவர். 78 […]

Read more

உலகத் தமிழ்க் களஞ்சியம்

உலகத் தமிழ்க் களஞ்சியம், (3 தொகுதிகள்), உமா பதிப்பக வெளியீடு, விலை: ரூ.3,000 தமிழ், தமிழர்களை முதன்மைப்படுத்தி தமிழ்ப் பண்பாடு, கலை, இலக்கியம், ஆளுமை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியிருக்கும் கலைக்களஞ்சியம் இது. 900 இலக்கணக் குறிப்புகள், 700 தாவரங்களைப் பற்றிய குறிப்புகள், 100 ஆறுகளைப் பற்றிய விவரங்கள், 800 இதழ்களைப் பற்றிய குறிப்புகள் என 39 பிரிவுகளில் 16,000-க்கும் மேற்பட்ட செய்திகளை உள்ளடக்கியிருக்கும் இந்நூல் 2,500 பக்கங்களில் வெளியாகியிருக்கிறது. நன்றி: தமிழ் இந்து, 22-1-2020. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000027683.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

மஸ்னவி

மஸ்னவி, ஜலாலுத்தீன் ரூமி, தமிழில்: நரியம்பட்டு எம்.ஏ.ஸலாம், ஃபஹீமிய்யா ட்ரஸ்ட் வெளியீடு, மொத்த விலை: ரூ. 3,700 (7 தொகுதிகள்) உலகின் கவிதைப் பேரிலக்கியங்களுள் பாரசீக சூஃபி ஞானி ஜலாலுத்தீன் ரூமியின் ‘மஸ்னவி’யும் ஒன்று. 27,000 வரிகளில் ஆறு பாகங்களாக வெளியான கவிதைப் பொக்கிஷம் இது. கி.பி. 1258-ல் எழுதத் தொடங்கி 1273-ம் ஆண்டு தனது மரணம் வரை எழுதிய நூல் ‘மஸ்னவி’. இந்த நூலை ஏழு தொகுதிகளாக நரியம்பட்டு எம்.ஏ.ஸலாம் மொழிபெயர்த்திருக்கிறார். ரூமியின் ‘மஸ்னவி’ பெருந்தொகுப்பு தமிழ் இலக்கிய உலகம் கொண்டாட வேண்டிய […]

Read more

என்றும் காந்தி

என்றும் காந்தி, ஆசை, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.250 சென்னைப் புத்தகக்காட்சியில் சூடாக விற்பனையாகும் புத்தகங்களுள் ஆசை எழுதிய ‘என்றும் காந்தி’ நூலும் ஒன்று. காந்தியின் 150-வது பிறந்த ஆண்டைக் கொண்டாடும் விதமாக வெளிவந்த இந்தப் புத்தகம் அனைத்துத் தரப்பினரும் காந்தியை அறிந்துகொள்ளும் பொருட்டு எளிமையான நடையில் எழுதப்பட்ட நூல். காந்திக்குள் நுழைய விரும்புபவர்களுக்கு இந்நூல் ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்.‘ நன்றி: தமிழ் இந்து, 21-1-2020. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029787.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

சுவேதாச்’வதர உபநிஷத்

சுவேதாச்’வதர உபநிஷத், பேரா.க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக். 280, விலை 350ரூ. ‘சுவேதம்’ என்றால் வெண்மை; துாய்மையையும் குறிக்கும். ‘அச்வதரம்’ என்பது குதிரை இனம். ஐவகை பிராணன்களையும் – புலன்களையும் குதிரை உவமையால் காட்டி வேதாந்த ரகசியத்தை ப்ரம்மம் மூலம் கூறுகின்றன. அனந்தம், சத்தியம், ஞானம் பற்றிய ரகசிய கேள்விக்கு விடை இப்புத்தகம் என்றால் மிகையாகாது. இறவா நிலைக்கு இட்டுச் செல்லும் வேதாந்த ரகசியம் இந்நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. – த.பாலாஜி நன்றி: தினமலர், 19/1/2020 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more
1 2 3 6