வீட்டு வைத்தியர்
வீட்டு வைத்தியர், டாக்டர் தி.சே.செள.ராஜன், சந்தியா பதிப்பக வெளியீடு, விலை: ரூ.390
ராஜாஜியின் அமைச்சரவையில் சுகாதாரத் துறை அமைச்சராகப் பணியாற்றிய டாக்டர் தி.சே.செள.ராஜன் சுதந்திரப் போராட்ட வீரர். சுதந்திரப் போராட்டத்துக்காகச் சிறை சென்றிருந்த காலகட்டத்தில், பல்வேறு சிரமங்களுக்கு இடையே அவர் எழுதிய புத்தகம் இது.
முதற்பதிப்பு வெளியானது 1945-ல். அவருடன் சிறையில் இருந்த ராஜாஜியே இந்தப் புத்தகத்துக்குச் சுவையான முன்னுரை எழுதியிருக்கிறார். உடல் பாகங்கள் தொடர்பான விளக்கங்கள் தொடங்கி, பல்வேறு நோய்கள் தொடர்பான அறிகுறிகள், நோய்க்கான எளிய மருத்துவ முறைகள், சுகாதார மேம்பாட்டுக்கான எளிய யோசனைகள் என்று மிக முக்கியமான மருத்துவ வழிகாட்டி என்றே இப்புத்தகத்தைச் சொல்லலாம். மக்கள், குறிப்பாக கிராமத்து மக்களின் வாழ்வியலை நன்கு புரிந்துகொண்ட மருத்துவரின் நிஜமான அக்கறையுடன் எழுதப்பட்ட புத்தகம் இது.
நன்றி: தமிழ் இந்து, 14/1/2020.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000017120.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818