உதிரிலைகள்

உதிரிலைகள், ஹரணி, எழுத்து, விலை 80ரூ. காற்றில் சலசலக்கும் இலைகளாய் இல்லாமல், ஒவ்வொன்றாகத் தனித்தனியே உள்ளத்தில் உதிர்ந்து உருகச் செய்யும் அறுபத்தேழு கவிதைகள். வாசிக்க, யோசிக்க, நேசிக்க, பெருமூச்சுவிட்டு சுவாசிக்க என அனைத்துக்குமான கவிதைகள். நன்றி: குமுதம், 6/6/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026785.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818 “

Read more

உரைவேந்தர் ஔவை துரைசாமி

உரைவேந்தர் ஔவை துரைசாமி, பேராசிரியர் நிர்மலா மோகன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், விலை 100ரூ. ஓலைச் சுவடிகளில் உறங்கிய தமிழை தேடி எடுத்துத் தெsளிவுரை எழுதி, உரைநடையாக்கி உலகறியச் செய்த அக்காலத்து இலக்கியக் கர்த்தாக்களுள் தனித்திறன் பெற்று உரைவேந்தர் எனப் போற்றப்பட்ட ஔவை துரைசாமியின் உரைநயம் உரைக்கும் புத்தகம். சுவைத்துணர வேண்டிய தமிழ்ச்சுவை. நன்றி: குமுதம், 6/6/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சங்கப் பனுவல்கள்

சங்கப் பனுவல்கள், சுஜா சுயம்பு, சந்தியா பதிப்பகம், விலை 135ரூ. சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் குறிப்பிடும் திணைக்கோட்பாடு சார்ந்த ஒன்பது கட்டுரைகள். சில சொற்கள் காலமாறுபாட்டில் எப்படிப் பொருள் மாற்றம் பெற்றன என்பதை விளக்கும் கட்டுரை வித்தியாசமானது. சங்ககால பண்பாட்டையும் அறிய உதவும் நூல். நன்றி: குமுதம், 6/6/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026982.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பாண்டித்துரை

பாண்டித்துரை, எஸ்.பிரபாகரன், காவ்யா, விலை 400ரூ. கற்பனையும் நிஜமும் கலந்த வரலாற்றுப் புதினம். முதல் உலகப்போர் நடந்த காலத்தில் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய கற்பனை வீரனின் கதை நிஜப் போர்க்களத்தில் நகர்கிறது. படிக்கப்படிக்க போர்க்காலத்தில் பூத்திடும் அன்பு, தியாகம், கருணை, வீரம், காதல் என்று அத்தனையும் நெகிழ்வாக மனதுக்குள் மலர்ந்து கனக்கிறது. நன்றி: குமுதம், 6/6/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026784.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

பி.சி.டாக்டர்

பி.சி.டாக்டர், தே.ஜீவநேசன், கண்ணதாசன் பதிப்பகம், விலை 130ரூ. இன்று கணிப்பொறி இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். சின்னச் சின்ன இருமல், தும்மலுக்கு வீட்டு வைத்தியம் செய்துகொள்வதுபோல அவரவர் வீட்டக் கணினியில் ஏற்படும் சிறுசிறு பழுதுகளை தாங்களே சரிசெய்து கொள்ள வழிகாட்டும் நூல். நன்றி: குமுதம், 6/6/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026676.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

எம்.ஜி.ஆர். அரசியல்பாதை

எம்.ஜி.ஆர். அரசியல்பாதை, துரை கருணா, எம்.ஜி.ஆர். பாசறை, விலை 160ரூ. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நாடக உலகில் நடிக்கத் தொடங்கி, நாட்டு மக்கள் உள்ளத்தில் இடம்பிடித்து அரசியலில் ஈடுபட்டு ஆட்சியில் அமர்ந்ததுவரை நடந்த பல்வேறு அபூர்வமான விஷயங்களின் தொகுப்பு. எம்.ஜி.ஆரின் அரசியல் வரலாற்றை அறிந்திட உதவும் வரலாற்றுப் பெட்டகம். நன்றி: குமுதம், 6/6/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026787.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818  

Read more

சம்பளத்திற்கான வருமான வரிச்சட்டம்

சம்பளத்திற்கான வருமான வரிச்சட்டம், மு.அங்கமுத்து, அனுராதா பதிப்பகம், பக்.144, விலை 100ரூ. சம்பள வருமானம் எப்படி கணக்கிடப்படுகிறது, வரி விலக்கு பெற்ற வருமானங்கள், அவற்றுக்கான கழிவுகள், வீட்டுச் சொத்திலிருந்து கிடைக்கும் வருமானம், டிவிடெண்டு, நிலம் மற்றும் வீடு போன்ற சொத்துகளை விற்கும்போது ஏற்படும் லாபத்தை கணக்கிடும் விபரம் உள்ளிட்டவற்றை எளிய நடையில் பட்டியலிட்டுக் கூறுகிறது இந்நுால். நன்றி: தினமலர், 22/7/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027079.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

உழைப்பே உயர்வு தரும்

உழைப்பே உயர்வு தரும், அருணோதயம் அருணன், அருணோதயம் வெளியீடு, பக்.172, விலை 100ரூ. முயற்சியால் முன்னேறியவர்கள், உழைப்பால் உயர்ந்தவர்கள் வாழ்க்கையை நேரில் பார்த்தோ, அவர்கள் வரலாற்றை நுால் வடிவாகப் படித்தோ, நாமும் அதுபோல் நடை போட வேண்டும்; வெற்றி பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். பேசி பேசியே வாழ்நாளை வீணடிக்காமல், ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாக்க வேண்டும் என்பதை நம் மனதில் ஆழமாக பதிவு செய்கிறது இந்நுால். நன்றி: தினமலர், 22/7/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் […]

Read more

வாய்மையே வெல்லும்: என் மாற்றுப் பார்வை

வாய்மையே வெல்லும்: என் மாற்றுப் பார்வை,  ப.சிதம்பரம், தமிழில்: ஆர். வெங்கடேஷ், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக்.304, விலை ரூ.300. ஜனநாயகத்தில் விமர்சனங்களைத் தவிர்க்க முடியாது. அந்தவகையில் தற்போதைய இந்திய அரசாங்கத்தின் செயல்பாடுகளை, பிரச்னைகளை, கொள்கைகளை விமர்சித்து எழுதி வரும் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பொருளாதார ஆளுமையுமான ப. சிதம்பரம், தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 2017-இல் வாரந்தோறும் எழுதிய 53 கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடங்கி ஜி.எஸ்டி வரை மத்திய பாஜக அரசின் நடவடிக்கை எவ்வளவு தவறானது;அது தனி […]

Read more

பாவை சந்திரனின் நல்ல நிலம் விமர்சனம்

பாவை சந்திரனின் நல்ல நிலம் விமர்சனம்,  கார்த்திகா வாசுதேவன், இந்த நாவலில் பல ஆண்கள் இருக்கிறார்கள், ஆனால், ஆளுமைத் திறன் மிக்கவர்களாகக் காட்டப்படுவது முற்று முழுதாக பெண்கள் மட்டுமே! ஆம், நல்ல நிலத்தை பெண்களே தம் இஷ்டப்படி அவரவர் இயல்புக்கு ஏற்ற வகையில் ஆள்கிறார்கள். அவர்களில் காமு நாயகி என்ற போதும் பிற கதாபாத்திரங்களையும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. அவரவர் கோணத்தில், அவரவர் நியாயங்களுடன் நாவலுக்கு சுவாரஸ்யம் கூட்டுகின்றனர்/ கீழைத்தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குக்கிராமத்துப் பெண் காமாட்சி, அவளுக்கு வரன் தேடி […]

Read more
1 2 3 8