நினைத்ததை நிறைவேற்றும் நரசிம்மர் தலங்கள்

நினைத்ததை நிறைவேற்றும் நரசிம்மர் தலங்கள், கே.சாய்குமார், விலை150ரூ. இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ள 406 நரசிம்மர் தலங்கள், 16 வைணவ தலங்கள் ஆகியவற்றுடன் அருகே இருக்கும் வழிபாட்டுதலங்கள் ஆகியவை பற்றிய முகவரி, அவற்றுக்கு செல்லும் வழி, ஒவ்வொரு கோவிலின் தலவரலாறு, அவை மலை மீது இருக்கிறது என்றால் வாகனத்தில் செல்ல முடியுமா? அல்லது எத்தனை படிகள் ஏற வேண்டும்? தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் ஆகிய அனைத்தையும் வரிசைப்படுத்தி கொடுத்து இருக்கிறார் ஆசிரியர். அத்துடன் வரை படங்கள், அழகிய வண்ணப்படங்கள் ஆகியவையும் இணைக்கப்பட்டுள்ளன. […]

Read more

வேர்ச்சொற் கட்டுரைகள்

வேர்ச்சொற் கட்டுரைகள், ஞா.தேவநேயப் பாவாணர், பூம்புகார் பதிப்பகம், விலை 450ரூ. தனது வாழ்நாள் முழுவதும் வேர்ச் சொல் ஆராய்ச்சிலேயே மூழ்கிக் கிடந்தவர் தேவேநேயப் பாவாணர். தமிழ் மொழியில் ஒவ்வொரு வேர்ச்சொல்லும் எவ்வாறு திரிகின்றன என்பதை தனது பல ஆண்டுகால ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்து அவற்றைத் தொகுத்துத் தந்து இருக்கிறார். சில தமிழ்ச் சொற்களை வேறு மொழிகள் எடுத்துக் கொண்டாலும், அவை மூலத்தினாலும், தொடர்புடைய தமிழ்ச் சொற்களாலும் அவை தமிழ் என்றே அறியப்படும் என்பதை நேர்த்தியாக விளக்கி இருக்கிறார். தமிழ் ஆய்வாளர்களுக்கும், புலவர்களுக்கும் இந்த நூல் […]

Read more

மூளையின் திறனைப் பெருக்கி சுய முன்னேற்றம் பெறுங்கள்

மூளையின் திறனைப் பெருக்கி சுய முன்னேற்றம் பெறுங்கள், பி.எஸ்.ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், பக். 160, விலை 80ரூ உயிரின உறுப்புகளின் மிகப் பிரதானப் படைப்பே அவற்றின் மூளையாகும். பிற உறுப்புகள் எல்லாம் தங்களது இயக்கத்தை வெளிக்காட்டும்போது, மூளை மட்டும் ஆடாமல் அசையாமல் அமைதியாக இருந்துகொண்டே, உடலின் அனைத்து உறப்புகளையும், நொடிப் பொழுதில் இயக்கும் ஆற்றல் படைத்தது. தவிர, எண்ணங்களும், சிந்தனைகளும் கூட மூளையில்தான் தோற்றுவிக்கப்படுகின்றன. அவற்றைக் கொண்டே உயிரினங்களின் அறிவுகளும் வகைப்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், ஆறு அறிவு கொண்ட மனித இனத்தின் மூளையைப் போன்ற […]

Read more

சிறுகதையும் திரைக்கதையும்

சிறுகதையும் திரைக்கதையும், ஜெயகாந்தன், தொகுப்பு ஜெ.ஜெயசிம்மன், டிஸ்கவரி புக் பேலஸ். விலை 160ரூ. ஒரு காட்சியை படமாக்குவது எப்படி? திரைக்கதையை வடிவமைப்பது எப்படி? என்பது நுணுக்கத்துடன் விளக்கப்பட்டுள்ளது. திரைத்துறையில் சாதிக்க துடிக்கும் இளைய தலைமுறையினருக்கு இந்நூல் வழிகாட்டியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. நன்றி: தினத்தந்தி,11/7/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பிரபஞ்சன் படைப்புலகம்

பிரபஞ்சன் படைப்புலகம், மகரந்தன்,சாகித்திய அகாதெமி, பக்.256, விலை ரூ.310. பிரபஞ்சனின் வாழ்க்கையை மட்டுமின்றி, புதுச்சேரியில் வாழ்ந்த இலக்கிய முன்னோடிகளைப் பற்றியும், அவர்களுடைய படைப்புகளைப் பற்றியும் பல்வேறு தகவல்களை இந்நூலின் முன்னுரையில் நூலாசிரியர் பதிவு செய்திருக்கிறார். இந்நூலில் பிரபஞ்சனின் சிறந்த படைப்புகளில் சில தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. பிரபஞ்சனின் படைப்புகளில் முதலில் வெளிவந்தவை கவிதைகள்தாம். பிரபஞ்சனின் சிறுகதைகள் பெரும்பாலும் கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மூலமே நகர்த்திச் செல்லப்படுகின்றன. நேற்று மனிதர்கள், சங்கம், ஒரு ஊரில் ரெண்டு மனிதர்கள், பாதுகை, கமலா டீச்சர் போன்ற சிறுகதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. […]

Read more

ஒலிம்பிக்ஸ் விளையாட்டும், உலக ஜாம்பவான்களும்

ஒலிம்பிக்ஸ் விளையாட்டும், உலக ஜாம்பவான்களும்,  நா.விஜயரெகுநாதன், டிஸ்கவரி புக் பேலஸ் (பி) லிமிடெட், பக்.144, விலை ரூ.125. கிரேக்கத்தில் தொடங்கிய பழங்கால ஒலிம்பிக் வரலாறு, தொடக்கத்தில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, மீறிப் பார்க்கும் பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, நவீன ஒலிம்பிக்கின் வரலாறு, ஒலிம்பிக்கில் படைக்கப்பட்ட சாதனைகள், சுவாரஸ்யமான சம்பவங்கள், பயங்கரவாத தாக்குதல்கள் போன்றவற்றை நூலாசிரியர் அற்புதமாகப் பதிவு செய்துள்ளார். பிரேசிலில் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் சிந்து உள்ளிட்ட வீரர்கள் படைத்த சாதனை, ஒலிம்பிக்கில் இந்தியாவின் நிலை, ஹாக்கியில் இந்தியாவின் சாதனை, தயான் சந்த், […]

Read more

புறச்சூழல்

புறச்சூழல், ச.முகமது அலி, வேலா வெளியீட்டகம், பக்.127, விலை ரூ. 100. நம்மைச் சுற்றியிருக்கும் விலங்குகள், பூச்சியினங்கள், தாவரங்கள் என பல உயிர்கள் குறித்தும், சூழலியல் மாற்றங்கள் குறித்தும் நாம் அறிந்திராத பல தகவல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. எலியின் இனப்பெருக்க காலம் 23 நாள்கள் மட்டுமே. அந்த வகையில் ஒரு ஜோடி எலி ஓர் ஆண்டில் 1,100 எலிகளைத் தன் சந்ததியினராக உருவாக்குகிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு, வளர்ந்து நிற்கும் உயிருள்ள மரங்களை வெட்டாமல் அவற்றை மணமகளுக்குச் சீதனமாக வழங்கும் பண்பாடு புதுக்கோட்டை பகுதி […]

Read more

காந்தியச் சுவடுகள்

காந்தியச் சுவடுகள், டாக்டர் அ.பிச்சை, சந்தியா பதிப்பகம், விலை 135ரூ. மகாத்மா காந்தி எனும் மாமனிதர் இளம் தலைமுறையினருக்கு விட்டுச்சென்ற பாடங்கள் அடளவிட முடியாதவை. இந்திய வரலாற்றில் ஆழமாக பதிந்திருக்கும் அவரது வாழ்க்கைச் சுவடுகளை கட்டுரைகளாக தொகுத்து நூலாக்கப்படுகிறது. அத்துடன் காந்திய வழியில் தங்கள் வாழ்க்கையை அமைத்த தலைவர்கள் மற்றும் நாட்டை கட்டமைத்த மகான்கள் பலரை பற்றிய கட்டுரைகளையும் கொண்டிருக்கும் இந்த நூல், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் தேசிய சிந்தனையாளர்களுக்கு விருந்து படைக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. நன்றி:தினத்தந்தி, 13/6/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

கொங்கு மண்டல கோவேந்தன் எம்.ஜி.ஆர்.

கொங்கு மண்டல கோவேந்தன் எம்.ஜி.ஆர்., மகுடம் மாணிக்கம். சகுந்தலா வசந்தம் பதிப்பகம், விலை 225ரூ. புரட்சி தலைவர், பொன்மன செம்மல், மக்கள் திலகம் போன்ற பல்வேறு பட்டங்களால் மக்களால் போற்றப்படும் முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்று நூல். எம்.ஜி.ஆரின் திரையுலக பயணம், அவருடைய அரசியல் வாழ்க்கை உள்ளிட்டவை தொடர்பான தகவல்களை தேடித்தேடி சேகரித்து அழகுற தொகுத்து வழங்கி இருக்கிறார் நூலின் ஆசிரியர் மகுடம் மாணிக்கம். நன்றி:தினத்தந்தி, 13/6/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more
1 6 7 8