காலமெல்லாம் காத்தருளும் காஞ்சித்தலங்கள்

காலமெல்லாம் காத்தருளும் காஞ்சித்தலங்கள், கே.சாய்குமார், சாய் குமார் வெளியீடு, விலை 140ரூ. புகழ்பெற்ற ஆயிரக்கணக்கான கோவில்களைக் கொண்டது காஞ்சிபுரம் மாவட்டம். இந்த மாவட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் ஆகிய மூன்று வட்டங்களில் உள்ள கோவில்களின் தொகுப்பாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. மொத்தம் 355 சைவம் மற்றும் வைணவக் கோவில்களின் வரலாறு, அந்தக் கோவில்களுக்குச் செல்லும் வழி, அந்தக் கோவில்கள் திறந்து இருக்கும் நேரம், அங்கு தொடர்பு கொள்ள வேண்டியவரின் பெயர் மற்றும் தொலைபேசி விவரம் என்று பக்தர்களுக்குத் தேவையான அனைத்து பயன் உள்ள […]

Read more

தலைமுறைகளைக் காக்கும் தாமிரபரணித்தலங்கள்

தலைமுறைகளைக் காக்கும் தாமிரபரணித்தலங்கள், கே.சாய்குமார், விலை 140ரூ. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்திருக்கும் 300 சைவ, வைணவ தலங்களுக்கான வழிகாட்டியாக அமைகிறது இந்நூல். தலத்தின் பெயர், தலத்துக்கு செல்லும் வழி, தலக்குறிப்பு, சாமி அம்பாள் பெயர், நடை திறக்கும், அடைக்கும் நேரம் மற்றும் ஆலய நிர்வாகிகள், அர்ச்சகர்களின் தொலைபேசி எண்கள் உள்ளிட்டவற்றை எளிய நடையில் அட்டவணைப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். அது மட்டும் இன்றி தாமிரபரணி நதிக்கரையில் உள்ள தலங்களில் நீராடி வழிபடுவதால் என்னென்ன பயன்கள் என்றும், தமிழ் மாதங்கள் வாரியாக எந்தெந்த தலங்களில் […]

Read more

நினைத்ததை நிறைவேற்றும் நரசிம்மர் தலங்கள்

நினைத்ததை நிறைவேற்றும் நரசிம்மர் தலங்கள், கே.சாய்குமார், விலை150ரூ. இந்தியாவின் பல பகுதிகளிலும் உள்ள 406 நரசிம்மர் தலங்கள், 16 வைணவ தலங்கள் ஆகியவற்றுடன் அருகே இருக்கும் வழிபாட்டுதலங்கள் ஆகியவை பற்றிய முகவரி, அவற்றுக்கு செல்லும் வழி, ஒவ்வொரு கோவிலின் தலவரலாறு, அவை மலை மீது இருக்கிறது என்றால் வாகனத்தில் செல்ல முடியுமா? அல்லது எத்தனை படிகள் ஏற வேண்டும்? தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் ஆகிய அனைத்தையும் வரிசைப்படுத்தி கொடுத்து இருக்கிறார் ஆசிரியர். அத்துடன் வரை படங்கள், அழகிய வண்ணப்படங்கள் ஆகியவையும் இணைக்கப்பட்டுள்ளன. […]

Read more

தி.க.சி. நேர்காணல்கள்

தி.க.சி. நேர்காணல்கள், தொகுப்பாசிரியர்-வே. முத்துக்குமார், உயிர் எழுத்து பதிப்பகம், திருச்சி-4, பக். 188, விலை 140ரூ. தி.க.சி.யின் 25 நேர்காணல்கள் தொகுக்கப்பட்டு கால வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 75 ஆண்டு கால முற்போக்கு கலை, இலக்கிய வரலாற்றையும், விமர்சனப் போக்குகளையும் புரிந்து கொள்ள முடிகிறது. தி.க.சி.யின் விமர்சனங்கள், நேர்மையைப் பிரதிபலிப்பவையாக இருப்பவை. இத்தொகுப்பிலுள்ள நேர்காணல்களில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகளும், அவருடைய நேர்மைக்குச் சாட்சியமாக நிற்கின்றன. புதிய மனிதனுக்காக-புதிய வாழ்க்கைக்காக-புதிய கலாசாரத்துக்காக, கலை, இலக்கியம் படைக்கப்பட வேண்டும் என்பதே என் நோக்கம். அந்த இலக்கியம் சமூக நலனுக்கும், […]

Read more