தலைமுறைகளைக் காக்கும் தாமிரபரணித்தலங்கள்
தலைமுறைகளைக் காக்கும் தாமிரபரணித்தலங்கள், கே.சாய்குமார், விலை 140ரூ.
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்திருக்கும் 300 சைவ, வைணவ தலங்களுக்கான வழிகாட்டியாக அமைகிறது இந்நூல். தலத்தின் பெயர், தலத்துக்கு செல்லும் வழி, தலக்குறிப்பு, சாமி அம்பாள் பெயர், நடை திறக்கும், அடைக்கும் நேரம் மற்றும் ஆலய நிர்வாகிகள், அர்ச்சகர்களின் தொலைபேசி எண்கள் உள்ளிட்டவற்றை எளிய நடையில் அட்டவணைப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர்.
அது மட்டும் இன்றி தாமிரபரணி நதிக்கரையில் உள்ள தலங்களில் நீராடி வழிபடுவதால் என்னென்ன பயன்கள் என்றும், தமிழ் மாதங்கள் வாரியாக எந்தெந்த தலங்களில் எவ்வாறு வழிபாடு செய்தால் என்ன பலன்கள் கிட்டும் என்றும் விளக்கி இருக்கிறார்.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818