மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்
மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள், ஏர்வாடி
ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், விலை 1000ரூ.
மேலை நாட்டார் தொடர்பால் தமிழுக்கு வந்து சேர்ந்த ஒரு புதிய இலக்கிய
வகை, ‘நடைச்சித்திரம்’ ஆகும். இது வாழ்க்கை வரலாறு அன்று.
படைப்பாளியின் மனத்தில் பதிந்த ஒருவரின் ஆளுமைப் பண்புகளை
தனக்குரிய வகையில் எடுத்துச் கூறுவது ஆகும். அந்த வகையில்
ஆன்மிகவாதிகள், அரசியல் தலைவர்கள், கவிஞர்கள், தமிழ்ச்சான்றோர்கள்,
சினிமா நடிகர்கள் என 100 பேரைப் பற்றிய கட்டுரைகள் இதில் இடம்
பெற்றுள்ளன.
இந்த நூலை எழுத்தாளரும், கவிஞருமான ஏர்வாடி
ராதாகிருஷ்ணன் சுவைபட எழுதியுள்ளார். ஒவ்வொரு மனிதரிடமும்
ஒவ்வொரு வகையான திறமை, பண்பு, பெருமை, நேர்மை போன்ற
உயர்குணங்கள் குடியிருக்கும். அவற்றைக் கண்டறிந்து அழகுற அவர்
வெளிப்படுத்தியுள்ளார்.
அருமையும், எளிமையும், அழகும், ஆற்றலும்
கொலுவிருக்கும் தனித்தன்மை வாய்ந்த மொழி ஆளுமைக்குச் சொந்தக்காரர்
ஏர்வாடியார் என்று இந்த நூலைத் தொகுத்த பேராசிரியர் இரா.மோகன்
அணிந்துரையில் கூறி இருப்பது முற்றிலும் உண்மை.
நன்றி: தினத்தந்தி.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027632.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818