மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள்

மனத்தில் பதிந்த மாண்புறு மனிதர்கள், ஏர்வாடி ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், விலை 1000ரூ. மேலை நாட்டார் தொடர்பால் தமிழுக்கு வந்து சேர்ந்த ஒரு புதிய இலக்கிய வகை, ‘நடைச்சித்திரம்’ ஆகும். இது வாழ்க்கை வரலாறு அன்று. படைப்பாளியின் மனத்தில் பதிந்த ஒருவரின் ஆளுமைப் பண்புகளை தனக்குரிய வகையில் எடுத்துச் கூறுவது ஆகும். அந்த வகையில் ஆன்மிகவாதிகள், அரசியல் தலைவர்கள், கவிஞர்கள், தமிழ்ச்சான்றோர்கள், சினிமா நடிகர்கள் என 100 பேரைப் பற்றிய கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த நூலை எழுத்தாளரும், கவிஞருமான ஏர்வாடி ராதாகிருஷ்ணன் […]

Read more

கொஞ்சம் கனவு கொஞ்சம் கவிதை

கொஞ்சம் கனவு கொஞ்சம் கவிதை, ஏர்வாடி ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், விலை 75ரூ. கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகம் கொண்டவர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன். இந்நூல் அவர் எழுதிய கவிதைத் தொகுப்பு. ‘பாட்டுத் திறத்தாலே இந்த வையத்தைப் பாலித்திடச் சொன்னாயே பாரதி… நோட்டுத் திறமல்லவா இந்த நாட்டை நடத்துகிறது‘ என்று இன்றைய நாட்டு நடப்பைத் தோலுரித்துக் காட்டுகிறார். ‘தேடுதல் இல்லா வாழ்க்கையில் யார்க்கும் தெய்வ தரிசனம் கிடைப்பதில்லை’ ‘விதைகளை அலட்சியப்படுத்தாதீர்கள். வருங்காலம் ஒரு விருட்சத்தை இழந்துவிடும்’ போன்றவை நெஞ்சில் விழிப்புணர்வை விதைக்கின்றன. ‘பிள்ளை மனமும் […]

Read more

நல்லது நடந்தால் நல்லது

நல்லது நடந்தால் நல்லது, ஏர்வாடி ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், சென்னை, விலை 150ரூ. ஏர்வாடி ராதாகிருஷ்ணன், சிறந்த கவிஞர் என்பதை அனைவரும் அறிவர். உரைநடையிலும் அவருக்கு மிக்க ஆற்றல் உண்டு என்பதை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. இதில் 23 கட்டுரைகள் உள்ளன. எல்லாமே கருத்தாழம் மிக்க கட்டுரைகள். தமிழால் முடியும் என்ற கட்டுரையில் கீழ்க்கண்ட தகவல்களைக் கூறுகிறார். உலக மொழிகள் 2800ல் செம்மொழி என்கிற சிகரச் சிறப்பைப் பெற்ற மொழிகள் 6 மட்டுமே. அந்த ஆறில் ஒன்று தமிழ் என்பது தமிழுக்குப் பெருமை. சில […]

Read more