நல்லது நடந்தால் நல்லது
நல்லது நடந்தால் நல்லது, ஏர்வாடி ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், சென்னை, விலை 150ரூ.
ஏர்வாடி ராதாகிருஷ்ணன், சிறந்த கவிஞர் என்பதை அனைவரும் அறிவர். உரைநடையிலும் அவருக்கு மிக்க ஆற்றல் உண்டு என்பதை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. இதில் 23 கட்டுரைகள் உள்ளன. எல்லாமே கருத்தாழம் மிக்க கட்டுரைகள். தமிழால் முடியும் என்ற கட்டுரையில் கீழ்க்கண்ட தகவல்களைக் கூறுகிறார். உலக மொழிகள் 2800ல் செம்மொழி என்கிற சிகரச் சிறப்பைப் பெற்ற மொழிகள் 6 மட்டுமே. அந்த ஆறில் ஒன்று தமிழ் என்பது தமிழுக்குப் பெருமை. சில மொழிகளுக்கு எழுத்து உண்டு, பேச்சு இல்லை. எகிப்து மொழி இதற்கான எடுத்துக்காட்டு. சில மொழிகளுக்கு பேச்சு உண்டு. எழுத்து இல்லையாம். ஜப்பான் நாட்டில் பெண்களுக்கு என்றே தனியே ஒரு மொழி இருக்கிறது. உலகில் அதிகமான நாடுகளில் பேசப்படுகிற மொழிகளில் தமிழும் ஒன்று. இத்தகைய தகவல்கள் நிறைந்துள்ள நூல் இது. நன்றி: தினத்தந்தி, 29/7/2015.
—-
நல்ல தாயாக நல்ல யோசனை, ஆதனூர் சோழன், சாருபிரபா பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 100ரூ.
தாய்மை குறித்து இளம் தாய்மார்கள் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார் ஆதனூர் சோழன். நன்றி: தினத்தந்தி, 29/7/2015.