திரையுலகின் தவப்புதல்வன்

திரையுலகின் தவப்புதல்வன்,  தமிழருவி மணியன், கற்பகம் புத்தகாலயம்,  பக்: 248. விலை ரூ.175. சினிமாவை எப்படி ரசிக்க வேண்டும் என அறிவுறுத்தும் திரையியல் ஆய்வு நூல் என்றே இந்நூலைக் கூறலாம். காரணம், சிவாஜியின் நடிப்பைப் பற்றி மட்டுமின்றி, சினிமாவின் தரம், இசை, பாடல்கள், தற்கால சினிமாவின் தரக்கேடு உள்ளிட்ட பல அம்சங்களும் இந்நூலில் அலசப்பட்டிருக்கின்றன. தெய்வப்பிறவி, முதல் தேதி, ரங்கூன் ராதா ஆகிய படங்களில் சிவாஜியின் நடிப்புத் திறனை நூலாசிரியர் வர்ணித்திருக்கும் விதம், அப்படங்களைத் தேடிப்பிடித்து மீண்டும் நம்மை பார்க்கத் தூண்டுகிறது. பழநி ஒரு தோல்விப்படம்தான்; […]

Read more

கீத கோவிந்தம்

கீத கோவிந்தம் (ஜெயதேவரின் கீத கோவிந்தம்- அஷ்டபதி விளக்க உரை), வ.ந.கோபால தேசிகாசாரியார், வானதிபதிப்பகம்,  பக். 216,  விலை ரூ150. கிருஷ்ண பக்தரான ஜெயதேவர் இயற்றிய கீதகோவிந்தம் என்பது அஷ்டபதி என்றும் கூறப்படும். 12 சர்க்கங்களைக் கொண்டது. ஒவ்வொரு சர்க்கத்திலும் எட்டு பாடல்களைக் கொண்டும், ஒன்றிரண்டு பகுதிகளில் மட்டும் எட்டுக்கும் அதிகமான பாடல்களைக் கொண்டிருப்பதால் இந்தப் பகுதிகள் ‘அஷ்ட பதிகள்’ என்று அழைக்கப்படுகின்றன. மொத்தம் 24 அஷ்டபதிகள் இந்தக் காதல் காவியத்தை அலங்கரிக்கின்றன. வடமொழியில் செவிக்கு மதுரமான சொற்றொடர்களைக் கொண்ட இந்த கீதகோவிந்தம் கண்ணன்- […]

Read more

என் கவிதைகள்

என் கவிதைகள்,கே. நடராஜன், ஸ்பீடு பிரிண்டர்,  பக்.106 விலை ரூ.90 சுவடுகள் தந்த அனுபவம் சுவடுகள் ஏற்றிடும் வாழ்வின் தொகுப்பு, என சித்தர் சுவாமிகளின் முகப்பு வரிகளுடன் கே. நடராஜனின் என் கவிதைகள் நூலுக்குள் நுழைந்தால். மணி மணியான நூறு தலைப்புகள், அத்தனையும் தினமணி கவிதை மணியில் கொடுக்கப்பட்ட தலைப்புகள், அதற்கு அவர் எழுதிய கவிதைகளை தொகுத்து வெளியிட்டுள்ளார். கே.நடராஜன். விமான நிலைய ஆணையத்தில் 33 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற அவரின் கவிதை தாகத்திற்கு தினமணி கவிதை மணி நீரூற்றியதாக அறிமுக உரையில் குறிப்பிட்டுள்ளார். […]

Read more

குகைகளின் வழியே

குகைகளின் வழியே,  ஜெயமோகன், கிழக்கு பதிப்பகம், பக். 142, விலை ரூ.150. இந்த நூல் ஒரு பயண அனுபவத் தொகுப்பு. ‘இதுவரை மேற்கொண்ட பயணங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இதுவரை சென்ற பயணம் மண்மீது ஊர்தல்; இது மண்ணுக்குக் கீழும் இருந்தது’ என்கிறார் நூலாசிரியர். சிபி,ஹேமாவதி, ராயதுர்க், கூட்டி, யாகி, பெலும் குகைகள் கண்டிக்கோட்டி, யாக்கண்டி குகைக்கோயில், உண்டவல்லி குகைகள், அக்கண்ண மதன குடைவரைக் கோயில், குண்டுபள்ளி குகைகள், கைலாஷ் குகைகள், தண்டே வாடா, குப்தேஸ்வர் குகைகள், பொர்ரா குகைகள் என நம்மையும் சக பயணியாக்கி விடுகிறார் நூலாசிரியர். […]

Read more

ஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்

ஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம், சி.எஸ்.தேவ்நாத், புதிய புத்தக உலகம், பக். 256, விலை 120ரூ. மனிதர்கள் நாம் எங்கிருந்து வந்தோம்? எங்கே போகிறோம்? என்ற கேள்விக்கு இன்னும் உலகில் மானுடவியலாளர்கள் விடை தேடிக் கொண்டே தான் இருக்கின்றனர். அறிவியலில் ஆயிரம் பிரிவுகள் முயன்ற போதும், கடலின் மடியில் மறைந்து கிடக்கும் செல்வங்களை மதிப்பிட முடியாததைப் போல், வானிலும், மண்ணிலும் இன்னும் அறியப்படாத ரகசியங்கள் பொதிந்திருப்பதைப் போல, ஆன்மாவும் இருக்கிறது. அது தன்னுள் பல சக்திகளை தேக்கி வைத்திருக்கிறது, உண்மைகளை அடுக்கி வைத்திருக்கிறது என்று […]

Read more

வளமான வாழ்வு தரும் துளசி வழிபாடு

வளமான வாழ்வு தரும் துளசி வழிபாடு, வேணு சீனிவாசன், அழகு பதிப்பகம், பக். 176, விலை 150ரூ. துளசியைப் பற்றிப் பல நுால்கள் வந்திருந்தபோதிலும், இந்த நுால் சற்று வித்தியாசமானது. இதை ஆன்மிகமும், அறிவியலும் கலந்த கலவையாக உருவாக்கியிருக்கிறார் ஆசிரியர். இந்நுாலை மூன்று பகுதிகளாகப் பிரித்துப் பல தகவல்களைப் பதிவு செய்திருக்கிறார். முதல் பகுதி – இலக்கியம், இதிகாசம், புராணங்கள் ஆகியவற்றில் சொல்லப்பட்டுள்ள துளசியின் பெருமையை விவரிக்கிறது. இரண்டாம் பகுதி – துளசி வழிபாடு, ஸ்தோத்திரங்கள், வழிபட வேண்டிய முறை, அதனால் பெறப்படும் பலன்கள் […]

Read more

கூரேசை விஜயம்

கூரேசை விஜயம், ஆசிரியர் ஆங்கிலத்தில் டாக்டர் கே.பி. வாசுதேவன், தமிழில் பி.வி. ஓம் பிரகாஷ் நாராயணன், கலைஞன் பதிப்பகம், பக். 500, விலை 500ரூ. குரு பக்தி மற்றும் குரு – சிஷ்ய உறவின் அருமை, பெருமைகளை உணர்த்தும் நுாலாக இந்நுால் அமைந்துள்ளது. கூரேசர் என்று அழைக்கப்படும், ஸ்ரீ கூரத்தாழ்வாரின் வாழ்க்கையும், அவருடன் இணைந்து வாழ்க்கைப் பயணம் செய்த, ஸ்ரீராமானுஜரின் வாழ்க்கையும், இந்நுாலில் இரண்டறக் கலந்து விவரிக்கப்பட்டுள்ள அழகு பெரிதும் பாராட்டுதற்குரியது. டாக்டர் பி.கே.வாசுதேவன் எழுதிய ஆங்கில நுாலின் தமிழாக்கமாக இந்நுால் வெளிவந்துள்ள போதிலும், […]

Read more

கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்

கார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்,  தா.பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக்.140, விலை ரூ.140. கார்ல் மார்க்ஸின் 200 ஆவது பிறந்த நாள் வரப்போவதையொட்டி, அவரின் வாழ்க்கையையும், உலகிற்கு அவரின் பங்களிப்பையும் எடுத்துக் கூறும் நோக்கத்தோடு இந்நூல் எழுதப்பட்டுள்ளது. கம்யூனிச சித்தாந்தம் ஐரோப்பாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் பரவியிருக்கும் இந்நாளில், அதனை உருவாக்கிய காரல்மார்க்ஸ் அந்தச் சிந்தனையை எவ்வாறு பெற்றார்? அதற்கான காரணங்கள் எவை? என்பதை இந்நூல் விளக்குகிறது. கார்ல்மார்க்ஸ் அவருடைய இளமைப் பருவத்திலேயே பைபிளின் ஆதியாகமத்தில் கேள்விகள் கேட்கத் தொடங்கியது, […]

Read more

திருமுறைத் திருத்தலங்கள்

திருமுறைத் திருத்தலங்கள், சுவாமி சிவராம்ஜி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 128, விலை 80ரூ. பதினெட்டாயிரத்து இருநுாற்று அறுபத்தேழு பாடல்களைக் கொண்ட திருமுறைகளில் இருந்து, சைவ சமயக் குரவர்களால் பாடல் பெற்ற திருத்தலங்களைப் பற்றியும், அங்கு குடி கொண்டுள்ள ஈசனின் கருணாகடாட்சங்களைப் பற்றியும் ஆன்மிக அன்பர்களுக்கு எடுத்துச் சொல்வதாக அமைந்துள்ளது இந்நுால். நன்றி: தினமலர், 5/11/201

Read more

எண்ணங்கள்

எண்ணங்கள், வத்ஸலா சங்கர், ஹை லைப் என்டர்பிரைசஸ், இதிகாசங்களும் காப்பியங்களும், ஆன்ம நேயமும் மனித நேயமும், மேன்மை தரும் ஒழுக்கம், அன்பினால் இந்த உலகை ஆளலாம், பெண்கள் நாட்டின் கண்கள், தீதும் நன்றும், காசியிலிருந்து ராமேஸ்வரம் வரை, நேப்பாள், துவாரகா, திருக்கேதார் – பத்ரிநாத், கல்லுக்குள் ஈரம் உள்ளிட்ட கட்டுரைகள், நுாலுக்கு சிறப்பு சேர்க்கின்றன. நன்றி: தினமலர், 5/11/2017.

Read more
1 2 3 12