கீத கோவிந்தம்

கீத கோவிந்தம் (ஜெயதேவரின் கீத கோவிந்தம்- அஷ்டபதி விளக்க உரை), வ.ந.கோபால தேசிகாசாரியார், வானதிபதிப்பகம்,  பக். 216,  விலை ரூ150. கிருஷ்ண பக்தரான ஜெயதேவர் இயற்றிய கீதகோவிந்தம் என்பது அஷ்டபதி என்றும் கூறப்படும். 12 சர்க்கங்களைக் கொண்டது. ஒவ்வொரு சர்க்கத்திலும் எட்டு பாடல்களைக் கொண்டும், ஒன்றிரண்டு பகுதிகளில் மட்டும் எட்டுக்கும் அதிகமான பாடல்களைக் கொண்டிருப்பதால் இந்தப் பகுதிகள் ‘அஷ்ட பதிகள்’ என்று அழைக்கப்படுகின்றன. மொத்தம் 24 அஷ்டபதிகள் இந்தக் காதல் காவியத்தை அலங்கரிக்கின்றன. வடமொழியில் செவிக்கு மதுரமான சொற்றொடர்களைக் கொண்ட இந்த கீதகோவிந்தம் கண்ணன்- […]

Read more

ஆலை அரசர் கருமுத்து தியாகராசரின் உரைக்கோவை

ஆலை அரசர் கருமுத்து தியாகராசரின் உரைக்கோவை, தொகுப்பாசிரியர் க.ஹரி தியாகராசன், வானதிபதிப்பகம், பக்.296, விலை ரூ.200. பண்பாட்டு நகரமாம் மதுரையில் கல்விச் சேவையுடன் தமிழ் தொண்டாற்றிய கருமுத்து தியாகராசரின் சொற்பொழிவுகள் நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. தியாகராசர் வெவ்வேறு விழாக்களில் ஆற்றிய உரைகளை கல்வி, இலக்கியம், ஆலை, மாநாடுகள், சங்கங்கள், பொது நிகழ்வுகள், வானொலி மற்றும் மகாத்மா காந்தி, ராஜாஜி ஆகியோருக்கு அவர் எழுதிய கடிதங்களும் சேர்க்கப்பட்டு மொத்தம் 37 கட்டுரைகளாகத் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. தேவகோட்டை தமிழிசைப் பள்ளியில் பேசிய தியாகராசர், இசை என்றால் என்ன? அதன் வளர்ச்சி, […]

Read more

வம்புக்கு நான் அடிமை

வம்புக்கு நான் அடிமை, ஜே.எஸ். ராகவன், அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை 4, பக். 200, விலை 90ரூ. நகைச்சுவை உணர்வு நமது மன இறுக்கங்களைத் தளர்த்தும் ஆற்றல் மிக்கது. கடுமையான விஷயங்களையும் கூட நகைச்சுவையுடன் கூறினால், அதில் தொடர்புள்ளவர்களே தன்னை மறந்து சிரித்துவிடுவர். எந்த ஒரு நிகழ்வையும் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு கடந்துவிட்டால், மனவேதனையிலிருந்து தப்ப முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். நகைச்சுவையை மட்டுமே மூலப்பொருளாகக் கொண்டு இந்நூலை எழுதி இருக்கிறார் ஜே.எஸ். ராகவன். சுமார் 40 ஆண்டுகளாக பத்திரிகைகளில் கட்டுரை எழுதிவரும் நூலாசிரியர், சென்னையில் […]

Read more