நாம் இந்தியர்கள் பெருமிதம் கொள்வோம்

நாம் இந்தியர்கள் பெருமிதம் கொள்வோம், பா. இலட்சுமணன், மாதவ் பப்ளிகேஷன்ஸ், டி3, வசந்தம் அபார்ட்மெண்ட், 1/338, சபரிசாலை, மடிப்பாக்கம், சென்னை 91, பக். 84, விலை 60ரூ. உலகில் தோன்றிய பழைமையான நாகரிகங்களில் இந்திய நாகரிகமும் ஒன்று. பல நாகரிகங்கள் மறைந்துபோன நிலையில் இந்திய நாகரிகம் மட்டுமே இன்றைக்கும் புதுமைத் தன்மையுடன் விளங்குகிறது. அதற்குக் காரணம் இந்து தர்மம். அதன் உண்மைத்தன்மையும் விஞ்ஞான மெய்ஞான அடித்தளமுமே அதற்குக் காரணம் என்று நிறுவுகிறார் நூலாசிரியர் இலட்சுமணன். புஷ்பவிமானம், பிரம்மாஸ்திரம், மழை நீர் சேகரிப்பு என்று நம் […]

Read more

விட்டு விடுதலையாகி

விட்டு விடுதலையாகி, வாஸந்தி, கவிதா பப்ளிகேஷன், சென்னை 17, பக். 408, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-099-1.html ஒரே நேரத்தில் சமூக நாவலாகவும், சரித்திர நாவலாகவும் மலர்ந்துள்ளது இந்தப் படைப்பு. ஒருபுறம் சுதந்திரப் போராட்ட கால உக்கிரம். மறுபுறம் அதே காலகட்டத்தில் நிலவிய தேவதாசி முறையின் சித்தரிப்பு. இவை இரண்டும் கடந்த கால நிகழ்வுகள். ஆனால், இவற்றை நிகழ்காலத்தோடு பிணைத்துச் செல்கிறாள் கொடைக்கானலைச் சேர்ந்த ஓர் இளம்பெண். நாவலின் உத்தி இவ்வாறு இருக்க, பாத்திரப் படைப்பில் ஆசிரியரின் […]

Read more

கலைவாணரைப் போற்றிய அறிஞர்கள்

கலைவாணரைப் போற்றிய அறிஞர்கள், தொகுப்பாசிரியர்-வே. குமரவேல், சங்கம் பதிப்பகம், சென்னை 1, பக். 560, விலை 350ரூ. இதுவரை ஒரே ஒரு என்.எஸ்.கிருஷ்ணனைத்தான் தமிழ்க் கலையுலகம் தந்துள்ளது. அவரது ஒப்புயர்வற்ற கலைப் பணியை சிந்தனைச் செல்வத்தை இதுவரை தோன்றிய எந்த நடிகனிடத்திலும் தமிழகம் பெற்றதில்லை என்று கலைவாணரைப் பாராட்டி கருத்துத் தெரிவித்திருக்கிறார் எம்.ஜி.ஆர். இதுபோல் பல்வேறு சந்தர்ப்பங்களில் கலையுலகைச் சேர்ந்தவர்கள், இலக்கியவாதிகள், அரசியல் பிரமுகர்கள் கலைவாணரைப் பற்றி தெரிவித்த கருத்துக்களைத் தொகுத்து இந்நூலில் வழங்கியிருக்கிறார் தொகுப்பாசிரியர் வே. குமரவேல். சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாமல் […]

Read more

உயிரைத் தேடி

உயிரைத் தேடி, வ. தென்கோவன், அருள்மிகு சீதளாதேவி அம்ன் பதிப்பகம், 41, சீதள மகால், டாக்டர் ராதாகிருண்ணன் சாலை, அம்மையார் நகர், கீழகாசாக்குடி, காரைக்கால், பக். 168, விலை 125ரூ. சைவ சமயத்தின் சித்தாந்த சாத்திர நூல்கள் பதினான்கு. அவற்றுள் முதன்மையானது மெய் கண்டார் இயற்றிய சிவஞானபோதம். திருவியலூர் உய்ய வந்த தேவர் இயற்றிய திருவுந்தியாரும் திருக்கடவூர் உய்ய வந்த தேவர் இயற்றிய திருக்களிற்றுப்படியாரும் காலத்தால் சிவஞான போதத்திற்கு முற்பட்டவையாயினும் சித்தாந்த சாத்திர நூல்களில் சிவஞான போதமே முதல் நூலாக விளங்குகிறது. அத்தகைய சிவ […]

Read more

சீர்காழி மூவர்

சீர்காழி மூவர், டாக்டர் சுதா சேஷய்யன், எல்கேஎம் பப்ளிகேஷன், விலை 120ரூ. அற்புதங்களின் வரலாறு அற்புதங்களை நாம் வரலாறாக ஏற்கத் தயங்குகிறோம். பல மகான்களின் வாழ்க்கை நிகழ்வுகளை அவை அற்புதங்களாக இருப்பதாலேயே நமது தர்க்கவியல் பார்வைக்கு உட்படுத்தி செவி வழிச் செய்திகள் என்று முத்திரை குத்துகிறோம் ஆனால் அற்புதங்கள் என்னவோ உலகெங்கும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அதுவும் நமது பாராத புண்ணிய பூமியில் அள்ளக் குறையாத வகையில் நிறைந்துள்ளன. அத்தகையதொரு அற்புதந்தான் முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாசல கவிராயர் ஆகிய சீர்காழி மூவரின் தோற்றமும் சங்கீதப் […]

Read more

பஞ்சதந்திரம்

பஞ்சதந்திரம், சம்ஸ்கிருத மூலம்-விஷ்ணுசர்மன், தமிழில்-அன்னபூர்ணா ஈஸ்வரன், சதுரம் பதிப்பகம், விலை 300ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-158-7.html பள்ளிக்கூடப் பாடங்களில் அனேகமாக எல்லோரும் விரும்பிப் படித்திருக்கக்கூடியது பஞ்சதந்திரக் கதைகள் மட்டுமாகத்தான் இருக்கும். அதுவும் மனிதர்களை விடவும் புத்திசாலித்தனமாகப் பேசக் கூடிய நரி, காகம், பாம்பு, சிங்கம், புலி போன்றவற்றின் சாமர்த்தியம், அசட்டுத்தனம், தந்திரங்கள் எல்லாம் சிறுபிள்ளைகளாக இருந்த போதும் சரி, வளர்ந்து பெரியவர்களான இன்றைக்கும் சரி சுவையோ சுவைதான். விஷ்ணுசர்மன் என்னும் அறிஞர் சம்ஸ்கிருத மொழியில் எழுதியதை மிக எளிமையான […]

Read more

விஸ்வரூபம்

விஸ்வரூபம், இரா. முருகன், கிழக்கு பதிப்பகம், 57 பி.எம்.ஜி. காம்பிளெக்ஸ், தெற்கு உஸ்மான் ரோடு, தியாகராய நகர், சென்னை 17, விலை 400ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-749-7.html ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசும் வசனங்களையும் அதே நேரத்தில் அவர்களது ஆழ் மனதில் வெளிவராமல் அமுங்கிக் கிடக்கும் விகல்பமான எண்ணங்களையும் ஒரே நேரத்தில் கூறி கதை சொல்லி இருப்பது பாராட்டும்படியாக இருக்கிறது. அதுவே கதையின் வேகமான ஓட்டத்திற்கு காரணியாகவும் அமைந்து விடுகிறது. கதையின் காலமான 1860ல் தொடங்கி 1940 வரை நெடுகிலும் […]

Read more

நானிருந்த வீடு

நானிருந்த வீடு, கதிர்பாரதி, பண்மொழி பதிப்பகம், 117, பழைய வாரிய குடியிருப்பு, பெங்களூர் சாலை, கிருஷ்ணகிரி, பக். 170, விலை 75ரூ. இது ஒரு கவிதைத் தொகுப்புதான். ஆனால் உள்ளடக்கத்திலோ உருவ அமைப்பிலோ இது இன்னவகை கவிதை என்ற சொல்லி விட முடியாதபடி மரபுக் கவிதை, புதுக்கவிதை, குறள்வெண்பா, ஹைகூ என்று சுதந்திரமாக கையாண்டுள்ளார் கதிர்பாரதி. காதல், நட்பு, பாசம், இயற்கை, தத்துவம், சாதிமறுப்பு, விதவைமணம், குழந்தைகளுக்கு அறவுரை என்று ஒன்று விடாமல், நம் மனதில் விதைத்துப் போகிறார். முச்சங்கம் கண்ட மதுரையில் தமிழோடு […]

Read more

356 தலைக்கு மேல் கத்தி

356 தலைக்கு மேல் கத்தி, தி. சிகாமணி, பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 136, விலை 70ரூ. இந்திய அரசியல் சட்டத்தின் ஒரு பிரிவு 356. இந்தப் பிரிவின் துணையுடன் பல மாநில அரசுகள், பல முறை கலைக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கலைப்புகளுக்கான காரணத்தைத் தெளிவாக அலசுகிறது இந்த நூல். -முகிலை ராசபாண்டியன்.   —-   தீர்க்கதரிசி ராஜாஜி (நவ இந்தியாவின் சாணக்கியர்), சிவரஞ்சன், அருணா பப்ளிகேஷன்ஸ், பக். 128, விலை 35ரூ. 95 ஆண்டுகள் நீண்ட வாழ்க்கை வாழ்ந்த மூதறிஞர் 75 ஆண்டுகள் சுதந்திரப் […]

Read more

க.நா. சுப்ரமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

க.நா. சுப்ரமணியனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், தொகுப்பு-சா. கந்தசாமி, சாகித்ய அகடமி, 443, அண்ணாசாலை, சென்னை 18, பக். 240, விலை 125ரூ. பரவலான வாசிப்பு அனுபவம் உள்ள, க.நா.சு.வுக்கு விமர்சகர் என்ற கவுரவம் உண்டு. சர்மாவின் உயில், பொய்த்தேவு போன்ற சிறந்த நாவல்கள் படைத்த பெருமை உண்டு. அவருடைய சிறுகதைப் படைப்புக்கு பெரிய வரவேற்பு இருந்ததாகச் சொல்ல முடியாது. ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கிய உலகில், தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள, சாகித்ய அகடமி பரிசு பெற்ற சா. கந்தசாமி, க.நா.சு.வின் 24 சறுகதைகளைத் […]

Read more
1 2 3 9