நானிருந்த வீடு

நானிருந்த வீடு, கதிர்பாரதி, பண்மொழி பதிப்பகம், 117, பழைய வாரிய குடியிருப்பு, பெங்களூர் சாலை, கிருஷ்ணகிரி, பக். 170, விலை 75ரூ.

இது ஒரு கவிதைத் தொகுப்புதான். ஆனால் உள்ளடக்கத்திலோ உருவ அமைப்பிலோ இது இன்னவகை கவிதை என்ற சொல்லி விட முடியாதபடி மரபுக் கவிதை, புதுக்கவிதை, குறள்வெண்பா, ஹைகூ என்று சுதந்திரமாக கையாண்டுள்ளார் கதிர்பாரதி. காதல், நட்பு, பாசம், இயற்கை, தத்துவம், சாதிமறுப்பு, விதவைமணம், குழந்தைகளுக்கு அறவுரை என்று ஒன்று விடாமல், நம் மனதில் விதைத்துப் போகிறார். முச்சங்கம் கண்ட மதுரையில் தமிழோடு ஆங்கிலமும் கலந்தே சாலையின் பெயர் தமிழ்ச்சங்கரோடு தமிழா இது தமிழா? போன்ற கவிதைகளில் வெளிப்படும் கவிஞரின் ஆதங்கம் யாவர் மனதையும் சுடும். நன்றி: குமுதம், 12/6/2013.  

—-

 

குழந்தைகளும் பொம்மைகளும் கடவுளும், முனைவென்றி நா. சுரேண்குமார், ஓவியா பதிப்பகம், 17/16/5ஏ, கே.கே. நகர், வத்தலகுண்டு 642202, பக். 64, விலை 60ரூ.

ஒரு மின்னல் வந்து தாக்கிவிட்டுப் போகும் ஒரு பரவசம் ஹைக்கூ கவிதைகளில் காணமுடியும். குழந்தைகளின் செய்கைகளில் ஒளிந்திருக்கின்றன எழுதப்படாத கவிதைகள் பாசாங்கு இல்லாத இயல்பான மனதை ஹைக்கூவாக வடித்திருககிறார் சுரேஷ்குமார். குழந்தைகளுடனான நம் வாழ்வை, குழந்தைகளோடு கழிகிற நம் ஒவ்வொரு கணங்களையும் இவை நினைவூட்டுகின்றன. நம் கண்ணுக்குப் புலப்படாத பல்வேறு காட்சியமைப்புகளை குழந்தைகள் பொம்மைகள் கடவுள்கள் என்ற பாடுபொருள்களை நம்முன் படிமங்களாக நிலை நிறுத்தும் கவிஞரின் முயற்சியும் தெரிகிறது. நன்றி: குமுதம், 12/6/2013.

Leave a Reply

Your email address will not be published.