சின்னத்தாய் காவியம்

சின்னத்தாய் காவியம், கே.எஸ்.கே.நடேசன், ஓவியா பதிப்பகம், பக்.208, விலை ரூ.200. அருகிலுள்ள குக்கிராமத்தில் தொடங்கும் இந்த நாவல், சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய சமூக ஏற்றத் தாழ்வுகளை விவரிக்கிறது.அதனால் ஏற்பட்ட வடுக்களோடு பஞ்சம் பிழைக்கச் சென்று,முன்னேற்றம் அடைந்த ஒரு குடும்பத்தின் வெற்றியையும் சித்திரிக்கிறது. உழைப்புதான் உயர்வை தரும் என்ற நம்பிக்கையை வாசிப்பவர்கள் மனதில் ஆழமாகப் பதிவு செய்கிறது. பொது கிணற்றில் தண்ணீர் எடுக்க சில பிரிவு மக்களை அனுமதிக்க மறுப்பதை சின்னத்தாய் கதாபாத்திரம் எதிர்க்கிறது. சாதியக்கொடுமைகளுக்கு எதிரான சிந்தனையைத் தூண்டுகிறது நூல். நாவலின் […]

Read more

குழந்தை வரைந்த காகிதம்

குழந்தை வரைந்த காகிதம், கவிஞர் இளவல் ஹரிஹரன், ஓவியா பதிப்பகம், வலை 100ரூ. தெலுங்கில் சமீப காலமாக நானிலு என்னும் நான்கு வரிக் கவிதை வடிவம், கொடி கட்டிப் பறக்கிறது. இதற்குத் தமிழில் தன் முனைக் கவிதைகள் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்போது குழந்தை வளர்ந்த காகிதம் என்ற தலைப்பில் தன் முனைக் கவிதை நூலை முதன்முறையாகப் படைத்து வெளியிட்டு இருக்கிறார் கவிஞர் இளவல் ஹரிஹரன். பத்திரப் பதிவுத்துறையில் மிக உயர் பதவி வகித்து ஓய்வு பெற்ற இவர், வாழ்வில் தான் கண்டதையும், உணர்ந்ததையும் […]

Read more

மரம் சுமக்கும் யானைகளின் பிளிறல்

மரம் சுமக்கும் யானைகளின் பிளிறல், லதிலைபிரபா, ஓவியா பதிப்பகம், விலை 100ரூ. சமுதாய அவலம், மழை இன்றி வறளும் மண், காடு வீடானதால் விலங்குகள் எழுப்பும் அபாய அலறல் என்று அத்தனையும் சின்னச் சின்ன கவிதைகளாக கண்முன் நிறுத்தும் புத்தகம். வாழ்ந்த வாழ்க்கை, வாழ்கிற சூழலை யதார்த்தமான வார்த்தைகளாய் படிக்கப்படிக்க மனதில் கனம் கூடுகிறது. நன்றி: குமுதம், 16/1/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பாகன் திரும்பும் வரை

பாகன் திரும்பும் வரை, வலங்கைமான் நூர்துன், ஓவியா பதிப்பகம், விலை 80ரூ. வயற்காடு முதல் வான் மழைவரைதினம் நடக்கும் அவலங்களை மனம் தொட்டு உரசும் கவிதைகளாக வடித்திருக்கும் நூல். கைக்கு கனம் இல்லா புத்தகம், மனதை கனக்கச் செய்கிறது. நன்றி: குமுதம்,17/10/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

உடல் உள்ளம் ஆன்மா

உடல் உள்ளம் ஆன்மா, ஏ.எம். ஜேம்ஸ், ஓவியா பதிப்பகம், பக். 500, விலை 390ரூ. உடலும் உள்ளமும் தூய்மையாக இருந்தாலே பரிசுத்தமான ஆன்மாவை உணர முடியும். அந்த இலக்கில் இந்நூலை வாசிக்க ஆரம்பிக்கலாம். பல்வேறு மத நூல்கள், அறிஞர் பெருமக்களின் அறிவுரைகள், இந்துமத ஆன்மிகப் பெரியவர்கள், ஏசுநாதர் போதனைகள், அண்ணல் நபிகள் நாயகத்தின் பொறுமையைப் பறைசாற்றும் கட்டுரை.. இத்துடன் திருக்குறள், பாரதியாரின் அமுத மொழிகளையும் தலைப்புக்கு ஏற்றவாறு கலவையாகத் தந்து வியக்க வைக்கிறார் நூலாசிரியர். சமய நல்லிணக்கத்துக்கான மிகச் சிறந்த நூலாகவும் இது விளங்குகிறது. […]

Read more

ஒச்சாவும் ஒத்தக்காது ஆடும்

ஒச்சாவும் ஒத்தக்காது ஆடும், மதுரை பாலன், ஓவியா பதிப்பகம், பக்.144, விலை 120ரூ. நூலாசிரியர், திரைத்துறையில் பணியாற்றி வருபவர். அவரது சிறுகதைகள், திரைப்படம் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகின்றன. காட்சிகள் நகரும் விதம் அருமை. காதல் ஆகட்டும், ஜாதி மோதல் ஆகட்டும் எதைப் பற்றியும் நம்மை உசுப்பி விடும் விதத்தில் கூறிச் செல்கிறார். பாலியல் தொழிலாளியின் அவல வாழ்வைச் சொல்லும், ‘சுழல்’, ஜாதிக் கலவரங்களைச் சொல்லும், ‘தீண்டாமை’ மற்றும் ‘அடங்கா நெருப்பு’, மனைவியின் கடந்த காலத்தை ஒரு சந்தேகக் கணவன் கிளறிப் பார்ப்பதைச் சொல்லும், ‘எதிர்மறை’ […]

Read more

அமரனின் கவிதாவெளி

அமரனின் கவிதாவெளி, ஓவியா பதிப்பகம், விலை 250ரூ. இது கவிஞர் அமரனின் 400 ஹைக்கூ கவிதைகளின் அழகான தொகுப்பு. பக்கங்கள்தோறும் கவிதைகள் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக அத்துடன் ஆங்காங்கே வண்ணவண்ணப் படங்கள் விதவிதமாக, இயல்கருதி, இருப்பினும் இயல்பில் பின்றி, நம் சட்டைகளைப்போல, புத்தக அட்டைகளைப் போல. இவரது கவிதைகள் எளிய உயிர்களின் மீது அன்பையும் இயற்கை நட்பையும் சமூகச் சாடல்களையும் ஆழ்மன்த் தேடல்களையும் கொண்டிருக்கின்றன. அலைகள் ஆர்ப்பரிப்பு கையில் தேநீர் கோப்பையுடன் அமைதியான நான்! இதுதான் அமரன் – அமரத்துவம் பகலில் அலைகளின் முன்பும் இரவில் […]

Read more

மைதானம்

மைதானம் (விளையாட்டுக் கட்டுரைகள்) , சந்திரா மனோகரன், ஓவியா பதிப்பகம், பக்.144, விலை  ரூ.100. கிரிக்கெட்டில் தொடங்கி, கால்பந்து, டென்னிஸ், ஹாக்கி, தடகளம், செஸ், கார் பந்தயம் என பல்வேறு விளையாட்டுகளை பற்றி இந்நூல் அலசுகிறது. மேற்கண்ட விளையாட்டுகளுடன் தொடர்புடைய உலகக் கோப்பைகள், ஒலிம்பிக் போட்டி, ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் போட்டி தொடர்பான விவரங்கள், அதில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களைப் பற்றியெல்லாம் நூலாசிரியர் விவரித்திருக்கிறார். டென்னிஸ் உலகின் ஜாம்பவானான ரோஜர் ஃபெடரர், இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, தமிழகத்தைச் சேர்ந்த கார் பந்தய […]

Read more

பாசங்கள் பலவிதம்

பாசங்கள் பலவிதம், சூடாமணி சடகோபன், ருக்மணி பதிப்பகம், பக். 144, விலை 80ரூ. பாசத்தை மையக்கருவாகக்கொண்டு, பலவிதமான பாசங்களை சிறுகதைகளாக வரைந்துகாட்டியிருக்கிறார் நூலாசிரியர். ஒரு சராசரி மனிதனுக்குள் இருக்கும் ஆசாபாசங்களின் பின்னணியில் இக்கதைகள் புனையப்பட்டுள்ளன. அதனால் படிப்போருக்கு கதையின் நெருக்கதை உணரும்படி உள்ளது. மனதிற்குள் பல காலங்களாக காரணமின்றி புதைக்கப்பட்டு கிடக்கும் பாசத்தை, வெளியில் கொண்டு வராததால் அல்லது கொண்டுவரத் தெரியாததால், அவன் அடையும் மன உளைச்சலையும் பரிதவிப்பையும் யதார்த்த கண் கொண்டு பார்த்துள்ளார் ஆசிரியர். மகனிடம் அன்பு காட்டத்தவறிய சொக்கலிங்கம் முதல், நோய் […]

Read more

தமிழர் தளபதிகள்

தமிழர் தளபதிகள், கா. கோவிந்தன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை 17, பக். 112, விலை 70ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-215-4.html மனித குலத்தில் போர் என்பது காலந்தோறும் நடந்துகொண்டே இருக்கிறது. போர்க் கருவிகளும், போர் முறைகளும் மாறியிருக்கிறதே தவிர போர் மறையவில்லை. இந்நூல் போர்ப்படை தளபதிகள் குறித்து சங்க இலக்கிய நூலின் வழி நின்று விவரிக்கிறது. மறைந்திருந்து மரத்துக்கு நீர் வார்க்கும் வேர்கள் போலவே போர்ப்படைத் தளபதிகள் திகழ்ந்தனர் என்பதை சரித்திர நிகழ்வுகளையும், சங்கத் தமிழ் பாடல்களையும், […]

Read more
1 2