மைதானம்
மைதானம் (விளையாட்டுக் கட்டுரைகள்) , சந்திரா மனோகரன், ஓவியா பதிப்பகம், பக்.144, விலை ரூ.100.
கிரிக்கெட்டில் தொடங்கி, கால்பந்து, டென்னிஸ், ஹாக்கி, தடகளம், செஸ், கார் பந்தயம் என பல்வேறு விளையாட்டுகளை பற்றி இந்நூல் அலசுகிறது. மேற்கண்ட விளையாட்டுகளுடன் தொடர்புடைய உலகக் கோப்பைகள், ஒலிம்பிக் போட்டி, ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் போட்டி தொடர்பான விவரங்கள், அதில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களைப் பற்றியெல்லாம் நூலாசிரியர் விவரித்திருக்கிறார்.
டென்னிஸ் உலகின் ஜாம்பவானான ரோஜர் ஃபெடரர், இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா, தமிழகத்தைச் சேர்ந்த கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், செஸ் உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த விஸ்வநாதன் ஆனந்த் என ஏராளமானோரைப் பற்றிய தகவல்கள் இடம்பெற்றிருப்பது சிறப்பு.
இந்தியாவில் முன்பிருந்த கால்பந்து அணிகள், அப்போது நடத்தப்பட்ட தேசிய அளவிலான போட்டிகள் ஆகியவை இப்போது காணாமல் போய்விட்டன, சர்வதேச ஹாக்கியில் இந்திய அணி உச்சத்தில் இருந்தது, இப்போது அது நலிந்து போனதைப் பற்றியெல்லாம் நூலில் விவரிக்கப்பட்டிருக்கிறது.
2002 முதல் 2015 வரையிலான காலங்களில் நடைபெற்ற முக்கிய விளையாட்டுப் போட்டிகள், உலகக் கோப்பை போட்டிகளைப் பற்றிய விவரங்களையெல்லாம் தெரிந்துகொள்ள இந்த நூல் உதவியாக இருக்கும்.
நன்றி: தினமணி, 6/6/2016.