காற்றின் கையெழுத்து

காற்றின் கையெழுத்து, பழநிபாரதி, விகடன் பிரசுரம், சென்னை – 2, பக்கம் 256, விலை 130 ரூ. பத்திரிகையாளராக இருந்து பாடலாசிரியரான கவிஞர் பழநிபாரதி எழுதிய 52 கட்டுரைகளின் தொகுப்புதான் இந்நூல். சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் சகலவிதமான அழுக்குகளையும் சாடும் பழநிபாரதியின் ஆக்ரோஷமான கோபம், படிப்பவர்களையும் தொற்றிக்கொள்கிறது. இதுவே இந்நூலின் வெற்றி. நகரமயமாதல் என்கிற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகளும், ரியல் எஸ்டேட் மாஃபியா கும்பல்களும், விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு அடித்துத் துரத்தி வாங்கும் பின்னணியை ‘காடு வெளையட்டும் பெண்ணே! நமக்குக் காலமிருக்குது […]

Read more

பீமாயணம் தீண்டாமையின் அனுபவங்கள்

பெண்ணெழுத்து களமும் அரசியலும், ச. விசயலட்சுமி, பாரதி புத்தகாலயம், 421, அண்ணாசாலை, சென்னை 18, விலை 70 ரூ.   தொண்ணூறுகளின் இறுதியில் பெண் கவிதை எழுத்தில் மிகப்பெரிய உடைப்பு ஏற்பட்டது. சொல்லும் பொருளும் புதிதாக, பல்வேறு வகைமைகளில் பெண் கவிஞர்கள் எழுதத் தொடங்கினார்கள். ஆனால் பெண்களின் கவிமொழியை முழுவதும் ஆராயும் விமர்சன நூல்கள் அதிகம் உருவாகாதது பெரும் குறையே. இச்சூழ்நிலையில் சமகாலப் பெண் கவிஞர்கள் குறித்து குட்டி ரேவதி எழுதியதைத் தொடர்ந்து வரும் புத்தகம் பெண்ணெழுத்து முக்கியமான வரவாகும். கவிஞர் ச. விசயலட்சுமி தனக்கேயுரிய […]

Read more

அன்புதான் அனைத்திற்கும் ஆதாரம்

தூரன் கட்டுரைகள், பெ. தூரன், கவுதம் பதிப்பகம், 2, சத்தியவதி நகர் முதல் தெரு, பாடி, சென்னை – 50, பக்கங்கள் 80, விலை 50 ரூ. ‘கற்ப காலத்தில் தூரக்குரல் கவிஞர்களின் நுட்பமான செவிகளில் இன்றே கேட்கிறது. மற்றவர்கள் நூற்றாண்டுகளுக்குப் பின் அறிந்து கொள்வதை, அவர்கள் இன்றே அறிந்து சொல்கிறார்கள்’ (ஹோம்ஸ்). ‘அப்பொழுதே உணராமற்போனோமே என்று வருந்தும் நிலை ஏற்படுவதற்கு முன்பே உலகம், காந்தியடிகளின் வழியைப் பின்பற்றி உய்வடைய வேண்டும்’ (ஐன்ஸ்டைன்), இப்படிக் கட்டுரைகள் தோறும் பல அறிஞர்களின் மேற்கோள்களுடன் எழுதப்பட்ட தூரனின் 15 […]

Read more

சரஸ்வதி – ஒரு நதியின் மறைவு

சரஸ்வதி – ஒரு நதியின் மறைவு, மிஷல்தனினோ, கிழக்கு பதிப்பகம், 177/103, அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை – 14, விலை 300 ரூ. இந்திய இதிகாசங்களில் ஒன்றான மஹாபாரதத்திலும், ஹிந்து மத வேதங்களிலும் வெகுவாகப் புகழப்பட்டிருக்கும் நதிகளில் ஒன்று சரஸ்வதி நதி. இந்தியாவின் வடமேற்கே பஞ்சாப், ஹரியானா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே உள்ள வறண்ட பிரதேசத்தில், சில ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஓடிய இந்த நதி, கால மாற்றங்களினால் பூமிக்குள் புதைந்து போனது. இந்நதி குறித்த பல்வேறு ஆய்வுகள் […]

Read more

ஸ்ரீ வைஷ்ணவம்

ஸ்ரீ வைஷ்ணவம், வேணு ஸ்ரீனிவாசன், கிழக்கு பதிப்பகம், 177/103, அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14,  விலை 200 ரூ.   ஸ்ரீ வைஷ்ணவம் என்பது ஏதோ ஒரு இனத்தாருக்கு மாத்திரமே உரியதாக எண்ணப்படுகிறது. அது அப்படியில்லை. எல்லோருமே ஸ்ரீ வைஷ்ணவனாகப் பிறப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் இவ்வுலகில் பிறந்த அத்தனை ஜீவன்களும் ஸ்ரீ வைஷ்ணவன் ஆகலாம் என சிவப்புக் கம்பளம் விரிக்கும் மதம் ஸ்ரீ வைஷ்ணவம்.   வேதகாலத்தில் இருந்து வைஷ்ணவம் தோன்றியது. தமிழ் இலக்கியங்கள் அதனைப் போற்றின. வாழ்க்கையோடு வைஷ்ணவம் எப்படியெல்லாம் […]

Read more

சிவ சாகரத்தில் சில அலைகள்

சிவ சாகரத்தில் சில அலைகள், தொகுப்பாசிரியர் – எஸ். கணேச சர்மா, சனாதன பப்ளிகேஷன்ஸ், சபரிசனாதன, 142, கிரீன்வேஸ் ரோடு, ஆர். ஏ. புரம், சென்னை – 28, விலை 40 ரூ. தமிழகத்தில் 20 ஆம் நூற்றாண்டில் அவதரித்த மகாபுருஷர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். அந்த மகா பெரியவரால், ‘என் தம்பி சாச்சு பிறவியிலேயே மஹான்’ என்று பாராட்டப் பெற்றவர் ஸ்ரீ சிவன் சார். அந்தளவிற்கு இவர் ஞானத்திலும், குணத்திலும், விசாலமான அறிவிலும், பற்றற்ற […]

Read more

பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப்பாடல்களே

பழந்தமிழ் இலக்கியங்கள் நாட்டுப்புறப்பாடல்களே, முனைவர் துளசி இராமசாமி, விழிகள் வெளியீடு, சென்னை – 42, விலை 700 ரூ. தமிழின் தொன்மையான சங்கப்பாடல்கள் அனைத்தும் நாட்டுப்புறப்பாடல்களே. இவை பாணர்களோ, புலவர்களோ பாடியது அல்ல. அவை அனைத்தும் மக்கள் பாடியவை. சங்ககாலப் புலவர்கள் எனக் கூறப்படும் புலவர் பெயர்கள் அனைத்தும் கற்பனையே. சமணர்கள் தமிழகம் வந்து தங்கள் மதத்தைப் பரப்ப முற்பட்டபோது மக்கள் (தமிழ்) மொழியில் புழங்கிய நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுத்து வெளியிட்டனர். இதுவே பின்னர் சங்க இலக்கியம் என அழைக்கப்பெற்றது. அகநானூறு, புறநானூறு, நற்றிணை, நெடுந்தொகை […]

Read more

மண்ணில் உலவிய மகான்கள்

மண்ணில் உலவிய மகான்கள், க.துரியானந்தம், எல். கே. எம். பப்ளிகேஷன்ஸ், பக்கம் 120, விலை 50 ரூ. மகான்கள் கடவுளுக்கு மிக நெருக்கமானவர்கள். பரம்பொருளை ஆழமாகத் தியானித்தபடி இருப்பதால், அவர்களின் தெய்வீக ஆற்றல் ஒப்பற்றதாகத் திகழ்கிறது. மனித உருவில் நடமாடிய மகான்களின், திவ்ய சரிதங்களை அறிவதும் பரம சுகத்தை அளிக்கிறது. அப்படி இந்நூலில் காலணா காசை மக்களிடம் வசூல்செய்து, கோவில் திருப்பணிகள் செய்த பாடகச்சேரி சுவாமிகள், ராமநாமஜெய மகிமையை மக்கள் மனதில் பதித்த போதேந்திர சுவாமிகள், வள்ளிமலை சுவாமிகள், ரமணரையே அடையாளம் காட்டிய சேஷாத்ரி சுவாமிகள், […]

Read more

சீர்காழி மூவர்

சீர்காழி மூவர், டாக்டர் சுதா சேஷய்யன், எல்.கே.எம். பப்ளிகேஷன்ஸ், சென்னை – 17, பக்கம் 264, விலை 120 ரூ. ஆன்மிகச் சொற்பொழிவுகளிலும், சிறந்த கூட்டங்களில் தொகுப்புரையாற்றுவதிலும் வல்லவரான ஆசிரியர் ஒரு மருத்துவர். தமிழ் பக்தி, கலாசாரம் என்பதை இணைத்து, இந்த நூலில் புகழ்பெற்ற மூவர் இசையை அழகாக விவரித்திருக்கிறார். சீர்காழி மூவர் என்று அழைக்கப்பட்ட, முத்துத்தாண்டவர், மாரி முத்தா பிள்ளை, மற்றும் அருணாசலக் கவிராயர் ஆகியோர் பெருமைகளை விளக்குகிறது இந்த நூல். சீர்காழி என்றால் ஞானசம்பந்தர் என்ற நினைவும், அடுத்ததாக, தமிழ் இசை வளர்த்த […]

Read more

தமிழ் மொழி வரலாறு

தமிழ் மொழி வரலாறு, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்கம் 312, விலை 140 ரூ. பழமை மிக்க தமிழ்மொழியின் பரிணாம வளர்ச்சி, மற்ற திராவிட மொழிக்குடும்பங்களுக்குத் தாய் போன்றது, மூலமாய் உள்ள திராவிடமொழி, தென் திராவிட மொழிகளும், தமிழும் ஆகிய தலைப்புகளில், ஒப்பீட்டு நோக்கில் தமிழறிஞர் தெ.பொ.மீ. ஆய்வு நெறியில் இந்நூலை எழுதியுள்ளார். மலைக்குகைகளில் உள்ள கல்வெட்டுகளின் மொழி, தொல்காப்பியத் தமிழில் உள்ள ஒலியன் இயல், உருபன் இயல், சங்க காலத் தமிழ், பல்லவர், சோழர், நாயக்கர் காலத்தில் இருந்த தமிழ், தமிழின் […]

Read more
1 2 3 6