மண்ணில் உலவிய மகான்கள்

மண்ணில் உலவிய மகான்கள், க.துரியானந்தம், எல். கே. எம். பப்ளிகேஷன்ஸ், பக்கம் 120, விலை 50 ரூ. மகான்கள் கடவுளுக்கு மிக நெருக்கமானவர்கள். பரம்பொருளை ஆழமாகத் தியானித்தபடி இருப்பதால், அவர்களின் தெய்வீக ஆற்றல் ஒப்பற்றதாகத் திகழ்கிறது. மனித உருவில் நடமாடிய மகான்களின், திவ்ய சரிதங்களை அறிவதும் பரம சுகத்தை அளிக்கிறது. அப்படி இந்நூலில் காலணா காசை மக்களிடம் வசூல்செய்து, கோவில் திருப்பணிகள் செய்த பாடகச்சேரி சுவாமிகள், ராமநாமஜெய மகிமையை மக்கள் மனதில் பதித்த போதேந்திர சுவாமிகள், வள்ளிமலை சுவாமிகள், ரமணரையே அடையாளம் காட்டிய சேஷாத்ரி சுவாமிகள், […]

Read more

ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை

ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை, நாவலர் ஏ. இளஞ்செழியன், விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-02, விலை 95ரூ இங்கே தி.மு.க. இருப்பதைப்போல இலங்கையிலும் தி.மு.க. இருந்தது என்பதே பலருக்கும் தெரியாது. பெரியாரின் தலைமையை ஏற்று திராவிடர் கழகம் இங்கே இருந்தபோது இலங்கையிலும் அது உதயமானது. பெரியாரிடம் இருந்து முரண்பட்டு அண்ணாவும் அவரின் தம்பிமார்களும் விலகி திராவிட முன்னேற்றக் கழகம் கண்டபோது, இலங்கையிலும் அது தொடர்ந்தது. இங்கே, அரசியல் கட்சியாக தி.மு.க. மாறியபோது, அங்கே ஒரு மாற்றுச் சிந்தனை ஒலித்தது. ‘திராவிட’ என்று […]

Read more