ஜான் கென்னடி கொலையானது எப்படி

ஜான் கென்னடி கொலையானது எப்படி?, சிவதர்ஷினி, விகடன் பிரசுரம், சென்னை, பக். 120, விலை 70ரூ. அமெரிக்காவில் ஜான் கென்னடி கொலை செய்யப்பட்டது ஒரு மாபெரும் சோக நிகழ்ச்சி. ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டத்தில் இருந்து கொலை வழக்கு விசாரணை முடியும் வரை, நடந்த விவகாரங்கள் என்ன என்பதை விவரமாக சொல்கிறது இந்தப் புத்தகம். உலகமே வியந்து போற்றும் அமெரிக்க ஜனாதிபதிகளின் உயிர்களுக்கு எந்தெந்த நேரத்தில் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது என்பதைப் பற்றி எல்லாம் இதில் நூலாசிரியர் விளக்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்தக் கொலை வழக்கு […]

Read more

கல்கியின் சிறுகதை

கல்கியின் சிறுகதை, பாகம்  2, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, பக். 640, விலை 345ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-226-7.html புதினம், சிறுகதை, கவிதை, கட்டுரை என பன்முகத்திறமைகளைப் பெற்றிருந்ததோடு, வளரும் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாகவும், விளங்கிய கல்கியின் 40 சிறுகதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் பாங்கர் விநாயக ராவ் என்ற நாடகமும் இ8ணைக்கப்பட்டுள்ளது. தேவகியின் கணவன், பவானி பி.ஏ.பி.எல்., புன்னை வனத்துப் புலி, மாடத்தேவன் சனை போன்றவை நீண்ட சிறுகதைகளாகும். விடுதலைப் போரில் நேதாஜியின் வீரதீரங்களை நினைவுகூரும் அமர […]

Read more

சிற்பியின் படைப்புலகம்

சிற்பியின் படைப்புலகம், முனைவர் இரா. மோகன், முனைவர் நிர்மலா மோகன், வானதி பதிப்பகம், பக். 198,விலை 100ரூ. பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியத்தின் பன்முக படைப்புகளை படம் பிடித்துக் காட்டும் பத்து முத்தான கட்டுரைகளே இந்த புத்தகம். பாரதிதாசன் போற்றிய படைப்பாளியான சிற்பியின் படைப்புத்திறனை தங்கள் ஆய்வு திறத்தாலும் படைத்து அளிக்கும் திறமையாலும், சொல் ஆற்றலாலும், நமக்க விருந்து படைக்கின்றனர். ஆய்வுக் கட்டுரைகள் படிப்போருக்கு இது சுவாரஸ்யம் தரும். சிற்பியின் பல புத்தகங்களை படித்த உணர்வு, இந்த ஒரு புத்தகத்தை படிக்கும்போது கிடைக்கிறது. -ஜிவிஆர். நன்றி: […]

Read more

சுதந்திர வேங்கை

சுதந்திர வேங்கை, கவுதம நீலாம்பரன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 312, விலை 220ரூ. பூலித்தேவனின், வீர வரலாற்றுப் பின்னணியில் அமைந்துள்ள சரித்திர நாவல். மதுரையை ஆண்ட கடைசி நாயக்க மன்னரான விஜயரங்க சொக்கநாத நாயக்கரால், பூலித்தேவனின் வீரம் மெச்சப்படுகிறது. காலமாற்றம், ஆற்காட்டு நவாபுகளால் ஏற்படும் அரசிய்ல மாற்றம், ஆங்கிலேயர் கை ஓங்குதல், பாளையக்காரர்களின் எதிர் யுத்தம் மற்றும் வீழ்ச்சி எல்லாம் விரிவாகப் பேசப்படுகிறது இப்புதினத்தில். நவாப் மற்றும் ஆங்கிலேயர் சார்பில், நெல்லைச் சீமையில் வரி வசூலிப்பு தர்பார் நடத்தும் மருதநாயகம், பூலித்தேவனை அடக்கவோ, […]

Read more

துன்பங்களை இன்பங்களாக மாற்றும் மனவியல் உத்திகள்

துன்பங்களை இன்பங்களாக மாற்றும் மனவியல் உத்திகள், ஜே.எஸ். ஏப்ரகாம், நர்மதா பதிப்பகம், சென்னை, பக். 160, விலை 60ரூ. மனோபாவத்தை மாற்றிக்கொண்டால், பிரச்னைகள் குறையும் என்பதை, மன இயல் முறையில் விளக்கும் நூல் இது. துன்பங்களை எதிர்கொண்டால், அதை இயல்பாக வெல்லலாம் என்ற, பல கருத்துகளும் இதில் உள்ளன. நன்றி: தினமலர், 13/4/2014.

Read more

கண்ணன் கழல்கள் பணிமினோ

கண்ணன் கழல்கள் பணிமினோ, எஸ். சுதர்சனம், ஸ்ரீ வேதாந்த தேசிக வித்யா டிரஸ்ட், விலை 100ரூ. கண்ணனின் பாலலீலைகளை, ஆழ்வார்கள், ஆச்சார்யார்கள் பார்வையில், எழுதி பல தகவல்களை மனதில் பதியவைக்கும்விதம் சிறப்பானது. ஆயர்பாடியில் யசோதை கண்ணனை பாலகனாக கண்டு மகிழ்ந்த அனுபவம், காலம் காலமாக போற்றப்படும் உண்மை. நந்தன், யசோதை பெற்ற, அந்த பாக்கியத்தை கண்ணனின் தந்தையான வசுதேவரும், தாய் தேவகியும் அடையவில்லை. யசோதை பெற்ற இன்பத்தை பெற இயலவில்லையே என்று புலம்புகிறாள் தேவகி. நந்தன் பெற்றனன், நல்வினையில்லா நாங்கள் கோன் வசுதேவன் பெற்றிலனே […]

Read more

அவர்கள் அபாயத்தில் வாழ்ந்தார்கள்

அவர்கள் அபாயத்தில் வாழ்ந்தார்கள், மன்மதநாத் குப்தா, கி. இலக்குவன், அலைகள், பக். 560, விலை 320ரூ. இந்தியா சுதந்திரம் பெற, காந்திஜி அகிம்சை வழியில் போராடியபோது, அவர் முறைக்கு முற்றிலும் எதிரான வழியில் புரட்சியாளர்கள் பலரும் போராடினர். பகவத்சிங், சந்திரசேகர ஆசாத் போன்ற தீவிர புரட்சியாளர்கள் உறுப்பினராய் இருந்த அந்த அமைப்பு, இந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிக் அசோசியேஷன் என்று, பிற்காலத்தில் பெயர் பெற்றது. ஆரம்ப காலத்திலிருந்தே காந்தியின் வழியில் நம்பிக்கை இழந்தவர் இந்நூலின் மூல ஆசிரியரான மன்மதநாத் குப்தா. அவரது, 13வது வயதிலேயே முதல் […]

Read more

சங்கீத மும்மூர்த்திகள்

சங்கீத மும்மூர்த்திகள், என். கணேசன், பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், பக். 80, விலை 75ரூ. இசையால், இறைவனை இசைய வைத்து, இறைவனை மட்டுமல்லாமல் கேட்பவர் அனைவரையும் அன்றும் இன்றும் என்றும் பரவசப்படுத்த முடிந்த சங்கீத மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் தியாகராஜ சுவாமிகள், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் ஆகியோரது வாழ்க்கைச் சரிதங்களை எத்தனைபேர் எழுதி, எத்தனை முறை படித்தாலும் அலுக்கவே அலுக்காது. அந்த வகையில் இந்நூலாசிரியர், அவர்களது சரிதங்களை, மிக எளிய அழகான முறையில், அற்புதமாக எழுதியிருக்கிறார். இத்துடன் தியாகராஜ சுவாமிகளிடம் அபார […]

Read more

தட்டுங்கள் திறக்கும்

தட்டுங்கள் திறக்கும், இரா. வைத்தியநாதன், நர்மதா பதிப்பகம். விலை 70ரூ. முதலில் நாம் மாற வேண்டும். பிறகுதான் மற்றவர்களை மாற்ற முன்வரவேண்டும் போன்ற பல்வேறு சுயமுன்னேற்ற கருத்தகள், அறிஞர்கள் கருத்துகளின் அடிப்படையில் விரிவாக தரப்பட்டிருக்கின்றன. நன்றி: தினமலர், 13/4/2014.   —-  

Read more

மறைக்கப்பட்ட இந்தியா

மறைக்கப்பட்ட இந்தியா, எஸ். ராமகிருஷ்ணன், விகடன் பிரசுரம், பக். 352, விலை 275ரூ. தமிழ் நவீன இலக்கிய எழுத்தாளர், திரைப்படம், பத்திரிகை, நாடகம் என பல தளங்களில் இயங்கி வருபவர் இந்நூலாசிரியர். ஜுனியர் விகடனில் எனது இந்தியா எனும் தலைப்பில் தொடராக வெளிவந்து நிரம்ப வரவேற்பைப் பெற்றது இது. வரலாற்று நிகழ்வுகளை உயிர்ப்பாகவும், வியப்பாகவும், விறுவிறுப்பாகவும், சமூக அக்கறையோடும் இந்நூலில் பதிவு செய்துள்ளார். தமிழில் இத்தகைய நூல் இதுவரை வெளிவந்ததில்லை. ஆதலின் இது ஒரு புதிய முயற்சி. நாட்டு விடுதலைக்காக ரகசிய வானொலி நடத்தியதால், […]

Read more
1 2 3 9