தமிழ் இலக்கியம் வளர்த்த பெண் எழுத்தாளர்கள்

தமிழ் இலக்கியம் வளர்த்த பெண் எழுத்தாளர்கள்,  டி.வி. ராதாகிருஷ்ணன், கங்கை புத்தக நிலையம், பக்.120, விலை ரூ.100. சங்க காலம் தொடங்கி தற்காலம் வரை பெண்கள் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும், ஆண் எழுத்தாளர்களை விட பெண் எழுத்தாளர்கள் மிக மிகக் குறைவு. இதற்கு பெண்களின் குடும்பச் சூழ்நிலை, சமூகத்துக்கு கட்டுப்பட வேண்டிய நிர்ப்பந்தம், குடும்பத்தாரே எதிர்ப்பு தெரிவிப்பது, நேரமின்மை, சுதந்திரமின்மை முதலிய பல காரணங்களைக் கூறலாம். இத்தனையையும் தாண்டி அன்றைக்கு ஓரளவு படித்த பெண்கள் சிலர் சுதந்திரப் போராட்ட காலத்திற்கு முன்பிலிருந்தே எழுதியதோடல்லாமல், […]

Read more

மதாம்

மதாம், மு.ராஜேந்திரன், அகநி வெளியீடு, பக். 336, விலை ரூ.400. ஆனந்தரங்கப் பிள்ளை எழுதிய நாள்குறிப்பை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட வரலாற்று நாவல் இது. 1742 முதல் 1754 வரை புதுச்சேரி கவர்னராக இருந்த ஜோசப் துயூப்ளேவின் மனைவி ழான் சீமாட்டியை மையப்படுத்தி நிகழ்ந்த சம்பவங்களை வரிசைக் கிரமமாகத் தொகுத்து சுவாரஸ்யமான நாவலாக உருவாக்கியிருக்கிறார் நூலாசிரியர். இந்திய வம்சாவளித் தாய்க்கும், ஐரோப்பிய தந்தைக்கும் மகளாக பிறந்தவர்தான் ழான். தனது 13-ஆவது வயதில் தன்னை விட வயதில் மிகவும் மூத்த வேன்சான் என்ற பிரெஞ்சு வணிகரை […]

Read more

வைரமுத்து வரை

வைரமுத்து வரை, பேராசிரியர் சு.சண்முகசுந்தரம், காவ்யா, விலை 1600ரூ. இமாலயச் சாதனை என்று பாராட்டும்வண்ணம் 1550 பக்கங்களைக் கொண்ட இந்தப் பிரம்மாண்ட நூல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 1931-ஆம் ஆண்டு முதல் 2020 -ஆம் ஆண்டு வரை தமிழ் சினிமாப் படங்களுக்குப் பாடல்கள் எழுதிய அத்தனைபேர் பற்றிய விவரமும் இதில் தரப்பட்டு இருக்கிறது. ஒரே ஒரு பாடல் எழுதியவரைக் கூட விட்டுவிடாமல், அனைவரைப் பற்றிய தகவல்களையும் பதிவு செய்து இருப்பது வியப்பளிக்கிறது. காலவரிசைப்படி, ஒவ்வொரு பாடலாசிரியர் பற்றிய குறிப்பு, அவர் எழுதிய பாடல் வரிகளில் காணப்படும் […]

Read more

மனிதன் நினைப்பது ஒன்று

மனிதன் நினைப்பது ஒன்று, அசோக் யெசுரன் மாசிலாமணி, மாசி பப்ளிகேஷன்ஸ், பக்.152,  விலை ரூ.130. ஜமீன்தார் முறை நம்நாட்டில் ஒழிக்கப்பட்டுவிட்டாலும், பழைய ஜமீன்தார்கள் செல்வ வளத்தோடும், பாரம்பரிய மரியாதைகளுடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களைப்பற்றிய நாவல் இது. பாரம்பரியமான வாழ்க்கைமுறையை மேற்கொள்ளும் பெரிய ஜமீன், நவீன கலாசாரத்தில் மூழ்கிக் கிடக்கிற தன் மகனைப் பற்றிக் கவலைப்படுகிறார். சின்ன ஜமீனுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர். பல வருடங்களுக்குப் பிறகு, சின்ன ஜமீனின் மனைவி கர்ப்பம் தரிக்கிறாள். உறவினர் ஒருவரின் மரணத்தின் காரணமாக, பெரிய ஜமீனும் அவருடைய மனைவியும் […]

Read more

நாழிக் கூழும்… மொளகாயும்

நாழிக் கூழும்… மொளகாயும், சி.அன்னக்கொடி, கோதை பதிப்பகம்,  பக்.140, விலை ரூ.140. முழுக்க முழுக்க வட்டாரப் பேச்சு வழக்கிலேயே அமைந்துள்ள 23 சிறுகதைகளின் தொகுப்பு. நாகரிக வளர்ச்சியில்பேச்சு வழக்கிலிருந்து மறைந்து போன பல வார்த்தைகள் சிறுகதைகளில் கையாளப்பட்டுள்ளன. கிராமத்து வாழ்வியல், அதிலும் எளிய பாமர மக்களின் வாழ்வியல் என்றாலே சோகம் மட்டுமே நிரம்பியிருக்கும் என்ற வழக்கமான பாணி இத்தொகுப்பில் உள்ள கதைகளில் இல்லை. தொகுப்பு முழுக்க வரும் கதை மாந்தர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணத்துடன் அமைந்து நம்மை வசியப்படுத்துகின்றனர். கிராமியக் கதைகள் என்பதால் சொலவடைகளுக்குப் […]

Read more

திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புகள்

திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புகள்: ஓர் ஆய்வு, அ.நிகமத்துல்லாஹ்,  அ.நிகமத்துல்லாஹ், பக்.368, விலை 350. நூலாசிரியர் தனது இரண்டாவது முனைவர் பட்ட ஆய்வுக்காகச் சமர்ப்பித்த ஆய்வேட்டின் நூல் வடிவம். திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புகள் 1937 முதல் 2011 வரை 14 வெளிவந்துள்ளன. அவற்றில் 12 மொழிபெயர்ப்புகளை ஆய்வுக்காக நூலாசிரியர் தேர்ந்தெடுத்திருக்கிறார். திருக்குர்ஆன் திரும்பத் திரும்ப ஏன் தமிழில் மொழிபெயர்க்கப்படுகிறது? யாருக்காக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது? எந்தவிதமான நெறிமுறைகள், உத்திகளைப் பின்பற்றி மொழிபெயர்த்திருக்கிறார்கள்? மூலத்துக்கு மாற்றமின்றி இருத்தல், வடிவத்தைவிட கருத்துக்கு முன்னுரிமை தருதல் உள்ளிட்ட மொழிபெயர்ப்புக் கோட்பாடுகள் பின்பற்றப்பட்டுள்ளனவா? தமிழில் […]

Read more

ஊஹானில் தொடங்கிய ஊரடங்கு

ஊஹானில் தொடங்கிய ஊரடங்கு, திண்டுக்கல் ஜம்பு, அழகு பதிப்பகம், பக்.180, விலைரூ.180; கரோனா தீநுண்மியின் தோற்றம், பரவுதல், பாதிப்பு குறித்த நூலாசிரியருடைய கருத்துகள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த பிரபலங்கள் குறித்த தகவல்களும் உள்ளன. பொதுவாகவே சீன அரசைப் பொறுத்தவரை மனித உயிர்கள் புல்லுக்குச் சமம். இதில் அந்நாட்டினுடைய குடிமக்களும் அடக்கம் என்று சீனாவைப் பற்றி கூறும் நூலாசிரியர், ஊஹான் ஆய்வகத்தில் உணவு போட்டு வளர்த்து, பின் உலகம் முழுவதும் கலாட்டா பண்ணச் சொல்லி சீனாக்காரன் ஏவிவிட்ட கூட்டமான்னு சீனாக்காரனுக்கும் அந்த […]

Read more

இந்திய இலக்கியத்திற்கு கு.சின்னப்ப பாரதியின் பங்களிப்பு

இந்திய இலக்கியத்திற்கு கு.சின்னப்ப பாரதியின் பங்களிப்பு(கட்டுரைத் தொகுப்பு) , பாரதி புத்தகாலயம், பக்.224, விலை ரூ.150. தமிழ் இலக்கிய உலகுக்கு இடதுசாரி இயக்கம் வழங்கிய மிகப் பெரிய கொடை கு. சின்னப்ப பாரதி. கவிஞராகவும், புனைவுப் படைப்பாளியாகவும் இவர் எழுதியிருக்கும் நூல்கள் அனைத்துமே சர்வதேச அளவில் கொண்டாடப்படுகின்றன. தமிழகத்தில் அல்லாமல் கேரளத்திலோ, மேற்கு வங்கத்திலோ கு. சின்னப்ப பாரதி பிறந்திருந்தால், அவருக்குத் தரப்பட்டிருக்கும் அங்கீகாரமும், கெளரவமும் பன்மடங்கு அதிகம். கொண்டாடப்படும் எழுத்தாளராக இருந்திருப்பார். கு.சி.பா. என்று பரவலாக அறியப்படும் கு. சின்னப்ப பாரதி அளவிற்கு, […]

Read more

இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை?

இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை?, டி.தருமராஜ், கிழக்கு பதிப்பகம், பக்.176, விலை ரூ.180. சமுதாயத்திற்கு ஆட்சி அதிகாரத்திலிருந்து விலகி நிற்கிற பொது பிம்பங்கள் அவசியம். அப்படிப்பட்ட பொது பிம்பமாக இளையராஜா இருக்கிறார். அதனால் அவர் முதல்வர் வேட்பாளராக மாட்டார் என்பதை விளக்குகிறது நூலின் தலைப்பைக் கொண்ட கட்டுரை. இந்நூலில் 12 கட்டுரைகள்அடங்கியுள்ளன. ஏற்கெனவே தமிழ்த் திரைப்படப் பாடல்கள் தமிழ் மக்களின் மனதில் ஏற்படுத்திய தாக்கங்கள் எவை? இளையராஜா இசை அமைத்த பாடல்கள் அவற்றிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை இந்நூலில் உள்ள பல கட்டுரைகள் […]

Read more

கரோனாவை வெற்றி கொள்வோம்

கரோனாவை வெற்றி கொள்வோம், டாக்டர் கு. கணேசன், தமிழ் திசை,விலைரூ.200.   ‘தினமலர்’ உட்பட இதழ்களில் கொரோனா குறித்தும், விழிப்புணர்வு ஏற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், தடுப்பூசியின் தேவை பற்றியும் எழுதி குவித்தவர் டாக்டர் கணேசன். இவரது கைவண்ணத்தில், 51 கட்டுரைகளின் தொகுப்பு நுால். கொடிய தொற்றின் அத்தனை அம்சங்களையும் எளிய தமிழில் அலசியுள்ளார். கொரோனா குறித்த சந்தேகங்களுக்கு பதில் இந்த நுாலில் இருப்பது ஆச்சரியம். ஒரு பதிலையும் விட்டு வைக்காமல் முழுமையாக எழுதியிருக்கிறார். நோய் பற்றி முழுமையாக எழுதப்பட்டிருப்பதால், இது மருத்துவ நுால் […]

Read more
1 2 3 8