தாயில்லாமல் நான் இல்லை

தாயில்லாமல் நான் இல்லை, சம்சுல் ஹூதா பானு, கோதை பதிப்பகம், பக்.204, விலை ரூ.200. ஒவ்வொருவருக்கும் தனது குழந்தைப் பருவம் குறித்த முதல் நினைவு பசுமரத்தாணிபோல மனதில் பதிந்திருக்கும். சிலருக்கு வாழ்நாளெல்லாம் அந்நினைவு பசுமையாக இருக்கும். பலருக்கு ரண வேதனையாக இருக்கும். அந்தப் பலரில் ஒருவராக தனது வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளார் இந்நூலாசிரியர். மூன்று அண்ணன்கள், ஓர் அக்காவுக்குப் பிறகு ஐந்தாவது குழந்தையாக பெண்ணாகப் பிறந்த நூலாசிரியர், குழந்தைப் பருவத்திலேயே தாயைப் பறிகொடுத்துவிடுகிறார். வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டும் இன்று சிறந்த குடும்பத் தலைவியாகப் பரிணமித்துள்ளார். […]

Read more

ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம்

ஒரு செக்யூலரிஸ்டின் வாக்குமூலம், ஸ்ரீதர் சுப்ரமணியம், கோதை பதிப்பகம், விலை: ரூ.180 மதச்சார்பின்மை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கையா இல்லையா என்னும் விவாதம் தீவிரமாக முன்னெடுக்கப்படும் காலத்தில் அரசியலிலும் நிர்வாகத்திலும் மதச்சார்பின்மையைக் கடைப்பிடித்தல் என்னும் கோட்பாட்டின் முக்கியத்துவத்தையும், அதனால் உலகுக்குக் கிடைத்த பயன்களையும், மனித குலம் அடைந்த முன்னேற்றங்களையும் விளக்கும் நூல் இது. மதச்சார்பின்மை என்றால் என்ன என்னும் அடிப்படை விளக்கத்துடன் தொடங்கும் இந்நூல், மதச்சார்பின்மையால் விளைந்த நன்மைகளை விளக்கும் ஐந்து அத்தியாயங்களுடன் நிறைவடைகிறது. இடையில் உள்ள அத்தியாயங்கள் மதச்சார்பின்மைக்கு நேரெதிர் கொள்கையான […]

Read more

நாழிக் கூழும்… மொளகாயும்

நாழிக் கூழும்… மொளகாயும், சி.அன்னக்கொடி, கோதை பதிப்பகம்,  பக்.140, விலை ரூ.140. முழுக்க முழுக்க வட்டாரப் பேச்சு வழக்கிலேயே அமைந்துள்ள 23 சிறுகதைகளின் தொகுப்பு. நாகரிக வளர்ச்சியில்பேச்சு வழக்கிலிருந்து மறைந்து போன பல வார்த்தைகள் சிறுகதைகளில் கையாளப்பட்டுள்ளன. கிராமத்து வாழ்வியல், அதிலும் எளிய பாமர மக்களின் வாழ்வியல் என்றாலே சோகம் மட்டுமே நிரம்பியிருக்கும் என்ற வழக்கமான பாணி இத்தொகுப்பில் உள்ள கதைகளில் இல்லை. தொகுப்பு முழுக்க வரும் கதை மாந்தர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணத்துடன் அமைந்து நம்மை வசியப்படுத்துகின்றனர். கிராமியக் கதைகள் என்பதால் சொலவடைகளுக்குப் […]

Read more