சின்னத்தாய் காவியம்

சின்னத்தாய் காவியம், கே.எஸ்.கே.நடேசன், ஓவியா பதிப்பகம், பக்.208, விலை ரூ.200. அருகிலுள்ள குக்கிராமத்தில் தொடங்கும் இந்த நாவல், சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய சமூக ஏற்றத் தாழ்வுகளை விவரிக்கிறது.அதனால் ஏற்பட்ட வடுக்களோடு பஞ்சம் பிழைக்கச் சென்று,முன்னேற்றம் அடைந்த ஒரு குடும்பத்தின் வெற்றியையும் சித்திரிக்கிறது. உழைப்புதான் உயர்வை தரும் என்ற நம்பிக்கையை வாசிப்பவர்கள் மனதில் ஆழமாகப் பதிவு செய்கிறது. பொது கிணற்றில் தண்ணீர் எடுக்க சில பிரிவு மக்களை அனுமதிக்க மறுப்பதை சின்னத்தாய் கதாபாத்திரம் எதிர்க்கிறது. சாதியக்கொடுமைகளுக்கு எதிரான சிந்தனையைத் தூண்டுகிறது நூல். நாவலின் […]

Read more

வழிநெடுக வைரங்கள்

வழிநெடுக வைரங்கள், பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி,விகடன் பிரசுரம், பக்.240, விலை ரூ.210. சங்க கால நூல்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களில்- இக்கட்டான சூழ்நிலைகளில் – கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை வலியுறுத்தி உள்ளது. அவற்றை இந்நூல் விளக்குகிறது. மனித வாழ்க்கையில், பின்பற்ற வேண்டிய நெறிகள் நிறைய உள்ளன. ஆனால், கோபம், பொறாமை, புறம் பேசுதல் ஆகியவை இல்லாத வாழ்க்கையை மனிதன் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்திய சங்க கால இலக்கியங்களில் வள்ளுவரும், ஒளவையாரும் கொடுத்துள்ள அறிவுரைகள், நீதி நூல்கள் கூறும் நன்னெறிகள் என நம் சான்றோர்கள் விட்டுச் […]

Read more

ஓர் இந்திய இஸ்லாமியரின் இதயத்திலிருந்து மன் கி பாத்

ஓர் இந்திய இஸ்லாமியரின் இதயத்திலிருந்து மன் கி பாத், வேலூர் எம்.இப்ராஹிம், கிழக்குப் பதிப்பகம், பக்.160, விலை ரூ.180. மதவெறி மிகுந்திருக்கும் ஆபத்தான காலகட்டத்தில் ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றாக மிளிர்கிறார் நூலாசிரியர். ஒருகாலத்தில் தீவிர பாஜக எதிர்ப்பாளராக இருந்த அவர், சில ஆண்டுகளாக பாஜகவின் மீது நல்லெண்ணத்தை உருவாக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன்மூலம், தேசிய நீரோட்டத்திலிருந்து பிரிந்து செல்ல விழைபவர்களைச் சிந்திக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறார். இது எளிய செயலல்ல. இந்த மத ஒற்றுமைப் பணியில் ஈடுபடுவதால் இவரது குடும்பமே சமுதாயரீதியாக ஒதுக்கிவைக்கப்பட்டது; […]

Read more

இந்த மண்ணில் விளைந்த மகத்தான சிந்தனை

  இந்த மண்ணில் விளைந்த மகத்தான சிந்தனை, வி.சண்முகநாதன்; விஜயா பதிப்பகம், பக்.192; விலைரூ.150. வேதங்களின் அரிய சிந்தனைகளை சாதாரணமக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நூலாசிரியர் 21 அத்தியாயங்களில் விளக்கியிருப்பது வியக்க வைக்கிறது. ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களின் சாரம்சத்தை, குறள் போல சுருக்கி அதன் பதங்கள், சூக்தங்களை குறிப்பிட்டிருப்பது பாராட்டுக்குரியது. காயத்ரி மந்திரம் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால், அது எந்த வேதத்தில் எத்தனையாவது மண்டலத்தில் எந்த வகைப் பாடலாக உள்ளது என்பது ரத்தினச் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. அதைப் படிப்போருக்கு […]

Read more

என் வாழ்க்கைச் சுவடுகள்

என் வாழ்க்கைச் சுவடுகள், ச.கணபதிராமன், பக். 256, நன்கொடை ரூ.1. தென்காசித் திருவள்ளுவர் கழகத் தலைவர் ச.கணபதிராமன் தனது வாழ்க்கைப் பயணத்தை ஒரு வரலாறாக எழுதியிருக்கிறார்.தென்காசி வட்டத்தைச் சேர்ந்த அய்யாபுரம் எனும் சிறு கிராமத்தில்பிறந்து, தென்காசி, சிதம்பரம், சென்னை, புதுச்சேரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய ஊர்களில், தான் ஆற்றிய கல்விப் பணி, இலக்கியப் பணி, சமூகப் பணிகளை நினைவின் அடுக்குகளிலிருந்து அள்ளித் தந்திருக்கிறார். தென்காசி திருவள்ளுவர் கழகத்துக்கு வருகை தந்த ரா.பி.சேதுப்பிள்ளையின் அறிமுகம், அதைத் தொடர்ந்து அவரது உதவியால் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் […]

Read more

முறையிட ஒரு கடவுள்

முறையிட ஒரு கடவுள், சர்வோத்தமன் சடகோபன், மணல்வீடு, பக்.160, விலை ரூ.150.   சர்வோத்தமன் சடகோபன் எழுதிய முறையிட ஒரு கடவுள் எனும் சிறுகதைத் தொகுப்பு அருமையான உரையாடலை நம்முள் நிகழ்த்துகிறது. வார்த்தைகளில் சிக்கல்களைக் கொடுக்காமல் கதைகளைப் பரிமாறுவதில் தன்னை சிறந்த எழுத்தாளராக நிலைநிறுத்தியுள்ளார் சடகோபன். மொத்தம் 13 கதைகள் இடம்பெற்றுள்ள இந்த சிறுகதைத் தொகுப்பை வாசிக்கும் போது ஏற்படும் எதிர்பார்ப்பும், ஆவலும் அனைத்து கதைகளிலும் நம்மை விடாமல் பீடித்திருக்கின்றன. மணல்வீடு, காலச்சுவடு ஆகிய இலக்கிய இதழ்களில் தொடங்கி தமிழினி, தளம் உள்ளிட்ட இணைய […]

Read more

பெரியபுராண வாயில்

பெரியபுராண வாயில், சாமி. தியாகராசன், சிவாலயம், பக்.136, விலை ரூ.120.  சேக்கிழார் பெருமான் இயற்றியருளிய பெரியபுராணத்தில் பாயிரம் என்ற பெயரில் பத்துப் பாயிரங்கள் (பதிகங்கள்) உள்ளன. பாயிரம் என்ற சொல்லுக்கு வரலாறு என்று பொருள். அதாவது, நாயன்மார்களின் வரலாற்றை விரித்துரைப்பதால் இப்பெயர் பெற்றிருக்கலாம். நூலில் சொல்லப்பட்ட செய்திகளைப் பாயிரத்தைப் படித்து சுருக்கமாகத் தெரிந்து கொள்ள முடியும். அதனால், பாயிரம் என்பது கோயிலுக்குக் கோபுரம் போல நூலுக்கு கோபுரமாக (முதன்மையானதாக) அமைகிறது. சேக்கிழார் பெருமானுக்கு சிவபெருமானே அசரீரியாக “உலகெலாம்” என்று அடியெடுத்துக் கொடுத்த பெரியபுராணத்தில் உள்ள […]

Read more

நலம் தரும் நாற்பது

நலம் தரும் நாற்பது,  இரா.இராஜாராம்; ஜீவா படைப்பகம், பக்.140; ரூ.140;   தினமணி, கலைக்கதிர், புதிய தென்றல், ஆனந்தயோகம், மஞ்சரி ஆகிய இதழ்களில் வெளிவந்த 40 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சிறந்த வாழ்க்கை வாழ என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கும் வகையில் அமைந்த கட்டுரைகள். அமைதியும் ஆனந்தமும் நிறைந்ததாக மனம் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தும் கட்டுரை, அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதையும் விளக்குகிறது. காலம் எவ்வளவு அருமையானது என்பதை விளக்கும் நூலாசிரியர், பணியிடங்களுக்குத் தாமதமாகச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார். ” […]

Read more

ஞாபகச் சுவடு

ஞாபகச் சுவடு,  ஆ.ப.செந்தில்குமார், காக்கை பிரதிகள்,  பக்.90, விலை ரூ.100. இதழியல்துறையில் அனுபவமிக்க நூலாசிரியர், அவர் சந்தித்த மனிதர்களைப் பற்றிய, சம்பவங்களைப் பற்றிய அறிமுகமாக இந்நூலை எழுதியிருக்கிறார். ஓவியர் ஆதிமூலம், விஸ்வம், நெடுஞ்செழியன், பொன் ரகுநாதன், ஓவியர் ஸ்ரீநிவாஸ் ஆகியோர் குறித்த தகவல்கள் வியக்க வைக்கின்றன. “மரணம் சில குறிப்புகள்”  கட்டுரை, ” மரணம் என்பது என்ன? நிரந்தரமாகத் தூங்குதல் தவிர, வேறொன்றுமில்லை” என்கிறது. “பிரபஞ்சன் எனும் ஆளுமை” கட்டுரையில், “ரஷ்ய எழுத்தாளரைப் பாருங்கள், ஜப்பானிய எழுத்தாளரைப் பாருங்கள் என்று ஆங்காங்கே குரல்கள் அவ்வப்போது […]

Read more

இலக்கியத்தில் விருந்தோம்பல்

இலக்கியத்தில் விருந்தோம்பல்,  இறையன்பு; கற்பகம் புத்தகாலயம், பக்.200; ரூ.175; விருந்தினரை வரவேற்க புன்னகையே பூங்கொத்து; முகப்பொலிவே பொன்னாடை; கண் மலர்ச்சியே கற்கண்டு; வரவேற்கும் விதம் வழிப்பந்தல் என விருந்தோம்பல் குறித்து தமிழிலக்கியங்களில் உள்ள பல முக்கியத் தகவல்களை இந்த நூல் பதிவு செய்கிறது. “விருந்தோம்பல் இலக்கணம்”, “அகநானூற்றில் விருந்தோம்பல்”, “நீதி நூல்களில் விருந்தோம்பல்”, “விருந்தோம்பல் அன்றும் இன்றும்” என இருபது அத்தியாயங்களில் விருந்தோம்பல் குறித்து குறிப்பிடப்படும் பல சுவையான செய்திகள் வாசகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கின்றன. குழந்தை பிறப்பு, பெயர் வைத்தல், காது குத்தல், திருமண […]

Read more
1 2 3 8