வழிநெடுக வைரங்கள்
வழிநெடுக வைரங்கள், பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி,விகடன் பிரசுரம், பக்.240, விலை ரூ.210.
சங்க கால நூல்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களில்- இக்கட்டான சூழ்நிலைகளில் – கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை வலியுறுத்தி உள்ளது. அவற்றை இந்நூல் விளக்குகிறது. மனித வாழ்க்கையில், பின்பற்ற வேண்டிய நெறிகள் நிறைய உள்ளன. ஆனால், கோபம், பொறாமை, புறம் பேசுதல் ஆகியவை இல்லாத வாழ்க்கையை மனிதன் வாழ வேண்டும் என்பதை வலியுறுத்திய சங்க கால இலக்கியங்களில் வள்ளுவரும், ஒளவையாரும் கொடுத்துள்ள அறிவுரைகள், நீதி நூல்கள் கூறும் நன்னெறிகள் என நம் சான்றோர்கள் விட்டுச் சென்றுள்ளவற்றை வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை இந்த நூல் வலியுறுத்துகிறது.
ஒவ்வொருவரும் பேணிக் காக்க வேண்டிய தனி மனித ஒழுக்கம், வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குத் தேவையான வழிமுறைகள் என அனைத்து வகையான போதனைகளையும் எளிதில் புரிந்து கொள்ளும்படி கண்முன் விரியும் காட்சிகளோடு சொல்லியிருப்பது நூலின் சிறப்பு அம்சமாகும். இந்நூலின் வாயிலாக திருவள்ளுவர், ஒளவையார், பாரதியார், கணியன் பூங்குன்றனார், வள்ளலார், அழ. வள்ளியப்பா, பாரதிதாசன் என அனைவரையும் நம் கண் முன் நிறுத்தியுள்ளார் நூலாசிரியர். பெற்றோர் – பிள்ளைகள், கணவன் – மனைவி, ஆசிரியர் – மாணவர், தலைவன் – தொண்டன், அலுவலர் – ஊழியர் என ஒவ்வோர் உறவு முறையிலும் உள்ள சிக்கல்களைப் பற்றியும் அவற்றிற்கான தீர்வுகள் பற்றியும் இந்நூல் விளக்குகிறது. அன்றாட வாழ்வுக்குத் தேவையான நல்ல கருத்துகளை எளிய சொற்களில், இனிய நடையில் உயிர்ப்புள்ள உதாரணங்களோடு எடுத்துச் சொல்லும் முயற்சிதான் “வழிநெடுக வைரங்கள்.”
நன்றி: தினமணி, 22/2/2021.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031031_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818