விடியலின் கனவுகளுடன்

விடியலின் கனவுகளுடன், கி. சங்கீதா, கேளீர் பதிப்பகம், விலை 50ரூ. நாற்பத்தியேழு தலைப்புகளுடன் உள்ள இக்கவிதை நூல், குடும்ப உறவுகள், பள்ளிக்கூடம், கல்லுாரி என உணர்வுகளைத் துாண்டும் கற்பனையுடன் விரிவடைந்து திருமணம், முதியோர் இல்லம் வரைச் செல்கிறது. ‘படிக்காத மேதையாய் இருந்து படித்த மேதைகளை உருவாக்கினார் அந்த பொதுவுடைமைக் காவலர்’ என காமராஜரையும், ‘மெல்லிய ரோஜாக்களை நேசிக்கும் மின்னிய குணம் கொண்டவர்’ என ஜவகர்லால் நேருவையும் விளக்குகிறது. கரியமில வாயு கலக்காத பூமி வேண்டும், பிறக்குமா இன்னொரு பூமி என இயற்கையுடன் கூடிய விழிப்புணர்வை […]

Read more

தாம்பத்திய வழிகாட்டி அந்தப்புரம்

தாம்பத்திய வழிகாட்டி அந்தப்புரம், டாக்டர் டி. நாராயண ரெட்டி, விகடன் பிரசுரம், பக். 184, விலை 125ரூ. தம்பதியரிடையே பல்வேறு தீவிரமான உளவியல் சிக்கல்கள் தோன்றவும், இருவரிடையே சண்டை சச்சரவுகள், விரோதம் தோன்றவும், தாம்பத்தியம் முறிவு படவும் முக்கியக் காரணமாக இருப்பது பாலியல் பிரச்னைகள் தான்! ஆண், பெண் இரு பாலரையும் பதின்ம வயது துவங்கி, முதுமை எல்லை வரை குறுக்கு வெட்டாக ஆராய்ந்து, அனைத்து விதமான செக்ஸ் சந்தேகங்களுக்கும், வாசகர்கள் எழுப்பிய ஐயங்களுக்கும், சரியான விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார் டாக்டர் நாராயண ரெட்டி. டாக்டர் […]

Read more

தேயிலைப் பூக்கள்

தேயிலைப் பூக்கள், சி. பன்னீர்செல்வம், அகரம், விலை 175ரூ. கண்ணீராலும், வறுமையாலும், அவலங்களாலும், இயற்கை அல்லாத மரணங்களாலும் நிரம்பிய வாழ்க்கை இலங்கை மலையகத் தமிழர்களின் வாழ்க்கையாகும். அவர்களது வாழ்க்கையை எழுத்தாளர் சி. பன்னீர்செல்வம் புதுக்கவிதையில் காவியமாகப் படைத்துள்ளார். மலையக மக்கள் சிந்திய செந்நீரும், கண்ணீரும் நம் நெஞ்சில் சோக அலைகளை எழுப்புகிறது. நன்றி: தினத்தந்தி, 31/5/2017.

Read more

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா, டாக்டர் எஸ். சுப்புலட்சுமி, மகம் பதிப்பகம், விலை 60ரூ. மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளை தலைப்பாக வைத்து டாக்டர் எஸ். சுப்புலட்சுமி எழுதிய சிறுகதைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. இவர், கவிஞர் சுப்பு ஆறுமுகத்தின் மகளாவார். கதைகளில் கருத்தும், கவித்துவமும் நிறைந்துள்ளன. நன்றி: தினத்தந்தி, 31/5/2017.

Read more

ஜெயகாந்தனின் இருபதாம் நூற்றாண்டு இலக்கிய சாசனங்கள்

ஜெயகாந்தனின் இருபதாம் நூற்றாண்டு இலக்கிய சாசனங்கள், சேதுபதி, மீனாட்சி புத்தக நிலையம், விலை 300ரூ. தமிழ் இலக்கிய உலகில் தனிப் பாதை அமைத்து அதில் உலா வந்தவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். அவரது படைப்புகளும், பேச்சும், சிந்தனையும் தனித்துவம் மிக்கவை. இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய சாகசனங்களாக விளங்கும் ஜெயகாந்தனின் சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள், கட்டுரைகள், பேட்டிகள் என அனைத்தும் பெருந்தொகுதிகளாக வெளியிடப்பட்டன. அந்த விழாக்களில் பங்கேற்ற வாசகர்களின் உள்ளத்தின் இலக்கியப் பதிவாக இந்த நூலை பேராசிரியர் முனைவர் சொ.சேதுபதி தொகுத்து வழங்கியுள்ளார். அனைத்து விழாக்களிலும் பங்கேற்று […]

Read more

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், குகன், வானவில் புத்தகாலயம், விலை 140ரூ. மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கையை ஆரம்பத்தில் ஆதரித்த நேதாஜி, பிறகு “வெள்ளையருக்கு எதிராக ஆயுதம் ஏந்தினால்தான் சுதந்திரம் கிடைக்கும்” என்று முடிவுக்கு வருகிறார். “நீ போக்கும் பாதை சரி இல்லை” என்று காந்தி எச்சரிக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு, பட்டாபி சீத்தாராமையாவை நிறுத்துகிறார், காந்தி. யாரும் எதிர்பாராத வகையில் பட்டாபியை எதிர்த்து நேதாஜி போட்டியிடுகிறார். வெற்றியும் பெறுகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த காந்தி, “பட்டாபியின் தோல்வி, என் தோல்வி” என்று கூறுகிறார். […]

Read more

ஞான ஒளி பரப்பும் யோகசூத்திரம்

ஞான ஒளி பரப்பும் யோகசூத்திரம், ஜெகாதா, காளீஸ்வரி பதிப்பகம், விலை 90ரூ. ஞான ஒளியை நமக்கு கற்றுத்தரும் யோக சூத்திரத்தினை எளிமையாக அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் தொகுக்கப்பட்ட நூல். திருமந்திரமும் யோக நெறியும், திருமூலர் கூறும் பிற யோகங்கள், ஆராக்கியம் தரும் ஆசனங்களும் தெளிவாக பயனுள்ள வகையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. நன்றி: தினத்தந்தி, 31/5/2017.

Read more

பாரதி பத்துப்பாட்டும் பாரதிதாசன் பதிற்றுப்பத்தும்

பாரதி பத்துப்பாட்டும் பாரதிதாசன் பதிற்றுப்பத்தும்,சந்தனத் தென்றல் பதிப்பகம், விலை 100ரூ. பாரதியாரால் பாடப்பட்ட தமிழ்த்தாய், பராசக்தி, பாஞ்சாலி, கண்ணன், குயில், புதுமைப்பெண், பாப்பா ஆகிய ஒவ்வொருவரும் பாரதியைப் பற்றி பாடுவதாக அமைந்த பாடல். இதற்கு முத்தாய்ப்பாகப் பாரதியும் தன்னைப் பற்றி பாடுவதாகப் பாடலை கலைமாமணி கே.பி. அறிவானந்தம் நிறைவு செய்துள்ளார். பாரதியைப் பத்துப்பேர் பாடியதால் ‘பாரதி பத்துப்பாட்டு’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பாவேந்தர் பாரதிதாசனின் நூல்களான பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, குறிஞ்சித்திட்டு போன்ற 10 தலைப்புகளில் ஒவ்வொன்றைப் பற்றியும் […]

Read more

சாதி தேசத்தின் சாம்பல் பறவை

சாதி தேசத்தின் சாம்பல் பறவை, ‘எவிடன்ஸ்’கதிர், விகடன் பிரசுரம், விலை 175ரூ. சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும். காவல் துறை வன்முறைகள், ஜாதிய வன்கொடுமைகள், பெண்கள் மீதான கொடுமைகள் என கள ஆய்வு செய்து, செய்திகளோடு மட்டும் அல்லாமல் ஆதாரப் படத்துடன் கூடிய, 29 நீண்ட கட்டுரைகளைக் கொண்டது இந்நூல். ஜாதியக் கொடுமைகளுக்கு எதிராக மட்டும் அல்லாமல், பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராகவும் இந்நூல் குரல் கொடுக்கிறது. சமூக நீதிக்காகவும், மனித உரிமைக்காகவும் இந்நூல் பதியப்பட்டு உள்ளது. – முனைவர் […]

Read more

தெய்வங்கள் வணங்கிய தெய்வத் திருத்தலங்கள்

தெய்வங்கள் வணங்கிய தெய்வத் திருத்தலங்கள், தெள்ளாறு இ. மணி, சங்கர் பதிப்பகம், பக். 365, விலை 300ரூ. எத்தகைய நல்ல செயல்களைச் செய்தாலும், அதில் சிறிதளவாவது தீமை கலந்தே இருக்கும். தெய்வங்களின் செயல்கள் அனைத்தும் அதர்மத்தை அழிக்கக்கூடியவையாக இருக்கும். அந்தச் செயல்களின் காரணமாகவே அந்தத் தெய்வங்களை தோஷங்கள் பற்றி இருக்கின்றன. தம்மைப் பற்றிய தோஷங்களை நீக்குவதற்காகவும், ‘பேரானந்த நிலை’ என்பது செயலற்ற ஆன்ம தரிசனத்தில் தான் உள்ளது என்பதை உணர்த்துவதற்காகவும், தெய்வங்கள் மற்றொரு தெய்வத்தை வணங்கி நமக்கு வழிகாட்டி இருக்கின்றன எனக் கூறுகிறார் நூலாசிரியர். […]

Read more
1 2 3 9