ஊழலுக்கு ஒன்பது வாசல்

ஊழலுக்கு ஒன்பது வாசல், ப. திருமாவேலன், விகடன் பிரசுரம், விலை 205ரூ. கொள்கை அரசியல் என்று ஆரம்பித்து, கொள்ளை அரசியல் என்று ஆகியிருக்கிறது இன்றைய நாட்டு அரசியல் நிலவரம். ஊழலையும், முறைகேடுகளையும், மிகப் பெரிய அளவில் செய்வது என்பது அரசியல் சாகசம் என்றாகி விட்டது. நடைமுறை அரசியல் ஊழல்மயமானதாகவும், ஊழல் நடைமுறையாக ஆனதாகவும் ஆன இந்த காலக்கட்ட அவலங்களை விவரிக்கும் கட்டுரைகள் அடங்கியது இந்த நூல். நேர்மையானவர்கள் படித்து விட்டு மனம் குமுறலாம்! பாவம்… அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்? – மயிலை […]

Read more

ஏவுகணை தந்தை அப்துல் கலாம்

ஏவுகணை தந்தை அப்துல் கலாம், சிவரஞ்சன், மெர்குரிசன் பப்ளிகேஷன்ஸ், விலை 90ரூ. தோன்றின் புகழோடு தோன்றுக’ என்ற வள்ளுவரின் குறளுக்கு ஏற்ப, புகழோடு தோன்றி, எல்லார் உள்ளங்களிலும் வாழ்ந்து கொண்டிருப்பவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம். இவருடைய பிறப்பு முதல், மறைவு வரை உள்ள அனைத்து நிகழ்வுகளையும் எளிய நடையில் விளக்கியுள்ளார், ஆசிரியர் சிவரஞ்சன். பிறந்த இடம் புகழ் வாய்ந்த ராமேஸ்வரம். எளிய குடும்பத்தில் பிறந்த கலாம், பள்ளிப் பருவத்தில், ராமேஸ்வரம் கடற்கரைக்குச் சென்று, பறவைகள் பறக்கும் முறையை அறிந்து கொண்ட நிகழ்வு, பிற்காலத்தில் பறக்கும் போர் […]

Read more

இந்தியப் பயணம்

இந்தியப் பயணம், ஜெயமோகன், கிழக்கு பதிப்பகம், விலை 125ரூ. பயண நூல் படிப்பது என்பது ஒரு சுகமான அனுபவம். நாமும் நூலாசிரியருடன் பயணிப்பது போன்ற உணர்வு ஏற்படும். இந்நூல், இந்தியாவுக்குக் குறுக்கே ஜெயமோகனும், அவரின் ஆறு நண்பர்களும், 2008ல் மேற்கொண்ட பயண அனுபவம், நூலாக வெளி வந்துள்ளது. இந்நூலில் தாரமங்கலம், லெபாஷி, பெனுகொண்டா, தாட்பத்ரி, அகோபிலம், மகா நந்தீஸ்வரம், ஸ்ரீசைலம், நலகொண்டா, பாணகிரி, வாரங்கல், கரீம் நகர், நாக்பூர், போபால், சாஞ்சி, கஜுரஹோ, பீனா, வாரணாசி, சாரநாத், போத்கயா ஆகிய 18 இடங்களுக்குச் சென்று […]

Read more

வராக நதிக்கரைக் காதல்

வராக நதிக்கரைக் காதல், மோகனா சுகதேவ், ஸ்ரீ ஆனந்த நிலையம், விலை 140ரூ. முதல் தலைமுறைக் காதலையும், மூன்றாம் தலைமுறைக் காதலையும் ஒரு வராக நதிக்கரையின் பக்கத்தில் அமைந்திருக்கும் பெரிய குளத்தின் பகுதியின் உலவ விட்டிருக்கிறார் நாவலாசிரியை. அன்பும், தியாகமும், தேசபக்தியும் கலந்த ஒரு நவீனக் காதல் கதை. கதையின் நாயகன் செண்பகராமன் எப்படியெல்லாம் தன் வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்களைச் சந்திக்கிறான் என்பதை சுதந்திரப் போராட்டப் பின்னணியில் சுவைபடச் சொல்லி இருக்கிறார். இயற்கை விவசாயம் குறித்தும், நாவலாசிரியை பேசுகிறார். இயற்கை விவசாயத்துக்கு உடனே நாம் […]

Read more

இந்திய மொழிகளின் எழுத்துச் சீர்திருத்தம்

இந்திய மொழிகளின் எழுத்துச் சீர்திருத்தம், ராம்சபாபதி, அன்னராம் பதிப்பகம், விலை 150ரூ. தமிழ் மொழிக்கு சில எழுத்துச் சீர்த்திருத்தங்களை பெரியார் ஈ.வெ.ரா. அறிமுகம் செய்தார். முதல் – அமைச்சர் எம்.ஜி.ஆர். இருந்தபோது அதை அமல்படுத்தினார். இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளுக்கும் எழுத்து சீர்திருத்தம் கொண்டு வரலாம் என்று இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் ராம்சபாபதி கூறுகிறார். ஆலோசிக்க வேண்டிய விஷயம். நன்றி: தினத்தந்தி, 31/5/2017.

Read more

கடல் மரங்கள்

கடல் மரங்கள், மலையாளத்தில் வெள்ளியோடன், தமிழில்: ஆர்.முத்துமணி, முதற்சங்கு பதிப்பகம், பக்.88, விலை ரூ.70. ஈழவிடுதலைப் போராட்டத்தில் சிங்களர்களையும், மலாய்க்காரர்களையும் நம்பியிருக்கலாமே? எல்லாரையும் இணைத்துக் கொண்டு போராடியிருக்கலாமே? வியட்நாம் எல்லைப்புறப் பகுதியில் உள்ள கு ஆங் ஷி பகுதியைச் சீனா வலுக்கட்டாயமாகத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. தற்போது சிக்கிமையும், அருணாசல் பிரதேசத்தையும் இணைக்க வேண்டும் என்று கேட்பதைப் போல. இஸ்ரேலியர்கள் இஸ்லாமியர்களைக் கொன்று குவிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். இஸ்லாமியர்களை அதிக அளவில் கொன்று குவித்தவர்கள் இஸ்லாமியர்கள்தான். இன்னும் இவற்றைப் போல நிறைய அரசியல் விஷயங்கள் […]

Read more

மத்திய கால இந்திய வரலாறு

மத்திய கால இந்திய வரலாறு, சதீஷ் சந்திரா, வேட்டை எஸ். கண்ணன், பாரதி புத்தகாலயம், விலை 390ரூ. பொதுவாக நாம் வரலாறுகளை பின் தொடர்வதே இல்லை. ஆனால், அதுதான் நமக்கு மிகவும் அவசியமானது. இந்தப் புத்தகத்தில் இந்தியாவின் மத்திய கால வரலாறு விலாவாரியாக விவரிக்கப்படுகிறது. அவர்களின் கட்டிடக்கலை, வளர்ச்சி, வீழ்ச்சி எல்லாமே தெளிவாக எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. சதீஷ் சந்திராவின் பணி அவ்வளவு சிறப்பானது. மக்களுக்கு அணுக்கமாகவும், நெருக்கமாகவும் வாழ்ந்தவர்களின் இடம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. தெளிவாக வரலாற்றை பின் தொடர்வதில் சதீஷ் சந்திரா முன்னணியில் நிற்கிறார். தவிக்க விடாமல் […]

Read more

பயாஸ்கோப்

பயாஸ்கோப், கிருஷ்ணன் வெங்கடாசலம், சந்தியா பதிப்பகம், விலை 275ரூ. தமிழர்களின் வாழ்வைப் பொறுத்தவரை சினிமா முக்கியப்பகுதி. தான் விரும்பிய தமிழகமும் விரும்பிய 50 திரைப்படங்களின் சுவாரஸ்ய தகவல்களை தொகுத்திருக்கிறார் கிருஷ்ணன் வெங்கடாசலம். ‘சகுந்தலை’யில் ஆரம்பித்து ‘களத்தூர் கண்ணம்மா’ வரை விசாரணையும், பயணமுமாக போகிறார். அந்தந்த சினிமாவின் சிறு குறிப்பு, கதை, படம் தொடர்பான செய்தி, சுவாரஸ்யம் என நிரவி பரந்திருக்கிறது இந்தப் புத்தகம். எண்ணற்ற தகவல்கள். சினிமாவிற்கு வெளியே இருந்து கொண்டு இவ்வளவு தகவல்களைத் தொகுத்தளித்தது பெரிய சாதனை. இப்படங்களின் ஊடாகச் சென்று சந்தோஷப்பட்டவர்களுக்கும், […]

Read more

பெண்ணுக்கென்ன கொடுமை

பெண்ணுக்கென்ன கொடுமை, இதழாளர் அய்கோ, தனு பதிப்பகம், பக்.112, விலை 90ரூ. மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த நவீன காலப் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் பற்றியு புதிய கண்ணோட்டத்தை இந்நூல் தருகிறது. அதாவது ஒரு மடங்கு பெண்ணுரிமை கிடைத்தால், இருமடங்கு பெண் கொடுமை நடக்கிறது என்பதை துணிவுடன் வெளிக்காட்டும் நூல். பெண்ணுரிமைத் தளத்தில் இயங்கும் இருபாலருக்கும் இந்நூல் தேவை. நன்றி: குமுதம், 24/5/2017.

Read more

திருக்குர்ஆனில் அறிவியல் கூறுகள்

திருக்குர்ஆனில் அறிவியல் கூறுகள், ஹாஜியா டாக்டர் ஆ.ப.ஜெ.மு. நசீமா மரைக்காயர், நந்தினி பதிப்பகம், பக். 328, விலை 240ரூ. நூலாசிரியரின் முனைவர் பட்ட ஆய்வேடு நூலாக வந்துள்ளது. இஸ்லாமிய மெய்யியல், திருக்குர் ஆனின் அறிவியல் சார்ந்த கருத்துக்களையும் சிந்தனைகளையும் உள்ளடக்கியிருப்பதை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. திருக்குர்ஆன் தோற்றம், அறிவியல் பொருள் விளக்கம், ஆழமான ஆய்வாக உள்ளது. சமயத் திருமறைகளை விஞ்ஞான மனநிலையில் நின்று ஆராய்ந்துள்ளார். நன்றி: குமுதம், 24/5/2017.

Read more
1 2 3 4 9