ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு

ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு, ஜெயமோகன், தன்னறம் நுால்வெளி, விலைரூ.100. பிறக்கும் குழந்தையை, குருவாக பாவித்து எழுதப்பட்டுள்ள நுால். நெகிழ்ச்சி தருகிறது. மழலை உலகில் கற்றுக்கொள்ள பல்லாயிரம் உண்டு என்பதை அனுபவமாக வெளிப்படுத்துகிறது. அனுபவம் சுயம் சார்ந்து வெளிப்படுகிறது. மகிழ்ச்சியும், பிணைப்பும் நிறைந்த அன்பு வெளியைக் காட்டுகிறது. உணர்வின் தொடர்பை விளக்குகிறது. குழந்தையின் செயல்கள் மீது நுட்பமான அவதானம் வெளிப்பட்டுள்ளது. சிந்தனையைத் தொடும் வகையில் உள்ளது. – மலர் நன்றி: தினமலர், 4.4.21 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609இந்தப் […]

Read more

கலாச்சார இந்து

கலாச்சார இந்து, ஜெயமோகன்,  நற்றிணை பதிப்பகம், பக்.176, விலை ரூ.200. இந்து மதம் தொடர்பாக எழும் பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்கும் நூல். பெரும்பாலான மக்களின் கடவுள் குலதெய்வம்தானே, அவர்களை எப்படி இந்து என்று சொல்ல முடியும்? நாத்திகவாதத்துக்கும் இந்து மதத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? உருவ வழிபாடு தேவையா? பிரபஞ்சத்துக்கும் மதத்துக்கும் உள்ள இணைப்பு எது? கோயில்களில் உடலுறவுச் சிலைகள் இருப்பது சரியா? கருவறையின் பூஜை மந்திரங்களாக சம்ஸ்கிருதம் இருப்பது ஏன்? இந்து மதம் தொடர்பான இவை போன்ற பல கேள்விகளுக்கு நூலாசிரியர் […]

Read more

உச்ச வழு

உச்ச வழு, ஜெயமோகன்,  நற்றிணை பதிப்பகம், பக். 176, விலை ரூ.200. நூலாசிரியர் கடந்த இரண்டாண்டுகளில் எழுதிய 10 புதிய சிறுகதைகளின் தொகுப்பு. பெரும்பாலான கதைகள் படிமங்களையும், உருவகங்களையும் பயன்படுத்திப் பேசுகின்றன. டாப்சிலிப் காட்டுக்குள் பழைய பங்களாவில் செல்லிட பேசியும் இல்லாது தனியாகத் தங்கும் இளைஞனை மையமாகக் கொண்டு நகரும் கதை. அம்மாவின் இறப்புக்குக் கூட நேரில் போக முடியாத கடந்த காலம் அடர்ந்த கானக கும்மிருட்டில் அவனுக்கு நினைவில் வருவது யதார்த்தம். பகல் முடியக் கூடாது என்பதற்காக விமானத்திலேயே பயணம் செய்து கொண்டிருக்கும் […]

Read more

சொல்லி முடியாதவை

சொல்லி முடியாதவை,  ஜெயமோகன், நற்றிணை பதிப்பகம்,  பக். 160, விலை ரூ.180. நூலாசிரியர் தன் நண்பர்கள், வாசகர்களின் வினாக்களுக்கு எழுதிய விடைகளாக அமைந்த 27 கட்டுரைகளின் தொகுப்பு. ஆசாரங்கள் தேவையா? பண்டிகைகளைக் கொண்டாடத்தான் வேண்டுமா? குடும்ப உறவில் ஏன் இத்தனை வன்முறை? தற்கொலை தியாகமாக ஆகுமா? நம் பண்பாட்டுக்கென உடை உண்டா? கற்பு என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது? காதலர் தினக் கொண்டாட்டம் தேவையா? தீபாவளி யாருடையது? உள்ளிட்ட பல கேள்விகள் இடம் பெற்றுள்ளன. நிலத்தில் யார்க்கும் அஞ்சா நெறி கொண்டு தன் வாழ்க்கையைத் தானே […]

Read more

ஈழ இலக்கியம் – ஒரு விமர்சனப் பார்வை

ஈழ இலக்கியம் – ஒரு விமர்சனப் பார்வை, ஜெயமோகன், கிழக்கு பதிப்பகம், பக்.176, விலைரூ.155. நாப அய்யர். அதன் பின்னர் ஈழ இலக்கியத்தை ஈழப்போர் வழியாகவே அறிய நேர்ந்தது. ஈழப்போர் வழியாகவே ஈழ இலக்கியம் சார்ந்த இதழ்கள் உருவாகின. அவையே ஈழ இலக்கியம் பரவலாக அறிமுகமாக வழி வகுத்தது. ஈழத்தின் இலக்கியச் சிந்தனைகளை மு.தளையசிங்கம், கா.சிவத்தம்பி படைப்புகளின் வழியாகவும், சிறுகதையை அ.முத்துலிங்கம் படைப்புகளின் வழியாகவும், கவிதைகளை வில்வரத்தினம், சேரன் படைப்புகளின் வழியாகவும் நூலாசிரியர் ஆய்வு செய்துள்ளார். தத்துவத்தின் விளிம்பில் மெய்யியலில் சஞ்சரிப்பவர் தளையசிங்கம். ஒரு முற்போக்காளராக […]

Read more

நூறு நிலங்களின் மலை

நூறு நிலங்களின் மலை, ஜெயமோகன், கிழக்கு பதிப்பகம், பக்.128, விலை ரூ.130. இந்தியாவின் குறுக்கே நூலாசிரியரும் அவருடைய ஆறு நண்பர்களும் 2008 இல் மேற்கொண்ட பயணத்தின் பதிவு இந்த நூல். விமானத்தில் பெங்களூரில் ஏறி தில்லியில் இறங்கி மற்றொரு விமானத்தில் ஸ்ரீநகரை அடைவதாகத் தொடங்குகிறது பயணம். சோனாமார்க், கார்கில், ஸீரு சமவெளி, பென்ஸீலா கணவாய், லே நகரம், முல்பெக், நுப்ரா சமவெளி, யாராப்úஸா ஏரி, திங்கித் மடலாயம், சங்லா கணவாய், ஷே நகரம், மூர் சமவெளி, இமயமலைப் பகுதிகள், லே – மணாலி நெடுஞ்சாலை என […]

Read more

குகைகளின் வழியே

குகைகளின் வழியே,  ஜெயமோகன், கிழக்கு பதிப்பகம், பக். 142, விலை ரூ.150. இந்த நூல் ஒரு பயண அனுபவத் தொகுப்பு. ‘இதுவரை மேற்கொண்ட பயணங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இதுவரை சென்ற பயணம் மண்மீது ஊர்தல்; இது மண்ணுக்குக் கீழும் இருந்தது’ என்கிறார் நூலாசிரியர். சிபி,ஹேமாவதி, ராயதுர்க், கூட்டி, யாகி, பெலும் குகைகள் கண்டிக்கோட்டி, யாக்கண்டி குகைக்கோயில், உண்டவல்லி குகைகள், அக்கண்ண மதன குடைவரைக் கோயில், குண்டுபள்ளி குகைகள், கைலாஷ் குகைகள், தண்டே வாடா, குப்தேஸ்வர் குகைகள், பொர்ரா குகைகள் என நம்மையும் சக பயணியாக்கி விடுகிறார் நூலாசிரியர். […]

Read more

இந்தியப் பயணம்

இந்தியப் பயணம், ஜெயமோகன், கிழக்கு பதிப்பகம், விலை 125ரூ. பயண நூல் படிப்பது என்பது ஒரு சுகமான அனுபவம். நாமும் நூலாசிரியருடன் பயணிப்பது போன்ற உணர்வு ஏற்படும். இந்நூல், இந்தியாவுக்குக் குறுக்கே ஜெயமோகனும், அவரின் ஆறு நண்பர்களும், 2008ல் மேற்கொண்ட பயண அனுபவம், நூலாக வெளி வந்துள்ளது. இந்நூலில் தாரமங்கலம், லெபாஷி, பெனுகொண்டா, தாட்பத்ரி, அகோபிலம், மகா நந்தீஸ்வரம், ஸ்ரீசைலம், நலகொண்டா, பாணகிரி, வாரங்கல், கரீம் நகர், நாக்பூர், போபால், சாஞ்சி, கஜுரஹோ, பீனா, வாரணாசி, சாரநாத், போத்கயா ஆகிய 18 இடங்களுக்குச் சென்று […]

Read more

அருகர்களின் பாதை

அருகர்களின் பாதை, ஜெயமோகன், கிழக்குப் பதிப்பகம், பக். 272, விலை 250ரூ. இந்தியாவின் மறக்கப்பட்ட சமணத் தலங்களை தேடிச் செல்லும் ஒரு பயணம் இது. ஜெயமோகன் தனது நண்பர்கள் ஆறுபேருடன் ஈரோடு முதல் ராஜஸ்தான் வரை ஆறு மாநிலங்கள் வழியாக இதற்காகப் பயணப்பட்டிருக்கிறார். அறநிலைகளை சமணர்கள், இந்தியாவில்அமைத்திருந்தனர். அந்த சங்கிலி இன்றும் அறுபடாமல் அப்படியே இருப்பதை ஜெயமோகன் இப்பயணத்தின் வழி கண்டறிந்துள்ளார். பயணத்தின்போது தினமும் அவர் இணைய தளத்தில் எழுதியதன் தொகுப்பு இந்நூல். நன்றி: குமுதம், 29/3/2017.

Read more

இந்தியப் பயணம்

இந்தியப் பயணம், ஜெயமோகன், கிழக்கு, பக். 136, விலை 125ரூ. தான் கேள்விப்படும் விஷயத்தையே சுவாரசியமாக எழுதக்கூடியவர், ஜெயமோகன். தான் பார்த்த, உணர்ந்த, அனுபவித்த விஷயங்களை எப்படி எழுதுவார்? அப்படிப்பட்ட உணர்தலின் பதிவுதான், இந்தியப்பயணம். அவர், இந்தியாவின் சில பகுதிகளுக்கு, 2008ல், நண்பர்களுடன் ஒரு பயணத்தை மேற்கொண்டு, அதன் அனுபவங்களை, இணையத்தில் பதிவிட்டார். அது, அச்சாகி வந்துள்ளது, இது இந்தியா குறித்த நம் கண்களுக்கு, ஜன்னல் கதவை திறப்பதுபோல. நன்றி: தினமலர், 19/1/2017.

Read more
1 2