1984 சீக்கியர் கலவரம்

1984 சீக்கியர் கலவரம், ஜெ.ராம்கி, கிழக்கு, பக். 144, விலை 130ரூ. இந்த புத்தகத்தின் மையம், 1984ல் நடந்த, சீக்கிய கலவரம் என்றாலும், பஞ்சாப் குறித்த தெளிவான அறிமுகம், பிந்தரன்வாலேவின் எழுச்சி, ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார், இந்திரா படுகொலை என, அனைத்தையும் இந்நூல் விளக்குகிறது. ஆட்சியும், அரசியலும் என்ன செய்ய முடியும் என்பதை, இந்நூல் விவரிக்கிறது. நன்றி: தினமலர், 16/1/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/9789386737335.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

மெய்ப்பொய்கை

மெய்ப்பொய்கை, ருச்சிரா குப்தா, தமிழில் சத்தியப் பிரியன், கிழக்கு, விலை 300ரூ. இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளரான பிரேம்சந்த், மன்ட்டோ, புதுமைப்பித்தன், அம்ருதா ப்ரீதம், இஸ்மத் சுக்தாய், கமலா தாஸ் எனப் பலருடைய சிறுகதைகள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட பெண்களுடைய துயர்மிகு வாழ்வையும் இந்நூல் பதிவு செய்கிறது. நன்றி: தி இந்து, 7/1/2018.

Read more

ஹிட்லரின் வதை முகாம்கள்

ஹிட்லரின் வதை முகாம்கள், மருதன், கிழக்கு, பக். 232, விலை 200ரூ. அறம், சட்டம், சுதந்திரம், உரிமை, மனித நேயங்களை உடைத்து, அதில், வதைமுகாம்கள் எழுப்பப்படுகின்றன. இதற்கு, வலுவான பேரினம், வலுவற்ற சிற்றினத்தை நசுக்குவது என்னும் சித்தாந்தமே, பெரிதாக உள்ளது. நாஜிகள், உலக யூதர்களை, ஐரோப்பிய வதை முகாம்களில் அடைத்து சித்திரவதை செய்ததோடு அவர்களை கொன்றும் குவித்தனர். அப்படிப்பட்ட ஹிட்லரின் வதை முகாம்களை படம் பிடிக்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 19/1/2017.

Read more

இந்தியப் பயணம்

இந்தியப் பயணம், ஜெயமோகன், கிழக்கு, பக். 136, விலை 125ரூ. தான் கேள்விப்படும் விஷயத்தையே சுவாரசியமாக எழுதக்கூடியவர், ஜெயமோகன். தான் பார்த்த, உணர்ந்த, அனுபவித்த விஷயங்களை எப்படி எழுதுவார்? அப்படிப்பட்ட உணர்தலின் பதிவுதான், இந்தியப்பயணம். அவர், இந்தியாவின் சில பகுதிகளுக்கு, 2008ல், நண்பர்களுடன் ஒரு பயணத்தை மேற்கொண்டு, அதன் அனுபவங்களை, இணையத்தில் பதிவிட்டார். அது, அச்சாகி வந்துள்ளது, இது இந்தியா குறித்த நம் கண்களுக்கு, ஜன்னல் கதவை திறப்பதுபோல. நன்றி: தினமலர், 19/1/2017.

Read more