இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை

இந்தியா கண்டுபிடிக்கப்பட்ட கதை, மருதன், கிழக்குப் பதிப்பகம், பக். 440, விலை ரூ.475, சிந்து சமவெளி நாகரிகம் முதல் தற்போது வரை இந்தியாவின் வரலாற்றைப் பலர் பல்வேறு கோணங்களில் பதிவு செய்துள்ளனர். இந்தப் புத்தகம், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களின் பார்வையில் இந்தியாவின் வரலாற்றை விரிவாக எடுத்துரைக்கிறது. கிரேக்கரான ஹொரோடோட்டஸில் தொடங்கி, தீஷியஸ், நியார்கஸ், மெகஸ்தனிஸ், பாஹியான், யுவான் சுவாங், அல்பெரூனி, மார்க்கோபோலோ, இபின் பதூதா, நிக்கோலா காண்டி, வாஸ்கோடா காமா, சீகன் பால்கு எனப் பல வெளிநாட்டவர்களின் குறிப்புகள் இதில் விரிவாக உள்ளன. இந்தியாவுக்கு வருகை […]

Read more

ரொமிலா தாப்பர்

ரொமிலா தாப்பர் – ஓர் எளிய அறிமுகம், மருதன், கிழக்கு பதிப்பகம், பக். 176, விலை ரூ. 200. நம் காலத்தின் மாபெரும் வரலாற்றாய்வாளரான ரொமிலா தாப்பரின் எழுத்துகளை அறிந்தவர்களுக்குக்கூட அவரைப் பற்றிய விவரங்களும் பின்புலமும் அவ்வளவாகத் தெரிந்திருப்பதில்லை என்ற குறையைத் தீர்க்கத் தமிழில் வந்திருக்கிறது இந்த நூல். வாழ்க்கை, வரலாறு, உரையாடல் என்ற மூன்று பெரும் தலைப்புகளில் எளிய, ஆனால் ஓரளவில் விரிவாகவே ரொமிலா தாப்பர் பற்றி விவரிக்கிறார் ஆசிரியர் மருதன். தில்லியிலுள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் வளர்ச்சியில் ரொமிலாவின் பங்களிப்பை […]

Read more

அசோகர்

அசோகர், ஒரு பேரரசின் வாழ்வும் பண்டைய இந்தியாவின் வரலாறும், மருதன், கிழக்கு பதிப்பகம், பக்.272, விலை ரூ.300. பேரரசர் அசோகரின் வரலாறு, ஆய்வு நோக்கில் எழுதப்பட்டுள்ளது.   ‘அரியணை என்னுடையது என்றால் கடவுள்கள் அதை எனக்கு எப்படியாவது சொந்தமாக்கட்டும்’ என்று அறிவித்த அசோகர், பின்னாளில் தனது சகோதரர்களைக் கொன்று விட்டுதான் அரியணை ஏறினார் என்பதை பல்வேறு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. அரச பதவிக்கு வந்தவுடனேயே தனது வன்முறை ஆட்டத்தை அசோகர் தொடங்கிவிட்டதாக அசோகாவதனம் குறிப்பிடுகிறது. கையில் அகப்பட்ட அப்பாவிகளை விதவிதமாக வதைத்துக் கொல்வதற்காக கிரிகா என்பவனையும் […]

Read more

ரொமிலா தாப்பர்: ஓர் எளிய அறிமுகம்

ரொமிலா தாப்பர்: ஓர் எளிய அறிமுகம், மருதன், கிழக்குப் பதிப்பகம், விலை: ரூ.50. வரலாற்றாசிரியரின் வரலாறு மொழிபெயர்ப்பு நூல்கள், கட்டுரைகள் வழியாக ஏற்கெனவே தமிழுக்கு அறிமுகமாகியிருப்பவர் வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர். அவரது வாழ்க்கை வரலாற்றையும் வரலாற்றுக்கு அவர் செய்திருக்கும் பங்களிப்பையும் பற்றித் தெளிவாகவும் சுருக்கமாகவும் மருதன் எழுதியுள்ள நூல்தான் ‘ரொமிலா தாப்பர் ஓர் எளிய அறிமுகம்’. ரொமிலா தாப்பர் சிறு வயதில் காந்தியைச் சந்தித்தது, நேருவைச் சந்தித்தது போன்றவை குறித்தெல்லாம் மருதன் சுவைபட எழுதியிருக்கிறார். சம காலத்தில் மிகவும் கொண்டாடப்பட்ட, விமர்சிக்கப்பட்ட ஒரு வரலாற்று […]

Read more

தித்திக்கும் விருந்து

தித்திக்கும் விருந்து, மருதன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.80 தாகூர், சாவித்ரிபாய் புலே, மொஸார்ட், நியூட்டன், ஐன்ஸ்டைன், மக்சீம் கார்க்கி, புத்தர், பாரதி, லூயி பிரெயில் என்று இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 25 கட்டுரைகள் உங்களுக்கு விருந்து படைக்கக் காத்திருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையும் மாறுபட்ட கோணத்தில், எளிமையான மொழிநடையில், அழகான சொற்களைக் கோத்துத் தந்திருப்பதோடு ஆங்காங்கே நமக்குள் மென்முறுவல் பூக்கும் வகையில் நகைச்சுவையும் தூவித் தந்திருக்கிறார் மருதன். நன்றி: தமிழ் இந்து, 23/11/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை […]

Read more

மாயாபஜார்

மாயாபஜார், மருதன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.80 தாகூர், சாவித்ரிபாய் புலே, மொஸார்ட், நியூட்டன், ஐன்ஸ்டைன், மக்சீம் கார்க்கி, புத்தர், பாரதி, லூயி பிரெயில் என்று இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள 25 கட்டுரைகள் உங்களுக்கு விருந்து படைக்கக் காத்திருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையும் மாறுபட்ட கோணத்தில், எளிமையான மொழிநடையில், அழகான சொற்களைக் கோத்துத் தந்திருப்பதோடு ஆங்காங்கே நமக்குள் மென்முறுவல் பூக்கும் வகையில் நகைச்சுவையும் தூவித் தந்திருக்கிறார் மருதன். நன்றி: தமிழ் இந்து, 23/11/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் […]

Read more

ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்

ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர்,மருதன், கிழக்கு பதிப்பகம், விலை 200ரூ. அரிஸ்டாட்டில், அங்குலிமாலா, ஆப்பிரிக்கா, முள்ளம்பன்றி, அசோக என்று ரசிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் பல தலைப்புகளை அறிமுகம் செய்கிறது இந்நூல். கதை வடிவில் எளிமையாகவும் சுவையாகவும் எழுதப்பட்டுள்ளது. வாசிக்க மட்டுமல்ல, நம் உலகை நேசிக்கவும் இந்நூல் உதவும். நன்றி: பட்டம், தினமலர், 7/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/9789386737748.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

கடல் பயணங்கள்

கடல் பயணங்கள், மருதன், கிழக்கு பதிப்பகம், விலை 130ரூ. பயணிகளால்தான் பாதை உருவானது. அதுதான் உருண்டையான உலகின் இரு முனைகளை இணைக்க உதவியது. வாஸ்கோடகாமா, மார்கோபோலோ, கொலம்பஸ் என பன்னிரண்டுபேர் கடலோடிகளாகப் பயணித்து பல்வேறு சிரமங்களுக்கு இடையே கடல்வழிப் பாதைகளையும் அதன் வழிசென்று பல நாடுகளையும் கண்டுபிடித்த வரலாறு. கதைபோல் சொல்லப்பட்டிருப்பது சுவாரஸ்யம்! -ஆர்.நாகராஜன். நன்றி: குமுதம், 3/1/2018

Read more

கடல் பயணங்கள்

கடல் பயணங்கள், மருதன், கிழக்கு பதிப்பகம், பக்.144, விலை ரூ.130. உலக வரலாற்றை மாற்றியமைத்த கடல் பயணங்களின் வரலாற்றை எளிய நடையில் விவரிக்கும் நூல். வணிகம், புதையல், ஆராய்ச்சி, பொழுதுபோக்கு, தேடல் என பல்வேறு காரணங்களுக்காக எத்தனையோ மனிதர்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தாலும், சரித்திரத்தின் பக்கங்களை வசீகரித்த குறிப்பிடத்தக்க 13 பேரின் பயணங்கள் குறித்து இந்த நூல் பதிவு செய்திருக்கிறது. வாஸ்கோடகாமா போர்ச்சுகலில் இருந்து இந்தியாவைத் தேடி செயிண்ட் கேப்ரியல் என்ற கப்பலில் பயணிக்கிறார்; முதல் மூன்று மாதங்கள் நிலமே கண்ணில் படவில்லை. எங்கு திரும்பினாலும் […]

Read more

ஹிட்லரின் வதைமுகாம்கள்

ஹிட்லரின் வதைமுகாம்கள், மருதன், கிழக்கு பதிப்பகம், பக். 232, விலை 200ரூ. ஒரு உயிரின் அடிப்படை அம்சம் இனம் என்பது ஹிட்லரின் நம்பிக்கை. வரலாறு என்பது இனங்களுக்கு இடையிலான போராட்டமே தவிர வேறில்லை. எந்த இனம் வலுவானதோ அது தழைத்து நிற்கும். வலு குறைந்தது அழிக்கப்படுகிறது அல்லது அழிக்கப்பட வேண்டும். மதம், அறம், தார்மீகம் போன்றவை தடைக்கற்கள். இவையெல்லாம் யூதர்களின் கண்டுபிடிப்புகள் என்பது ஹிட்லரின் கருத்து. மேன்மையான நிலையை அடைய வேண்டுமானால், பலவீனமான இனத்தை மட்டுமல்ல, அது உருவாக்கிய சிந்தனைகளையும் சேர்த்தே அழிக்க வேண்டும் […]

Read more
1 2