இனி எல்லாம் நலமே

இனி எல்லாம் நலமே, டாக்டர் அமுதா ஹரி, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.200. பதின் பருவம் தொடங்கி, மாதவிடாய் நிற்றல் வரைக்கும் பெண்ணின் அகத்திலும் புறத்திலும் நிகழும் மாற்றங்களை அனை வருக்கும் புரியும் வகையில் எளிய மொழியில் விளக்கியுள்ளார் அமுதா ஹரி. இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழில் தொடராக வெளிவந்து வாசகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றன. இந்நூல் பெண்களுக்கானது ஆண்களும் அவசியம் படித்துத் தெரிந்துகொள்வதற்கானது. பதின்பருவ மகள் ஏன் அடிக்கடி தனிமையை நாடுகிறாள், […]

Read more

கொங்கு தேன்

கொங்கு தேன், சிவகுமார், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.225 நடிகர் சிவக்குமாருடன் ஒரு பயணம். திரைப்பட நடிகர் என்பதைத் தாண்டி சிவகுமார் எந்த ஒரு விஷயத்தையும் சுலபமாக எழுத்தில் கொண்டுவர நினைக்க மாட்டார். கொண்டுவந்துவிட்டார் என்றால் அது நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். ‘சிவகுமார் ஏன் எல்லோருக்கும் இனிய மனிதராக இருக்கிறார்?’ என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. இந்த எழுத்துகளைப் படிக்கிற ஒவ்வொருவருக்கும், அந்தக் காரணங்கள் ஒவ்வொன்றாகப் புரியும். குறிப்பாக அவர் நினைவாற்றல், நன்றியுணர்வு, பிறந்த இடத்தை மறக்காமல் இருக்கிற […]

Read more

உயிர் வளர்க்கும் திருமந்திரம் – 2

உயிர் வளர்க்கும் திருமந்திரம் – 2, கரு.ஆறுமுகத்தமிழன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.225 திருமந்திரம் திருமுறைகளில் வரிசைப்படுத்தப்பட்டாலும் அது முன்னிறுத்துவது மெய்யியல் விசாரணையைத்தான். உலகின் தோற்றத்தை, அதன் இயக்கத்தை, உயிரை, உடலை, உணர்வை விரிவாகப் பேசும் திருமந்திரம் சைவ சித்தாந்தத்துக்கு மட்டுமல்ல; தமிழ் சித்தர் மரபுக்கும் மூல நூல். ‘ஆனந்தஜோதி’ இணைப்பிதழில் வாரந்தோறும் இலக்கியமும் மெய்யியலும் பின்னிப் பிணைந்த தனிநடையில் கரு.ஆறுமுகத்தமிழன் எழுதி புத்தகமாக வெளியான முதல் தொகுப்பானது வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது இரண்டாம் பாகம் வந்திருக்கிறது. யோக […]

Read more

ஆதிச்சநல்லூர் வழக்கு எண் 13096/2017

ஆதிச்சநல்லூர் வழக்கு எண் 13096/2017, முத்தாலங்குறிச்சி காமராசு, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.260 அகழாய்வு என்றதும் கடந்த தலைமுறை வரை அறிந்தது சிந்துச் சமவெளி நாகரிகத்தை வெளிக்காட்டிய மொஹஞ்சதாரோ, ஹரப்பாதான். வேறெதுவும் அறியாத இந்தத் தலைமுறையினருக்குக் ‘கீழடி’யும் அங்கே நடைபெற்றுவரும் அகழாய்வுகளும் அறிமுகம். ‘தொன்மையான நதிகளின் கரைகளில் மனிதர் வாழ்ந்து மறைந்த வரலாற்றின் சுவடுகள் இருந்தே தீரும்’ என்பது மரபு. அப்படிப்பட்ட நிலையில், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே அகழாய்வுகள்கூட ஏன் மறைக்கப்பட்டன என்ற கேள்விக்கு இன்று வரை வெளிப்படையான பதிலில்லை. […]

Read more

காயமே இது மெய்யடா

காயமே இது மெய்யடா, போப்பு, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.160. நம் உடலின் முதன்மை உள் உறுப்புகளான கல்லீரல், இதயம், மண்ணீரல், நுரையீரல், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடுகள், அவற்றைப் புரிந்துகொள்வது எப்படி, மேம்பட்ட வகையில் பராமரிப்பது எப்படி என்று இப்புத்தகம் விரிவாக விளக்குகிறது. காயம் என்பது ஒன்றுமற்றதல்ல; ஊனும் உயிரும் சேர்ந்த உடம்பு. அதை முறையாக வளர்க்கவும் பராமரிக்கவும் தேவைப்படும் வழிகள் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. நன்றி: தமிழ் இந்து, 21.12.2019. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030466_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம், பாமயன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.190. சுற்றுச்சூழலைச் சீர்கெடுக்காமல் இயற்கையோடு இயைந்து வேளாண்மையை மேற்கொள்ளக்கூடிய நடைமுறைகள் பரவலாகிவருகின்றன. ஆனால், இதற்கு வழிகாட்டும் முழுமையான களக் கையேடு நம்மிடம் இல்லை. அதை மனதில்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது பாமயனின் இந்நூல். ‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘நிலமும் வளமும்’ பகுதியில் வெளியாகி, பரவலான வரவேற்பைப் பெற்ற தொடர் இது. தமிழகத்தில் இயற்கை வேளாண்மை பரவலாகக் காரணமாக இருந்த ‘ஒற்றை வைக்கோல் புரட்சி’போல இந்த நூலும் பயன்படும். நன்றி: தமிழ் இந்து, 21.12.2019. இந்தப் […]

Read more

அன்பாசிரியர்

அன்பாசிரியர், க.சே.ரமணி பிரபா தேவி,  இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.200. நல்லது எங்கு நடந்தாலும், சாதனைகள் எங்கே அரங்கேறினாலும் அவற்றுக்குத் தனி முக்கியத்துவம் தர வேண்டும். அதன் மூலம் சமூகத்தின் அவநம்பிக்கையைத் துடைத்து, நன்னம்பிக்கையை விதைக்க முடியும். அந்த வகையில், உலகம் முழுவதும் உள்ள தமிழ் வாசகர்களின் பாராட்டைப் பெற்றது ‘இந்து தமிழ்’ நாளிதழின் இணையத்தில் வெளிவந்த ‘அன்பாசிரியர்’ தொடர். தனித்துவத்தோடு செயல்பட்டு மாணவர்களுக்கு ஊக்கமும், பள்ளிகளுக்குப் பெருமையும் சேர்த்த ஆசிரியர்களுக்கு இந்தத் தொடர் ஊக்கம் தருவதாக அமைந்தது. 28 பள்ளிகளில் […]

Read more

நடைவழி நினைவுகள்

நடைவழி நினைவுகள், சி.மோகன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.175. சி.மோகன் தனது ஐம்பது ஆண்டு கால எழுத்து வாழ்க்கையில் சந்தித்த அபூர்வமான ஆளுமைகளைப் பற்றி எழுதிய தொடர் ‘நடைவழி நினைவுகள்’. தமிழின் முதன்மையான எழுத்தாளர்கள் 16 பேர் கலை சார்ந்த ஆளுமைகளாகவும், அவரவருக்கே உரிய பிரத்யேகக் குணங்களோடும் இந்தப் புத்தகத்தில் வெளிப்பட்டுள்ளார்கள். புதிதாக வாசிப்புக்குள் வரும் ஒருவருக்கு 16 எழுத்தாளர்களைப் பரந்த தளத்தில் அறிமுகப்படுத்தும் நூல் இது. நன்றி: தமிழ் இந்து, 14.03.2020. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030470_/ இந்தப் புத்தகத்தை […]

Read more

நலம், நலம் அறிய ஆவல்!

நலம், நலம் அறிய ஆவல்!, கு.கணேசன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.190. உடல்நிலையில் தோன்றும் பிரச்சினைகளுக்கு, மருத்துவ சந்தேகங்களுக்கு எங்கே பதில் கிடைக்கும் என்று தேடுவோம். அப்படிப் பரவலாகவும் பொதுவாகவும் தோன்றும் மருத்துவப் பிரச்சினைகளுக்கு பதில் தரும் புத்தகம் இது. ஆரோக்கியம் காக்கும் பதில்களை வழங்கியவர் பிரபல மருத்துவரும் மருத்துவ எழுத்தாளருமான கு.கணேசன். கேள்வி-பதில் பாணியில் அமைந்திருக்கும் இந்நூல் வாசகர்களை மருத்துவ அறிவு பெற்றவர்களாக மாற்றிவிடும். நன்றி: தமிழ் இந்து, 21.12.2019. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

மனசு போல வாழ்க்கை 2.0

மனசு போல வாழ்க்கை 2.0, ஆர்.கார்த்திகேயன், இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.150. மனம் குறித்த அலசல் கட்டுரைகள், கேள்வி-பதில் பகுதியின் தொகுப்பே இந்தப் புத்தகம். இதைப் படிக்கும் வாசகருக்குத் தன்னுடைய பயம், பதற்றம், மன அழுத்தம், கோபம், வருத்தம், ஏமாற்றம், குற்றவுணர்வு போன்ற மனம் செய்யும் ஆர்ப்பாட்டங்களை ஆற்றுப்படுத்தும் பக்குவம் வாய்க்கும். மனத்தை ஆளத் தெரிந்த எவருக்கும் எந்தவொரு சவாலையும் எளிதாக ஆள முடியும். அதற்கு இந்நூல் உதவும். நன்றி. தமிழ் இந்து. 04.04.2020 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000030478_/ இந்தப் […]

Read more
1 2 3 5