அன்பாசிரியர்
அன்பாசிரியர், க.சே.ரமணி பிரபா தேவி, இந்து தமிழ் திசை வெளியீடு, விலை: ரூ.200.
நல்லது எங்கு நடந்தாலும், சாதனைகள் எங்கே அரங்கேறினாலும் அவற்றுக்குத் தனி முக்கியத்துவம் தர வேண்டும். அதன் மூலம் சமூகத்தின் அவநம்பிக்கையைத் துடைத்து, நன்னம்பிக்கையை விதைக்க முடியும். அந்த வகையில், உலகம் முழுவதும் உள்ள தமிழ் வாசகர்களின் பாராட்டைப் பெற்றது ‘இந்து தமிழ்’ நாளிதழின் இணையத்தில் வெளிவந்த ‘அன்பாசிரியர்’ தொடர்.
தனித்துவத்தோடு செயல்பட்டு மாணவர்களுக்கு ஊக்கமும், பள்ளிகளுக்குப் பெருமையும் சேர்த்த ஆசிரியர்களுக்கு இந்தத் தொடர் ஊக்கம் தருவதாக அமைந்தது. 28 பள்ளிகளில் 74 செயல் திட்டங்களுக்கான உதவிகள் கிடைத்தன. ‘இந்து தமிழ்’ வாசகர்கள் இதுவரை கொடுத்த ரூ.58.89 லட்சம் மூலம் அரசுப் பள்ளிகள் அடுத்த நிலைக்கு மேம்படுத்தப்பட்டன. ‘அன்பாசிரியர்’ இப்போது நூல் வடிவம் பெற்றிருக்கிறது.
நன்றி: தமிழ் இந்து, 22.02.2020.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818