வித்தியாசம்தான் அழகு

வித்தியாசம்தான் அழகு, ச.மாடசாமி,  அகரம் அறக்கட்டளை வெளியீடு, விலை ரூ.100.

அன்பின் மை தொட்டு எழுதும் ச.மாடசாமி, ஆங்கில மொழியில் வாசித்திருக்கும் குழந்தைகளுக்கான கதைகளைத் தமது பேரக் குழந்தைகளுக்குச் சொன்ன அனுபவத்தின் ருசியோடு இந்நூலில் சொல்கிறார். குரைக்கச் சொன்னால் வெவ்வேறு விலங்குகளின் ஒலிக் குறிப்பை எழுப்பும் நாய்க்குட்டி, பல் டாக்டர் சுண்டெலி, சட்டை பொத்தான் இழந்ததால் யாருமே வாங்காதுபோவதில் வருத்தமுறும் கரடி பொம்மை என்று பல விலங்குகள் சுவாரஸ்யமாக உரையாடுகின்றன.

போட்டி, பொறாமை, கர்வம் போன்றவற்றைக் குழந்தைகள் கடந்துபோவதில் எப்படி பெரியவர்கள் குறுக்கிட்டுக் குழப்புகிறோம் என்பதை ரசமான கதைகளை முன்வைத்துப் பேசுகிறார். நமது பார்வையை விசாலப்படுத்தவும், அணுகுமுறைகளை மறுவாசிக்கவும், வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கவும் மாற்றும் புத்தக வரிசையில் இந்நூல் நிச்சயம் இடம் பெறும்.

நன்றி: தமிழ் இந்து, 29.02.2020,

இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609


இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *