சிவனுக்குகந்த மலர்கள்

சிவனுக்குகந்த மலர்கள், கு. சேது சுப்ரமணியன், செங்கைப் பதிப்பகம், பக். 184, வி9லை 120ரூ. திருமூலர் திருமந்திரத்தில் ‘புண்ணியம் செய்வார்க்கு பூவுண்டு நீருண்டு, அண்ணல் அது கண்டு அருள்புரியா நிற்கும்…’ என்று பாடியுள்ளார். பூவினால் செய்யும் பூசையால் வரும் புண்ணியங்களையும், பூவின் புகழ் வாசத்தையும் இந்த நூலில் மிக சிறப்பாக நுகரலாம். தருமை குரு முதல்வர் குரு ஞானசம்பந்தர் ஞானகுரு கமலை ஞானப்பிரகாசர் புட்பவிதி நூலும், ஸ்ரீ சிதம்பரநாத முனிவரின் நடராச சதகமும் நூலும், பாண்டி அரவிந்த அன்னையின் மலர்களின் தெய்வீக விளக்கமும் கொண்டு […]

Read more

துவந்துவ யுத்தம்

துவந்துவ யுத்தம், தி.குலசேகர், தாமரை பிரதர்ஸ் லிமிடெட், பக்.96, விலை 20ரூ. பயணத்தின் போது வாசிப்பதற்கென்றே எழுதும் எழுத்தாளர்கள் நம்மிடையே இருக்கின்றனர். முன்பெல்லாம் இவர்களின் எண்ணிக்கை அதிகம். குழந்தைகளுக்கான காமிக்ஸ், கார்ட்டூன் படக்கதைகள் முதல், அனைத்து தரப்பினரும் வாசிக்கும் கிரைம் நாவல்கள் என ரயில், பஸ் நிலையங்களில் முன்பெல்லாம் நிறைய புத்தகங்கள் கிடைக்கும். இப்போது அது குறைகிறது என்ற குறையை சரி செய்ய வந்துள்ளது, ‘துவந்துவ யுத்தம்’ புத்தகம். தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் பணிபுரிந்து, பின் திரைத்துறையில் நுழைந்த தி.குலசேகர் விறுவிறு நடையில் இதை […]

Read more

உள்ளம் கவர்ந்த உலகச் சிறுகதைகள்

உள்ளம் கவர்ந்த உலகச் சிறுகதைகள், தமிழில் கவுதம் சஞ்சய், சஞ்சீவியார் பதிப்பகம், பக். 178, விலை 110ரூ. பத்திரிகையாளர், எழுத்தாளர், கவிஞர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர் கவுதம் சஞ்சய். மேலை நாட்டு சிறு கதைகள் சிலவற்றை எளிய, இனிய தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். இரக்க குணம் உள்ள ஒரு பெண்ணை சித்தரிக்கும் ஜான்ஸ்டீன் பெக்கின், ‘மலர்ச்செடி’ திகில் உணர்வை எழுப்பும், எட்கர் ஆலன் போவின், ‘மர்ம மாளிகையின் வீழ்ச்சி…’ ஒருவர், ஒரு வீட்டில் தற்கொலை செய்து கொண்டால், அங்கு ஆவிகள் உலவும் என்ற […]

Read more

டர்மரின் 384

டர்மரின் 384, சுதாகர் கஸ்தூரி, கிழக்குப் பதிப்பகம், பக். 88, விலை 80ரூ. ஒரு நாவலை எடுத்தவுடன், அதை ஒரே மூச்சில் படித்து விட வேண்டும் என்ற மனநிலை வர வேண்டும். அவ்வகையில் சுதாகர் கஸ்தூரி எழுதிய, ‘டர்மரின் 384’ என்ற குறுநாவல், 24 தலைப்புகளில் விரிந்து செல்கிறது. அறிவியல் ஆய்வுலகில் நடக்கும் போட்டிகள், புகழ், பெருமை, பணத்திற்காக விலை போக கூடிய அறிவாற்றல் இது மட்டுமல்லாமல், நாட்டின் மரபு தந்த மருத்துவ அறிவை தனக்கென உரிமை கொண்டாட திட்டமிடும் குழுக்கள் இவற்றை கதைக் […]

Read more

காமராஜர் எனும் கலங்கரை விளக்கம்

காமராஜர் எனும் கலங்கரை விளக்கம், அரங்க பரமேஸ்வரி, வையவி பதிப்பகம், பக்.192, விலை ரூ.120. காமராஜரின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு. காமராஜர் என்கிற சாதாரண மனிதர் பெரிய தலைவராக எப்படி பரிணமித்தார் என்பதைத் தெரிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் தொடங்கி வைத்த கல்விக்கூடங்கள், மதிய உணவுத் திட்டம், தமிழ்மொழி வளர்ச்சிக்கென அவர் உருவாக்கிய தமிழ் வளர்ச்சிக் கழகம், வேளாண்மை வளர்ச்சிக்காக அவர் உருவாக்கிய அணைகள், அவர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட தொழிற்சாலைகள் […]

Read more

காஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்

காஷ்மீரி தேசியத்தின் பல்வேறு முகங்கள்- பனிப்போர் முதல் இன்று வரை- நந்திதா ஹக்ஸர், தமிழில்; செ. நடேசன், எதிர் வெளியீடு, பக். 452, விலை ரூ. 380. காஷ்மீர் பிரச்னை பற்றி பொதுத் தளத்தில் கூறப்படும் காரணங்களுக்கும், விளக்கங்களுக்கும் மத்தியில், இந்த நூல் வித்தியாசமான அணுகுமுறையுடன் வெளிவந்திருக்கிறது. தமிழிலேயே எழுதப்பட்ட நூல் என்று சொல்லும் அளவுக்கு மொழிபெயர்ப்பு சிறப்பாக உள்ளது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறும் போராட்டங்கள், வெறுமனே இஸ்லாமியர்களின் வெறித்தனம் என கட்டமைக்கப்பட்டுள்ள பொது வெளிக்கு, அது காஷ்மீரி தேசிய இனத்தின் விடுதலைக் […]

Read more

பயங்கரவாதி என புனையப்பட்டேன்

பயங்கரவாதி என புனையப்பட்டேன், மொகமது ஆமிர் கான், நந்திதா ஹக்ஸர், தமிழில் அப்பணசாமி, எதிர் வெளியீடு, விலை 200ரூ. வேடிக்கையில்லை. இதுபோன்ற ஒரு நிலையை நம்மால் அடைய முடிந்தால் மட்டுமே உணர முடியும். இது மொகமது ஆமிர் கானின் தன் வரலாறு. இதில் அவரது சுகமான நினைவுகளும், சந்தோஷப் பகிர்வும் இல்லை. பலவிதமான வழக்குகளில் பு9னைவாக சேர்க்கப்பட்டு வதைக்கப்பட்டவர். சந்தேகமும், குறிப்பிட்ட மதமும் பொதுப்புத்தியில் தீவிரவாதி என முத்திரை குத்தப்பட்டு நிலை நிறுத்தப்படுகின்றன. அத்தகைய நிலைக்கு ஆளாக்கப்பட்டவர் மொகமது. அதற்காக வலியை சிரமேற்கொண்டு இப்போது […]

Read more

மகா பெரியவா எனும் தெய்வத்தின் அருள்

மகா பெரியவா எனும் தெய்வத்தின் அருள் (பரமாச்சாரியாரைப் பற்றிய பக்தர்களின் பரவச அனுபவங்கள்), தொகுப்பு: கார்த்திகேயன், தங்கத் தாமரை பதிப்பகம், 10 தொகுதிகள் ஒவ்வொரு தொகுதியும், பக்.144, விலை ரூ.60. ‘மனிதனும் தெய்வமாகலாம்’ என்பதற்கு எடுத்துக்காட்டாக, நடமாடும் தெய்வமாக, பேசும் தெய்வமாகத் திகழ்ந்தவர் காஞ்சி மகா பெரியவர். கடவுள் பக்தியை மக்களின் அன்றாட வாழ்க்கையின் அங்கமாகவே மாற்றிய கருணா சாகரம். தமது அருளாசியினாலும், அன்பாலும், தாய் போன்ற கருணை உள்ளத்தாலும் தம்மை நாடி வந்தவர்களின் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தியவர். மக்களின் ஒவ்வொரு பிரச்னைகளையும் […]

Read more

சதுர பிரபஞ்சம்

சதுர பிரபஞ்சம், கோ. வசந்தகுமார், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 200ரூ. மனிதனால் படைக்கப்பட்டது மொழி. ஆனால் மனிதனிலிருந்து கவிஞனைப் படைப்பது கவிதை. மொழி கருவி. கவிதையோ படைப்பாளி. அருமையான கவிதை தளத்தின் மேலிருந்து தகித்து ஒளிர்கிறார் வசந்தகுமாரன். தனித்தனி அனுபவங்களின் வெளியீடு அல்ல இக்கவிதைகள். ஒரே நீண்ட அனுபவச் சங்கிலியின் வெவ்வேறு கண்ணிகள். கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்டு, கருத்துகளாகவே மீந்துவிடும் மேஜைக் கவிதைகளிலிருந்து வேறுபடுபவை. வசந்தகுமாரனின் மொழி ஆரவாரமற்று வெளிப்பாட்டுக்குத் தேவையான அளவு மட்டுமே கைக்கொள்ளப்படுகிறது. வெளிப்பாடு, அனுபவம் இரண்டும் தீவிரம் பெறும்போது […]

Read more

கிம் கி டுக்கின் சினிமாட்டிக் உடல்கள்

கிம் கி டுக்கின் சினிமாட்டிக் உடல்கள், ஜமாலன், நிழல், விலை 120ரூ. உலகத்தின் சினிமா ரசிகர்களுக்கு கிம் கி டுக் இப்பொழுது நெருக்கமான பெயர். குறிப்பாக இளைஞர் சமூகத்திற்கு அவரே ஆகச் சிறந்த இயக்குநர். அவரைப் பற்றிய முழுதான கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. தவிர்க்க முடியாத அவரின் அரிதான நீண்ட நேர்காணல் காணக்கிடைக்கிறது. திரைப்படத்தை புரிந்து கொள்ளும் முயற்சியில் இருக்கிற எல்லோருக்கும் இது கையில் இருக்க வேண்டிய புத்தகம். அவரது சினிமா வழக்கமான சினிமாக்களின் பழக்கப்பட்ட பாதையிலிருந்து விலகி நிற்கிறது. அவரது கதையுலகம் ஒரு […]

Read more
1 2 3 9