காமராஜர் எனும் கலங்கரை விளக்கம்

காமராஜர் எனும் கலங்கரை விளக்கம், அரங்க பரமேஸ்வரி, வையவி பதிப்பகம், பக்.192, விலை ரூ.120.

காமராஜரின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு. காமராஜர் என்கிற சாதாரண மனிதர் பெரிய தலைவராக எப்படி பரிணமித்தார் என்பதைத் தெரிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் தொடங்கி வைத்த கல்விக்கூடங்கள், மதிய உணவுத் திட்டம், தமிழ்மொழி வளர்ச்சிக்கென அவர் உருவாக்கிய தமிழ் வளர்ச்சிக் கழகம், வேளாண்மை வளர்ச்சிக்காக அவர் உருவாக்கிய அணைகள், அவர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட தொழிற்சாலைகள் என காமராஜரின் சாதனைகள் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.

காமராஜர் தனது இளமைக்காலத்திலேயே வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டது, பெரியாருக்கும் அவருக்கும் இருந்த உறவு, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு பலமுறை சிறை சென்றது, கட்சிப் பணியாற்ற முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியது, முதலமைச்சராக இருந்தபோதிலும் எளிய வாழ்க்கை வாழ்ந்தது என அவரின் பெருமைகளை, வாழ்க்கை நிகழ்வுகளை மிக எளிமையாக, சுவையாக இந்நூல் எடுத்துச் சொல்கிறது.

நன்றி: தினமணி, 24/7/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *