காமராஜர் எனும் கலங்கரை விளக்கம்

காமராஜர் எனும் கலங்கரை விளக்கம், அரங்க பரமேஸ்வரி, வையவி பதிப்பகம், பக்.192, விலை ரூ.120. காமராஜரின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு. காமராஜர் என்கிற சாதாரண மனிதர் பெரிய தலைவராக எப்படி பரிணமித்தார் என்பதைத் தெரிந்து கொள்ள இந்நூல் உதவுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் தொடங்கி வைத்த கல்விக்கூடங்கள், மதிய உணவுத் திட்டம், தமிழ்மொழி வளர்ச்சிக்கென அவர் உருவாக்கிய தமிழ் வளர்ச்சிக் கழகம், வேளாண்மை வளர்ச்சிக்காக அவர் உருவாக்கிய அணைகள், அவர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட தொழிற்சாலைகள் […]

Read more

காமராஜர் எனும் கலங்கரை விளக்கம்

காமராஜர் எனும் கலங்கரை விளக்கம், அரங்க பரமேஸ்வரி, வையவி பதிப்பகம், பக். 192, விலை 120ரூ. அரசியலிலும் நேர்மையை நிலைநாட்ட முடியும் என்று வாழ்ந்து காட்டிய பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கையை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்து கொள்வதோடு, தாமும் அம்மாமனிதர்போல் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற தூண்டுதல் உணர்வை ஏற்படுத்தும் நூல். நன்றி: குமுதம், 10/8/2016.

Read more

காமராஜர் எனும் கலங்கரை விளக்கம்

காமராஜர் எனும் கலங்கரை விளக்கம், அரங்க பரமேஸ்வரி, வையவி பதிப்பகம், விலை 120ரூ. திக்குத் தெரியாமல் நிலை தடுமாறும் கப்பலுக்கு வழிகாட்டிக் கரை சேர்க்கும் கலங்கரை விளக்கம் போலக் காட்சியை எப்படி நடத்த வேண்டுமென்று வழிகாட்டி, தன்னலமற்ற தியாகத்திற்கு வழிகாட்டி, பொது வாழ்க்கைக்கான தொண்டு எவ்வாறு அமைய வேண்டுமென்பதற்கு வழிகாட்டி, நாட்டின் வளர்ச்சிக்குச் செயல் வீரவராக எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு வழிகாட்டி, மக்கள் விரும்பும் தலைவராகவும் மக்களை நேசிக்கும் தொண்டராகவும் ஒரு மனிதன் ஆற்ற வேண்டிய பாங்கிற்கு வழிகாட்டி, உண்மையான நேர்மையான உழைப்புக்கு […]

Read more

கோ.கேசவனின் திறனாய்வாளுமை

கோ.கேசவனின் திறனாய்வாளுமை, முனைவர் ஜெ. கங்காதரன், வையவி பதிப்பகம், பக். 264, விலை 150ரூ. முப்பத்து மூன்று நூல்கள் படைத்து, தமிழ் திறனாய்வு உலகில் புகழ்க்கொடி நாட்டியவர் கோ. கேசவன். பேராசிரியராகவும், ஆய்வாளராகவும், திறனாய்வாளராகவும், தொழிற்சங்க வாதியாகவும் செயற்பட்ட அவரது திறனாய்வு முறைமைகளைத் திறம்பட ஆய்வு செய்கிறது இந்த நூல். தமிழ்த் திறனாய்வு வரலாற்றையும், அந்த வரலாற்றில் கோ.கேசவன் பெறும் இடத்தையும் சுட்டிக்காட்டி, மார்க்சிய இயங்குதளத்தில் அவரது திறனாய்வுக் கோணங்கள் அமைந்ததை அழகாக எடுத்துக்காட்டியுள்ளார் நூலாசிரியர். முனைவர் பட்ட ஆய்வு நூல் என்பதால், மேற்கோள்களின் […]

Read more

தமிழர் வாழ்வில் தகவலியல்

தமிழர் வாழ்வில் தகவலியல், வெ. நல்லதம்பி, வையவி பதிப்பகம், பக். 104, விலை 100ரூ தமிழர் வாழ்வில் தகவலியல் செயல்பாடு பற்றிய வழிமுறைகளை பற்றி ஆராய்கிறது இந்த நூல். பழந்தமிழ் இலக்கியங்கள், தகவல்களை பயன்படுத்தியுள்ள விதம் குறித்து விரிவாக பேசுகிறது. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வெட்ப மொழிவதாம் சொல் என்ற குறளை, தகவலியல் சார்ந்து மிகவும் நுட்பமாக விளக்கியுள்ளார். இது ஓர் உதாரணம்தான். இதுபோல் பழந்தமிழ் இலக்கியங்களில் தகவல் சார்ந்தும், அவற்றை வெளிப்படுத்திய விதம் சார்ந்தும் நுட்பமாக அணுகிய விவரிப்புகள் புத்தகத்தில் பரந்து […]

Read more

திருமால் தரிசனம்

திருமால் தரிசனம், வேணு சீனிவாசன், வையவி பதிப்பகம், பக். 176, விலை 100ரூ, நாலாயிர திவ்ய பிரபந்தம், அதன் உரையாசிரியர்களின் நயம் குறித்தும், உரையாசிரியர்களின் உயர்வு குறித்தும், 18 கட்டுரைகளில், இந்த நூல் பழகு தமிழில் விவரிக்கிறது. பாலும் கண்ட சர்க்கரையும் குடிக்கப் பித்தம் தன்னடையே போமாபோல, பகவதனு பவம் பண்ண நெருப்பில் இட்ட பஞ்சுக்குவியலைப் போல தீவினைகளுடன் உருமாய்ந்து போகும் என்ற ஈட்டின் விளக்கம் கூறுவது (பக். 39). இறை அறிவு தலைதுக்கி மலரும்போது, இந்த உலக அறிவு கூம்ப ஆரம்பித்துவிடும் என்று […]

Read more

தமிழர் வாழ்வில் தகவலியல்

தமிழர் வாழ்வில் தகவலியல்,முனைவர் வெ. நல்லதம்பி, வையவி பதிப்பகம், சென்னை, விலை 180ரூ. மிகப் பழங்காந்தொட்தே தமிழ் வாழ்வில் தகவல் தொடர்புகள் எவ்விதமெல்லாம் செழித்து வளர்ந்து வந்திருக்கின்றன என்பதை ஆராய்கிறது இந்த நூல். தகவலியல் என்னும் கண்ணோட்டத்தில் இத்தனை செய்திகள் நம் பரந்த பன்னெடுங்கால இலக்கிய நூல்களில் பொதிந்திருப்பது வியப்பு என்றால், அதை அழகுபட ஒரு முத்துமாலைப்போல் தொகுத்துத் தந்திருக்கும் நூலாசிரியரின் ஆற்றல் அதனினும் வியப்பு. சிலப்பதிகாரம், மணிமேகலை, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, புறநானூறு, அகநானூறு, முருகாற்றுப்படை, முல்லைப்பாட்டு, நெடுநல்வாடை, தொல்காப்பியம் ஆகிய நூல்களில் […]

Read more