வரலாற்றில் எம்.ஜி.ஆர்.

வரலாற்றில் எம்.ஜி.ஆர்., வே. குமரவேல், முல்லை பதிப்பகம், பக். 784, விலை 500ரூ. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் பொதுவாழ்கையைப் பற்றி புரிதலை இன்றைய தலைமுறையினருக்கு நுட்பமாக எடுத்துச் சொல்லும் தொகுப்பு நூல் இது. கலைத்துறையிலும், அரசியல் வாழ்விலும் எம்.ஜி.ஆர். ஆற்றிய செயற்கரிய பணியை அவரோடு பழகியவர்கள் எழுத்தில் சொல்வது படிக்கப் படிக்க புதுமை. சிவாஜி, ம.பொ.சி., பழதுநெடுமாறன், கண்ணதாசன், சோ, சோலை, எம்.ஆர். ராதா, டைரக்டர் ஸ்ரீதர், நீதியரசர் இஸ்மாயில், மணியன், வாலி, பானுமதி என்று அவரோடு அன்பாக இருந்தவர்கள் பலரின் அரிய கருத்துக்களை […]

Read more

தமிழர் வாழ்வில் தகவலியல்

தமிழர் வாழ்வில் தகவலியல், வெ. நல்லதம்பி, வையவி பதிப்பகம், பக். 104, விலை 100ரூ தமிழர் வாழ்வில் தகவலியல் செயல்பாடு பற்றிய வழிமுறைகளை பற்றி ஆராய்கிறது இந்த நூல். பழந்தமிழ் இலக்கியங்கள், தகவல்களை பயன்படுத்தியுள்ள விதம் குறித்து விரிவாக பேசுகிறது. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வெட்ப மொழிவதாம் சொல் என்ற குறளை, தகவலியல் சார்ந்து மிகவும் நுட்பமாக விளக்கியுள்ளார். இது ஓர் உதாரணம்தான். இதுபோல் பழந்தமிழ் இலக்கியங்களில் தகவல் சார்ந்தும், அவற்றை வெளிப்படுத்திய விதம் சார்ந்தும் நுட்பமாக அணுகிய விவரிப்புகள் புத்தகத்தில் பரந்து […]

Read more

உன்னால் முடியும்

உன்னால் முடியும், சந்தனம்மாள் பதிப்பகம், வி.ஜி.பி. தலைமை அலுவலகம், சென்னை, விலை 150ரூ. ஏழையாக இருந்தாலும், புத்திசாலித்தனமும், கடும் உழைப்பும் இருந்தால் உச்சியைத் தொடலாம் என்பதற்கு உதாரணமாகத் திகழ்பவர்கள் வி.ஜி.பி. சகோதரர்கள். மூத்தவர் பன்னீர்தாஸ் யாரும் எதிர்பாராத விதத்தில் இளமையிலேயே காலமாகிவிட, அந்த மாபெரும் நிறுவனத்தை கட்டிக்காத்து, மேலும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்பவர் டாக்டர் வி.ஜி. சந்தோஷம். தன்னைப்போலவே மற்றவர்களும் வளரவேண்டும் என்ற பரந்த உள்ளம் படைத்த வி.ஜி.சந்தோஷம் அதற்கான வழிகளைக் கூறுகிறார் உன்னால் முடியும் என்ற இந்த நூலில். உழைப்பால் உயர்ந்தவர்களான […]

Read more