மன்னனின் கௌரவம் சதுரங்க நடுவிலே

மன்னனின் கௌரவம் சதுரங்க நடுவிலே, வே.குமரவேல், முல்லை பதிப்பகம், பக். 136, விலை 100ரூ. திரைப்படப் பாடல் ஒன்றின் வரிகளை நுாலின் தலைப்பாகக் கொண்டிருக்கும் இந்நுால், அரசியல் சிந்தனைகளை அலசும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது. இன்றைய அரசியல் சூழலில் தக்கது எது, தகுதியானது எது என்பதை ஆழ்ந்த சிந்தனையோடு வெளிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். ‘மக்கள் எவ்வழி மன்னன் (தலைவர்கள்) அவ்வழி’ என்ற சிந்தனையே இன்று எண்ணத்தக்கதாய் உள்ளது என்ற கருத்தை முன்வைக்கும் ஆசிரியர், அரசியலில் எத்தகைய மாற்றம் வர வேண்டும் என்பதை இந்நுாலில் வலியுறுத்துகிறார். கடந்த தேர்தலில் […]

Read more

த.ஸ்டாலின் குணசேகரன் நேர்காணல்கள்

த.ஸ்டாலின் குணசேகரன் நேர்காணல்கள், வே.குமரவேல், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக்.508, விலை 415ரூ. சமூகச் செயற்பாட்டாளரும், மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவருமான த.ஸ்டாலின் குணசேகரன் பல்வேறு தொலைக்காட்சிகள், வானொலிகள், இதழ்கள் ஆகியவற்றுக்கு அளித்த நேர்காணல்கள், பங்குகொண்ட கலந்துரையாடல்கள் ஆகியவற்றின் தொகுப்பே இந்நூல். சிறப்பு நேர்காணல்களாக அரசியல், சமூகம், பொது ஆகிய தலைப்புகளில் மூன்று நேர்காணல்களும் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. விடுதலை வேள்வியில் தமிழகம்' என்ற நூலை அவர் எழுதியிருப்பதால், பெரும்பாலான நேர்காணல்களில் சுதந்திரப் போராட்டம் பற்றியும், சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட தலைவர்களைப் பற்றியும் நிறைய கேள்விகள் […]

Read more

எம்.ஜி.ஆர். எழுதாத குறிப்புகள்

எம்.ஜி.ஆர். எழுதாத குறிப்புகள், வே. குமரவேல், முல்லை பதிப்பகம், பக். 808, விலை 550ரூ. தற்கால வரலாற்றையும் சென்ற தலைமுறையில் எம்.ஜி.ஆர். வாழ்ந்த கால கட்டத்தையும் இரண்டறக் கலந்து எழுதிச் செல்கிற நாவல் இது. முத்தமிழன், ரகு உள்ளிட்ட ஏழு கதாபாத்திரங்களுடன் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரையும் ஒரு கதாபாத்திரமாக அமைத்திருப்பது புதுமை. நன்றி: குமுதம், 31/8/2016.   —- தெரியும் ஆனால் தெரியாது, முனைவர் ந. அப்புராஜ், தண்மதி பதிப்பகம், பக்.110, விலை 120ரூ. மிகப்பெரிய கருத்தை ஒரு சிறிய பெட்டிக்குள் திணித்து வைத்திருப்பதுபோல் […]

Read more

வரலாற்றில் எம்.ஜி.ஆர்.

வரலாற்றில் எம்.ஜி.ஆர்., வே. குமரவேல், முல்லை பதிப்பகம், பக். 784, விலை 500ரூ. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் பொதுவாழ்கையைப் பற்றி புரிதலை இன்றைய தலைமுறையினருக்கு நுட்பமாக எடுத்துச் சொல்லும் தொகுப்பு நூல் இது. கலைத்துறையிலும், அரசியல் வாழ்விலும் எம்.ஜி.ஆர். ஆற்றிய செயற்கரிய பணியை அவரோடு பழகியவர்கள் எழுத்தில் சொல்வது படிக்கப் படிக்க புதுமை. சிவாஜி, ம.பொ.சி., பழதுநெடுமாறன், கண்ணதாசன், சோ, சோலை, எம்.ஆர். ராதா, டைரக்டர் ஸ்ரீதர், நீதியரசர் இஸ்மாயில், மணியன், வாலி, பானுமதி என்று அவரோடு அன்பாக இருந்தவர்கள் பலரின் அரிய கருத்துக்களை […]

Read more

எம்.ஜி.ஆர். எழுத்தும் பேச்சும்

எம்.ஜி.ஆர். எழுத்தும் பேச்சும், வே. குமரவேல், முல்லை பதிப்பகம், சென்னை. எம்.ஜி.ஆரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் ஒரு பதிவாக எம்.ஜி.ஆரின் எழுத்தையும் பேச்சையும் ஒன்று திரட்டி ஒரு பெரிய ஆவணமாக தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர். எம்.ஜி.ஆரின் கொள்கை என்ன என்பதைத் தெளிவாக ரசிகர்களுக்கு உணர்த்தும் நூல். பேரறிஞர் அண்ணா மேல் எம்.ஜி.ஆர். வைத்திருந்த பாசம், கலைவாணர் பற்றிய கருத்து, சினிமாத்துறையை வளர்க்க எம்.ஜி.ஆருக்கு இருந்த எண்ணங்கள், அவரது பொன்மொழிகள், அண்ணாவின் தொண்டனானது ஏன்? காமராஜர் மேல் மரியாதை, சிவாஜி மேல் கொண்டிருந்த அன்பு, சினிமாவில் […]

Read more

இந்திய பணக்காரர்களின் இன்னொரு முகம்

இந்திய பணக்காரர்களின் இன்னொரு முகம், வே. குமரவேல், முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை 40, பக். 532, விலை 300ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0002-188-8.html புலிகளை வேட்டையாடாமல், புள்ளிமான்களை வளர்ப்பதில் பயனில்லை எனும் கட்டுரையில் துவங்கி, சுத்த ரத்தம் உடையவன் சும்மா இருகக முடியுமா? என்பது முடிய 40 கட்டுரைகள் டாடா, பிர்லா, பஜாஜ், அம்பானி, மிட்டல், டால்மியா, விஜய மல்லையா என்று பெரு முதலாளிகளின் மறுபக்கத்தை, வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளார் […]

Read more

இந்திய பணக்காரர்களின் இன்னொரு முகம்-பெரு முதலாளிகளின் மறுபக்கம்

இந்திய பணக்காரர்களின் இன்னொரு முகம்-பெரு முதலாளிகளின் மறுபக்கம், வே. குமரவேல், முல்லை பதிப்பகம், சென்னை 40, பக். 532, விலை 300ரூ. மேடைப் பேச்சுத் தொனியில் 40 கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு. அரசு அதிகார மையங்களுடன் பெருமுதலாளிகள் கொண்டுள்ள தொடர்புகள் குறித்த ஏராளமான குறிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலும் காங்கிரஸ், தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் எதையும் இந்நூல் விட்டுவிடவில்லை. சுமார் 60 ஆண்டுகால ஊழல்கள் அத்தனையும் இந்த நூலில் வெவ்வேறு இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சமூகத்தை உற்றுநோக்குவதற்கு இன்னும் கூடுதலான வாசிப்பு […]

Read more

எங்கே அந்த சொர்க்கம்

எங்கே அந்த சொர்க்கம்?, வே. குமரவேல், முல்லை பதிப்பகம், பக். 284, விலை 200ரூ. நூலின் அட்டையிலேயே கடந்த ஐம்பதாண்டு கால தமிழக திராவிட இயக்க வரலாற்றை அலசி ஆராயும் நாவல் என்ற விளக்கத்துடன் வெளிவந்துள்ள இந்நூலை நாவல் என்று நூலாசிரியர் எவ்வாறு வகைப்படுத்தினார் என்பது புலப்படவில்லை. திராவிட இயக்கம் குறித்த கூர்மையான விமர்சனங்களின் தொகுப்பாகவே இந்நூல் காட்சி தருகிறது. இரு தலைமுறையினர் இடையிலான கடித உரையாடல் வடிவில் தனது அரசியல் பார்வையை நூலாசிரியர் முன்வைக்கிறார். திராவிட இயக்கத்தின் பரிணாமமான கட்சிகளின் லட்சணம், சுயநலனுக்கு […]

Read more

கலைவாணரைப் போற்றிய அறிஞர்கள்

கலைவாணரைப் போற்றிய அறிஞர்கள், வே. குமரவேல், சங்கம் பதிப்பகம், பக். 560, விலை 350ரூ. ஆடுவதும், ஓடுவதும் அனைவரையும் சாடுவதும், தரங்கெட்ட சேட்டைகளை நாடுவதுமே, இன்று நகைச்சுவை என்று சினிமாவில் ஆகிவிட்டது. பிறரைப் புண்படுத்தி, ஏமாற்றி, சிரிக்க வைக்க படாதபாடுபடும் இன்றைய திரையுலகம், கற்றுக்கொள்ள வேண்டிய பாடநூலாக, இந்த கலைவாணர் நூல் அருமையாக உருவாகியுள்ளது. சீர்திருத்தமும், விவேகமும் நிறைந்த அவரது ஒவ்வொரு யதார்த்த வசனமும் சிரிக்க வைத்ததுடன், சிந்திக்கவும் வைத்து சமூகத்தை சீர்திருத்தம் செய்துள்ளது என்பதை, 214 தலைப்புகளில், 560 பக்கங்களில் இந்த நூல் […]

Read more