எம்.ஜி.ஆர். எழுத்தும் பேச்சும்

எம்.ஜி.ஆர். எழுத்தும் பேச்சும், வே. குமரவேல், முல்லை பதிப்பகம், சென்னை. எம்.ஜி.ஆரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் ஒரு பதிவாக எம்.ஜி.ஆரின் எழுத்தையும் பேச்சையும் ஒன்று திரட்டி ஒரு பெரிய ஆவணமாக தொகுத்துத் தந்துள்ளார் நூலாசிரியர். எம்.ஜி.ஆரின் கொள்கை என்ன என்பதைத் தெளிவாக ரசிகர்களுக்கு உணர்த்தும் நூல். பேரறிஞர் அண்ணா மேல் எம்.ஜி.ஆர். வைத்திருந்த பாசம், கலைவாணர் பற்றிய கருத்து, சினிமாத்துறையை வளர்க்க எம்.ஜி.ஆருக்கு இருந்த எண்ணங்கள், அவரது பொன்மொழிகள், அண்ணாவின் தொண்டனானது ஏன்? காமராஜர் மேல் மரியாதை, சிவாஜி மேல் கொண்டிருந்த அன்பு, சினிமாவில் […]

Read more

பிளேட்டோவின் குடியரசு

பிளேட்டோவின் குடியரசு, தமிழாக்கம் ஆர். இராமானுஜாசாரி, சாகித்திய அகாதெமி, சென்னை, பக். 412, விலை 230ரூ. மண்ணிலேயே விண்ணரசு ஏற்படுத்த முடியுமா? முடியும் என்கிறது பிளேட்டோவின் குடியரசு. சாக்ரடீஸ் தன்னுடைய மாணவர்களுடன் நடத்தும் உரையாடல்தான் இந்த புத்தகம். இந்த உரையாடல்கள் மூலம் ஒரு சிறந்த குடியரசுக்கான அடிப்படை எவை, அவை எவ்வாறு அமையும், அதில் ஆட்சியாளர்கள், நீதிமான்கள், காவலர்கள், தகுதிகள் என்ன? அத்தகைய குடியரசில் இளைஞர்கள் எப்படி வளர்த்தெடுக்கப்பட வேண்டும், இத்தகைய குடியரசில் எவை தீமைக்கு இடம் அளிக்கும், எவை நன்மையைச் சேர்க்கும், எத்தகைய […]

Read more

பொன் வேய்ந்த பெருமாள்

பொன் வேய்ந்த பெருமாள், பூம்புகார் பதிப்பகம், சென்னை, விலை 275ரூ. சடையவர்மர் சுந்தரபாண்டியர், மூன்றாம் ராகவேந்திர சோழர், விசயகண்ட  கோபாலன் ஆகிய சரித்திர நாயகர்களைச் சுற்றிப் பின்னப்பட்ட வரலாற்றுப் புதினம் பொன்வேய்ந்த பெருமாள். சரித்திரக் கதைகளுக்கு அடிப்படைத்தேவை கம்பீரமான நடை. கோவி. மணிசேகரன் இயற்கையாகவே கம்பீர நடையை கைவரப்பெற்றவர். காட்சிகளை வர்ணிப்பதிலும், அசகாய சூரர். அவருடைய இந்த முத்திரைகள், இந்த நாவலிலும் அழுத்தமாகப் பதிந்துள்ளன. இதைப் படிக்கும் எல்லோருமே, நல்லதொரு சரித்திர நாவலைப் படித்தோம் என்ற மன நிறைவைப் பெறுவார்கள். நன்றி: தினத்தந்தி, 27/5/2015. […]

Read more

லெமுரியா குமரிக்கண்டம்

லெமுரியா குமரிக்கண்டம், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, விலை 130ரூ. லெமுரியா – ஆராய்ச்சியாளர்கள் பலரை ஈர்த்த பெயர். தங்களின் முன்னோர்கள் வாழ்ந்த பகுதியாக, உலக மக்கள் பலரும் கூறும் நிலப்பரப்பு. பூமிபந்தின் பல்வேறு இடங்களிலும் லெமுரியா இருந்ததாக அவரவர்கள் அடையாளம் காட்டினார்கள். ஆயினும், உண்மையில் லெமுரியா எங்கிருந்தது? பண்டைய தமிழர்களின் குமரிக்கண்டத்திற்கும், லெமுரியாவிற்கும் என்ன தொடர்பு? இரண்டும் ஒன்றா? தென் திசையே முன்னோர்களின் திசை என்றும், முன்னோர் வழிப்பாட்டைத் தென்திசை நோக்கியே செய்ய வேண்டும் என்பதும் இந்தியர்களின் நம்பிக்கை. இத்தகைய நம்பிக்கைக்கு, குமரிமுனைக்குத் தெற்காக […]

Read more

அந்நிய நிலத்தின் பெண்

அந்நிய நிலத்தின் பெண், மனுஷ்யபுத்திரன், உயிர்மை பதிப்பகம், சென்னை. சர்ச்சையை ஏற்படுத்தும் அந்நிய நிலத்தின் பெண் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் எழுதி, உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள, அந்நிய நிலத்தின் பெண் என்ற கவிதை நூலைப் படித்தேன். இந்த நூல் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தும் என்றே நினைக்கிறேன். நம் சமூகத்தின் ஆண், பெண் விருப்பங்கள், அவர்களின் உறவுகள் குறித்து, இக்கவிதை நூல் விவரிக்கிறது. அன்றாட வாழ்வீல் நாம் பயன்படுத்திய பயன்படுத்தும் பல சொற்களை கவிதையில் பயன்படுத்தி உள்ளார் ஆசிரியர். இந்த சொற்களை பயன்படுத்தக்கூடாத கெட்ட சொற்கள் என, […]

Read more

குமரி நாட்டு வரலாற்று ஆவணங்கள்

குமரி நாட்டு வரலாற்று ஆவணங்கள், காவ்யா, சென்னை, விலை 250ரூ. இந்நூலில் குமரி மாவட்டம் சார்ந்த 21 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. குமரி மாவட்ட மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல விவரங்கள் இந்நூலில் குவிந்துகிடக்கின்றன. அவற்றுள் நாகர்கோவிலில் இருந்த அரண்மனைகள், நாகராஜா கோவில், பத்மநாபபுரம், உதயகிரி கோட்டைகள், மாராயன், மகாராசன், குமரி நாடு கன்னியாகுமரி, சமண மதத்தின் பழமை, அனந்த பத்மநாபன், வேளிமலை முதலிய கட்டுரைகள் மிக முக்கியமானவை. குமரி நாட்டின் வரலாற்று ஆவணங்களைக் கொண்டதால் இந்நூலை குமரி நாட்டு கருவூலம் என்றே கூறலாம். […]

Read more

மனக்குகைச் சித்திரங்கள்

மனக்குகைச் சித்திரங்கள், ஆத்மார்த்தி, புதிய தலைமுறைப் பதிப்பகம், சென்னை. தமிழ் இதழ்களில் தற்போது தனிப்பட்ட அனுபவங்களைப் பதிவு செய்யும்போக்கு அதிகரித்துள்ளது. இந்த வரிசையில் புதிய தலைமுறை இதழில் ஆத்மார்த்தி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு மனக்குகை சித்திரங்கள் என்ற பெயரில் வெளியாகி உள்ளது. நூல்கள் விற்கும் ஆறுமுகம், சாலையில் ஓவியம் வரைபவன், மனநோய் பாதிப்புக்குள்ளான மல்லிகா அக்கா, உறவினர் யாரும் இல்லாதபோதும் வெளிநாட்டில் இருப்பதாகச் சொல்லிக்கொண்டிருக்கும் பாலமூர்த்தி, நான்குவயதில் தொலைந்துபோன குட்டிமகள் இன்னும் தன்னுடன் இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கும் பெரியவர், மதுக்கூடத்தில் பாடும் ராமசாமி உள்ளிட்ட பல […]

Read more

பிரபல கொலை வழக்குகள்

பிரபல கொலை வழக்குகள் எஸ்.பி.சொக்கலிங்கம்(வெளியிட்டோர்: கிழக்கு பதிப்பகம், 57, பி. எம். ஜி. காம்ப்லக்ஸ், ரெத்னாபவன் ஓட்டல் எதிர்புறம், தெற்கு உஸ்மான் ரோடு, தியாகராயர் நகர், சென்னை – 17; விலை: ரூ. 140) To buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8493-787-9.html ஆஷ் கொலை, லட்சுமி காந்தன் கொலை, சிங்கம்பட்டி கொலை, பாவ்லா கொலை, பகூர் கொலை, ஆலவந்தான் கொலை, நானாவதி கொலை, எம்.ஜி.ஆர். சுடப்பட்டது, விஷ ஊசி, மர்ம சந்நியாசி ஆகிய வழக்குகளின் விபரங்கள் அடங்கியது “பிரபல கொலை […]

Read more