இ மெயில் தமிழன்

இ மெயில் தமிழன், விஜய் ராணிமைந்தன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.128, விலை ரூ.100. இ மெயில் கண்டுபிடித்த சிவா அய்யாதுரையின் வாழ்க்கை வரலாறு இந்நூல். இளம் வயதில் மும்பையில் படித்த சிவா அய்யாதுரையின் ஏழாவது வயதில் (1970) அவருடய குடும்பம் அமெரிக்காவுக்கு குடி பெயர்ந்தது. அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி | மாகாணத்தில் உள்ள பேட்டர்சன் டவுனில் குடிபெயர்ந்து அங்குள்ள பள்ளியில் படித்தார் சிவா அய்யாதுரை. பள்ளியில் படிக்கும்போதே கோடை விடுமுறையில் ஏழு வித்தியாசமான கம்ப்யூட்டர் மொழிகளை நியூயார்க் பல்கலைக்கழகத்தில் படித்தார். 1978இல் “யுனிவர்சிட்டி ஆஃப் டென்ஸ்ட்ரி […]

Read more

புதிய வானம் புதிய பூமி

புதிய வானம் புதிய பூமி, பட்டுக்கோட்டை ராஜா, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 333ரூ. தஞ்சையின் சோழ வம்சத்து புகழ் மிக்க மன்னரான ராஜராஜ சோழனுக்குப் பிறகு தஞ்சையை பல மன்னர்கள் ஆட்சி செய்து இருந்த போதிலும், அந்த தேசத்தை 34 ஆண்டுகள் ஆட்சி செய்து மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்த மன்னர் என்ற பெருமையைப் பெற்ற சரபோஜியின் வாழ்க்கையைச் சுற்றிப் பின்னப்பட்ட இந்த நாவல், பெரும்பாலான வரலாற்றுச் சம்பவங்களை சிதைக்காமல் வழங்கி இருக்கிறது. நாவல் ருசிகரமாகவும், படிப்பதற்கு விறுவிறுப்பாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக […]

Read more

கிளியோபாட்ரா

கிளியோபாட்ரா,  இரும்புப் பெண்மணி, எஸ்.எல்.வி.மூர்த்தி, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.304, விலை ரூ.288. எகிப்தின் மகாராணி கிளியோபாட்ரா என்பவர் ஓர் அழகுப் பதுமை என்னும் பொதுப் பிம்பத்தை சுக்கு நூறாக உடைத்தெறிந்திருக்கிறது இந்நூல். எகிப்தின் மகாராணி கிளியோபாட்ரா என்பவர் ஓர் அழகுப் பதுமை என்னும் பொதுப் பிம்பத்தை சுக்கு நூறாக உடைத்தெறிந்திருக்கிறது இந்நூல். கிளியோபாட்ரா அழகாகப் பிறந்தவர் என்பதைவிட தன்னைச் சுற்றிலும் ஆபத்துடன் பிறந்தவர் என்பதே பொருத்தம். 9 மொழிகள், மருத்துவம், கணிதம், வானியல் உள்ளிட்ட 6 துறைகள், அரசியல் சாமர்த்தியம், போர்த்திறன், அபாரத் துணிச்சல் ஆகியவற்றை […]

Read more

அச்சம் தவிர்… ஆளுமை கொள்

அச்சம் தவிர்… ஆளுமை கொள், பரமன் பச்சைமுத்து, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.160, விலை ரூ.150. படிப்பு என்பது ஒரு பாஸ்போர்ட். உங்களை நேர்முகத் தேர்விற்கும், முக்கியமான தளங்களுக்கும் கொண்டு சேர்க்கும். ஆனால் வாழ்வில் மேலும் மேலும் வெற்றி பெற சில தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவற்றை ஆளுமை என்று சொல்லலாம். ஆளுமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ள அச்சம் தடையாக இருக்கிறது. அச்சத்தை எவ்வாறு நீக்குவது? ஆளுமைப் பண்புகளை எவ்வாறு வளர்த்துக் கொள்வது? இதுதான் இந்நூலின் சாரம். அச்சப்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அச்சப்படும் ஒரு […]

Read more

சிந்தித்த வேளையில்…

சிந்தித்த வேளையில்…, சி.சைலேந்திரபாபு, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.232, விலை ரூ.200. மனம், மாணவர், இளைஞர், பெற்றோர், அறிவியல், ஆசிரியர், வாழ்க்கை, போராட்டம், கல்வி, விளையாட்டு, பொது ஆகிய 11 பிரிவுகளில், மண்ணில் எவ்வாறு நல்லவிதமாக வாழ வேண்டும் என்பதற்கு இந்நூல் வழிகாட்டுகிறது. ஒவ்வொரு புத்தாண்டின் போதும் இவற்றையெல்லாம் இனிமேல் கடைப்பிடிப்பேன் என சபதம் செய்து கொள்பவர்களில் எத்தனை பேர் தொடர்ந்து அவற்றைக் கடைப்பிடிக்க முடிகிறது? தொடர்ந்து கடைப்பிடிக்க எப்படித் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும்? என்பது நூலின் முதல் பிரிவில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பிரிவில், […]

Read more

சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்

சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம், அழகர் நம்பி,  சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.504, விலை ரூ. 450. சாணக்கியர் எழுதிய ‘அர்த்த சாஸ்திரம்‘ நூல், அரசு நிர்வாகம், பொருளாதாரம் பற்றிப் பொதுவாகப் பேசினாலும், ஓர் அரசனின் கடமைகளில் தொடங்கி, கீழ்மட்ட அரசு அலுவலர்களின் பணிகள் வரை தெளிவாக விவரிக்கிறது. அரசனின் பாதுகாப்பு, அரச ஊழியம், வாரிசு முறை, அமைச்சர்கள் மற்றும் ஆலோசகர்கள், கருவூல அதிகாரிகள், வேளாண்மை, காடு வளர்ப்பு, சட்டமும் நீதியும், மண வாழ்க்கை, குற்றப் புலனாய்வு, பாலியல் குற்றங்கள், ராணுவ அமைப்பு போன்ற எல்லாப் பிரிவுகள் […]

Read more

கரன்சிகாலனி

கரன்சிகாலனி, ந. இளங்கோவன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 70ரூ. எந்தத் தொழிலிலும் வெற்றி பெறுவதற்கு அறிவு அவசியமா? புத்திசாலித்தனமா? என்றால் அறிவை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதில்தான் வெற்றி இருக்கிறது என்பார்கள். அறிவை புத்திசாலித்தனமாக எப்படி பயன்படுத்திக் கொள்வது, அதன் மூலம் எப்படி வெற்றி பெறுவது என்பதற்கான வழிமுறைகள் அனுபவரீதியாக கதைபோல் சொல்லப்பட்டிருக்கின்றன. நன்றி: குமுதம், 26/7/2017

Read more

கணினி பயன்படுத்துவோருக்கு வரும் உடல், மனநலப் பாதிப்புகளும் தீர்வுகளும்

கணினி பயன்படுத்துவோருக்கு வரும் உடல், மனநலப் பாதிப்புகளும் தீர்வுகளும், ம.லெனின், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.220, விலை ரூ.222. முழுநேரமும் கணினி முன் அமர்ந்து பணிபுரிபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. வீடுகளிலும் கூட கணினிகள் நிறைய வந்துவிட்டன. போதாதற்கு மடிக் கணினிகளைச் செல்லுமிடமெல்லாம் எடுத்துச் சென்று பயன்படுத்த முடிகிறது. கணினி நமது வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஓர் அங்கமாகிவிட்டது. கணினியைப் பயன்படுத்துவதால் ஏற்படும் கண் பாதிப்புகள், உடல் வலி, மன இறுக்கம், உடல் களைப்பு ஆகியவை ஏற்படுவதற்கான காரணங்களை இந்நூல் விளக்குகிறது. கணினியால் ஏற்படும் […]

Read more

லீ குவான்யூ, பெருந்தலைவன்

லீ குவான்யூ, பெருந்தலைவன். பி.எல். ராஜகோபாலன், சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக். 264, விலை 200ரூ. எதுவுமே இல்லை என்ற நிலையிலிருந்து எல்லாமே சாத்தியம் என்பதை சாதித்துக் காட்டியவர் லீ குவான்யூ. அவருடைய வாழ்க்கைக்குள் நம்மை அழைத்துச் செல்கிறது இந்த நூல். நூலை எடுத்துப் படிக்க ஆரம்பித்தால் அதை முடிக்கும் வரை கீழே வைக்க முடியாத அளவுக்கு எளிமையும், சுவையும் ஈர்ப்பும் கொண்டதாக இருக்கிறது இந்நூல். 1959-இல் அவர் பிரதமராகப் பதவியேற்றபோது எதிர்கொண்ட சவால்கள், சூதாட்ட விடுதிகளை தொடங்க அனுமதி மறுத்தது, பொது இடங்களில் எச்சில் […]

Read more

சுந்தர் பிச்சை – புதிய நம்பிக்கை

சுந்தர் பிச்சை – புதிய நம்பிக்கை, ஜக்மோகன் எஸ்.பன்வர், தமிழில்: கார்த்திகா குமாரி, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், பக்.144, விலை ரூ.125. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகிளின் மூன்றாவது தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் சுந்தர் பிச்சை. சென்னை ஜவஹர் வித்யாலயா, வனவாணி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்ற சுந்தர் பிச்சை, காரக்பூர் ஐஐடி மாணவரானது, அங்கே தன்னுடன் பயின்ற மாணவியான அஞ்சலி ஹர்யானியைக் காதலித்தது, அவரையே மணந்து கொண்டது உள்ளிட்டவை தவிர, சுந்தர் பிச்சையின் தனிப்பட்ட வாழ்க்கைத் தகவல்கள் இந்நூலில் […]

Read more
1 2 3 4