ஆகாயக் கதவு

ஆகாயக் கதவு, ஏ.இளமதி, குறி வெளியீடு, விலை 100ரூ. நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி எழுதிய 32 கவிதைகள் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. அனைத்தையும் அந்த சிறுமியின் கையெழுத்திலேயே கொடுத்து இருப்பதுடன், அதற்குத் தக்க அந்தச் சிறுமி வரைந்த ஓவியங்களையும் இடம்பெறச் செய்து இருப்பது பாராட்டுக்குரியது. நன்றி: தினத்தந்தி, 5/12/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பஞ்ச தந்திரக் கதைகள்

பஞ்ச தந்திரக் கதைகள், தொகுப்பாசிரியர் முல்லை பிஎல்.முத்தையா, முல்லை பதிப்பகம், பக். 520, விலை 380ரூ. பஞ்ச தந்திரக் கதைகள் கி.பி. 6 -ஆம் நூற்றாண்டில் பாரசீக மொழியில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் தெற்குப் பகுதியை அமரசக்தி என்ற அரசன் மிகச் சிறப்பாக ஆண்டு வந்தான். அவனுக்கு மூன்று மகன்கள் இருந்தும், அவர்கள் எந்தத் திறமையும் அற்றவர்களாக இருந்தது அரசனுக்கு கவலையாக இருந்தது. அவர்களை 6-மாதத்தில் எல்லாத் திறமைகளும் கொண்டவர்களாக உருவாக்குவதாக, விஷ்ணுசர்மா என்ற அந்தண ஆசிரியர் பொறுப்பேற்கிறார். அதன்படி கல்வியறிவு அற்ற அவர்களை, […]

Read more

இந்திரநீலம்

இந்திரநீலம், அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை 150ரூ. பெண்களின் காம வெளிப்பாடு, சங்க காலத்தில் இருந்து தொடரும் மரபுதான் என்றாலும், சங்கத்திற்குப் பின்னால் அதற்கு நீண்ட தொடர்ச்சி இல்லை என்பதையும்,காமம், நறுமணம் மிக்கப்பூவின் மலர்ச்சியைப் போல் அல்லாமல் கெடுபிடிகள் நிரம்பிய சடங்குகளாக ஆக்கப்பட்டுவிட்டது என்பதையும் நுணுக்கமான உளவியல் அடிப்படையில், 8 சிறுகதைகள் மூலம் மென்மையாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். மகாபாரதத்தின் திரவுபதி, சிலப்பதிகாரக் கண்ணகி, காரைக்கால் அம்மையார் ஆன புனிதவதி, மாதவியின் மகள் மணிமேகலை போன்றவர்களைக் கதை மாந்தர்களாக ஆக்கி, அவர்களது உள்மனப் போராட்டத்தை […]

Read more

ஊதா நிறத் தீவு

ஊதா நிறத் தீவு, ராஜேஷ்குமார், ஸ்ரீபாரதி பப்ளிகேஷன்ஸ், விலை 115ரூ. உயிர்க்கொல்லி நோயான எயிட்சுக்கு கண்டுபிடித்த ரகசியமான மருந்தை மையமாக வைத்து எழுத்தாளர் தனக்கே உரித்தான பாணியில் திடீர் திருப்பங்களுடன் இந்த மர்மக் கதையைத் தந்து இருக்கிறார். நன்றி: தினத்தந்தி,28/2/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஸ்ரீமத் பகவத் கீதை

ஸ்ரீமத் பகவத் கீதை, பி.எஸ்.ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், விலை 150ரூ. பகவத் கீதை பிறந்த கதை, அதன் தனிச்சிறப்பு, 18 அத்தியாயங்களில் உள்ள அனைத்து வரிகளுக்கும் எளிய தமிழில் விளக்கம் ஆகியவை ராமகிருஷ்ண பரமஹம்சரின் மேற்கோள்களுடன் தரப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி,28/2/21 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000006395_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

கல்கியின் பொன்னியின் செல்வன்(சித்திரக் கதை)

கல்கியின் பொன்னியின் செல்வன்(சித்திரக் கதை), ஓவியர் ப.தாகம், தங்கப்பதுமை பதிப்பகம், விலை 200ரூ. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் சரித்திர நாவலைப் படிக்கும்போது அதில் இடம்பெற்ற அருள்மொழி, வந்தியத்தேவன், குந்தவை, நந்தினி, பெரிய பழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியான் போன்ற கதாபாத்திரங்கள், ஒவ்வொருவர் மனதிலும் இடம்பிடித்து இருக்கும். அந்தக் கதாபாத்திரங்களை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் வகையில், 10 தொகுதிகளைக் கொண்ட இந்த சித்திரக் கதை நூல் அற்புதமாகத் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும், அந்தக் காலத்திற்கு ஏற்ற உடை, அலங்காரங்களுடன், அதற்கேற்ற பின்னணிக் காட்சிகளுடன், […]

Read more

முதியோர் நல மருத்துவம்

முதியோர் நல மருத்துவம், கேள்வி பதில்,டாக்டர் வி.எஸ். நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை, விலை: ரூ. 150. குழந்தைப் பருவத்தைவிட மென்மையானது முதுமைப் பருவம். வாழ்க்கையின் நினைவுகளை அசைபோட்டு மகிழ்வுடன் வாழ வேண்டிய பருவம் அது. ஆனால், அந்த மகிழ்ச்சி முதுமையில் பலருக்கும் கிடைப்பதில்லை என்பதே உண்மை. ஒருபுறம் முதுமையினால் ஏற்படும் உடல் உபாதைகள் / உடல்நலக் குறைபாடுகள். மறுபுறம் நெருங்கியவர்களின் இழப்பு, உறவினர்களின் புறக்கணிப்பு, குடும்பச்சூழல், சமூகச்சூழல் போன்றவற்றால் ஏற்படும் மனநலப் பாதிப்புகள். இவை முதியவர்களை மீள முடியாத, யாரிடமும் பகிர முடியாத […]

Read more

மலரினும் மெல்லிது

மலரினும் மெல்லிது, வெ.நல்லதம்பி, வள்ளுவன் வெளியீட்டகம், விலை-ரூ.300. மலர்களின் ஆவணம் நாடகங்கள், கதைகள், கட்டுரைகள் பலவற்றை எழுதியவரும் தூர்தர்ஷனில் ‘எதிரொலி’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளைத் தயாரித்தவருமான மூத்த ஊடகவியலாளர் வெ.நல்லதம்பி எழுதியிருக்கும் முதல் நாவல் இது. மலர்களை விளைவிக்கும் வேளாண்குடியில் பிறந்த கமலா, நாவலின் முதன்மைக் கதாபாத்திரம். அவள் வாழ்க்கையில் முன்னேற அவளுடைய தமிழாசிரியரும் வேளாண் கல்லூரிப் பேராசிரியரும் வழிகாட்டுகிறார்கள். கமலாவுக்கும் மேலைநாட்டைச் சேர்ந்த ஆங்கிலக் கலப்புத் தமிழனான ஜார்ஜுக்கும் காதல் மலர்கிறது. கமலாவின் இத்தகைய வாழ்க்கைப் பயணத்தை முன்வைத்து மலர் விளைவித்தலில் ஈடுபடும் வேளாண்குடி […]

Read more

வியாசர் இயற்றிய ஸ்ரீமத் பாகவதம்

வியாசர் இயற்றிய ஸ்ரீமத் பாகவதம், அனந்தாச்சாரி,  அருணா பப்ளிகேஷன்ஸ், விலை – ரூ.230 எளிய தமிழ்நடையில் பாகவதம் மகாபாரதத்தை இயற்றியவர், வேதங்களைத் தொகுத்து அளித்தவர் இந்து மதத்தின் 18 புராணங்களில் 17ஐ இயற்றியவர் வேதவியாசர். அவற்றில் மிகப் புனிதமானதாகக் கருதப்படுவதும் இன்றளவும் ஆன்மிகச் சான்றோர்களாலும் சொற்பொழிவாளர்களாலும் பெரிதும் மேற்கோள் காட்டப்படுவதுமான புராணம் ஸ்ரீமத் பாகவதம். வியாசர் வடமொழியில் இயற்றிய பாகவத புராணத்தை எளிய தமிழில் அனைத்து வயதினரும் புரிந்துகொள்ளும் வகையில் கதைகளாகக் கொடுத்துள்ள நூல் இது. புராணத்தின் பத்து ஸ்கந்தங்களின் (பகுதிகள்) சாராம்சமும் 119 […]

Read more

பட்டா? பத்திரம்? அனுபவம்?

பட்டா? பத்திரம்? அனுபவம்?, அ.பரஞ்சோதி, ராஜாத்தி பதிப்பகம், விலைரூ.110. நில உரிமைக்கான ஆவணங்கள் குறித்து விளக்கமளிக்கும் நுால். கேள்வி – பதில் பாணியில் எளிமையாக எழுதப்பட்டுள்ளது. நில உடைமை ஆவணமான, ‘பட்டா’ இல்லாமல், நிலத்தை விற்பனை பத்திரம் பதிவு செய்ய முடியாது என்ற உண்மையுடன் துவங்குகிறது. பட்டா, பத்திரம், நில அனுபவம் பற்றி விளக்கமாக, சட்ட விதிகளின் படி விளக்குகிறது. நிலம் வைத்திருப்போர், நிலம் வாங்க விரும்புவோர் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை உள்ளடக்கிய நுால். – பாவெல் நன்றி: தினமலர், 19/11/21. இந்தப் […]

Read more
1 2 3 9