கல்கியின் பொன்னியின் செல்வன்(சித்திரக் கதை)
கல்கியின் பொன்னியின் செல்வன்(சித்திரக் கதை), ஓவியர் ப.தாகம், தங்கப்பதுமை பதிப்பகம், விலை 200ரூ.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் சரித்திர நாவலைப் படிக்கும்போது அதில் இடம்பெற்ற அருள்மொழி, வந்தியத்தேவன், குந்தவை, நந்தினி, பெரிய பழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியான் போன்ற கதாபாத்திரங்கள், ஒவ்வொருவர் மனதிலும் இடம்பிடித்து இருக்கும். அந்தக் கதாபாத்திரங்களை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் வகையில், 10 தொகுதிகளைக் கொண்ட இந்த சித்திரக் கதை நூல் அற்புதமாகத் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.
அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும், அந்தக் காலத்திற்கு ஏற்ற உடை, அலங்காரங்களுடன், அதற்கேற்ற பின்னணிக் காட்சிகளுடன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களில் உயிர் கொடுத்து இருக்கிறார், ஓவிய ஆசிரியர் ப.தங்கம். ஆதித்த கரிகாலன் கொலை பற்றிய சாட்சிகள் திகிலூட்டுகின்றன. கதையின் முக்கிய சம்பவங்கள் எதையும் விட்டுவிடாமல் படக்காட்சிகளாகத் தந்து இருப்பதால் இந்த புத்தகத் தொகுதி அனைத்து தரப்பினரையும் கவரும்.
நன்றி: தினத்தந்தி,28/2/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818