ஆன்மாவின் பயணங்கள்

ஆன்மாவின் பயணங்கள், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, பக். 280, விலை 210ரூ. ஆன்மா பிறப்பதும் இல்லை; இறப்பதும் இல்லை; என்றும் இருப்பது. நமது ஆடை நைந்து போன பிறகு அதனைத் தூக்கி எறிந்துவிட்டு புதிய ஆடையை அணிவதுபோல, ஆன்மாவின் ஆடை போன்ற இந்த உடல் சாய்ந்துபோன பிறகு புதிய உடலுக்குள் புகுந்து ஆன்மா இயங்குகிறது என்று கூறுகிறது பகவத்கீதை. அமெரிக்க மனநல மருத்துவரான பிரைன் வைஸ் எழுதிய Many lives Many Matters. Only love is Red ஆகிய நூல்கள் […]

Read more

பிணங்களின் முகங்கள்

பிணங்களின் முகங்கள், சுப்ரபாரதி மணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை, பக். 248, விலை 200ரூ. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் கல்வி அளிக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டுதான், கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் கொண்டு வரப்பட்டது. அத்துடன் ஏழை பிள்ளைகளுக்கும் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீட்டு வசதியையும் அரசாங்கம் ஏற்படுத்தித் தந்துள்ளது. இன்று கல்விக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டாலும், நாம் நம் சமூகத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை இன்னும் ஒழிந்த பாடில்லை. தேநீர் கடைகள், உணவு விடுதிகள் […]

Read more

நெஞ்சம் நிறைந்த நினைவுகள்

நெஞ்சம் நிறைந்த நினைவுகள், ஏ.சி. திருலோகசந்தர், வசந்தா பிரசுரம், சென்னை, பக். 256, விலை 220ரூ. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் 65 திரைப்படங்களை இயக்கி வெற்றிகரமான திரை ஆளுமையாளகத் திகழ்ந்தவர் ஏ.சி. திருலோகசந்தர். அவர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை உள்ளது உள்ளவாறு பதிவு செய்துள்ள புத்தகமே நெஞ்சம் நிறைந்த நினைவுகள். தமிழ் சினிமாவின் மறக்க முடியாத வெற்றிப் படங்களை இயக்கிய ஏ.சி. திருலோகசந்தர் இந்தப் புத்தகத்தையும் அவருடைய படங்களில் இடம்பெறும் காட்சிகளைப் போன்றே அழகுற ஆவணப்படுத்தியுள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ஜெமினி கணேசன், ஏவி. […]

Read more

எழுச்சி பெறு யுவனே

எழுச்சி பெறு யுவனே, தொகுப்பாசிரியர் சுவாமி விமூர்த்தானந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை, பக். 324, விலை 125ரூ. பெரும் இளைஞர் சக்தியைக் கொண்ட நம் நாட்டில், அவர்களை வழி நடத்துவது யார் என்பது மிகப் பெரிய கேள்வி. இன்றைய இளைஞர்களில் சிலர் தவறான பாதையில், செல்வதற்கான ஈர்ப்புகள், திசை திருப்பல்கள் அதிகம். ஒட்டுமொத்த இளைஞர் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி. எனவே ஒட்டுமொத்த இளைஞர் சக்தியும் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, அதற்கான முயற்சியாக இந்நூல் அமைந்திருக்கிறது. வாழ்க்கையில் சாதிக்கத் துடிக்கின்ற, சாதித்த, […]

Read more

தமிழ்ச்சுரபி

தமிழ்ச்சுரபி (தொகுதி 1), தொகுப்பாசிரியர் விக்கிரமன், இலக்கியபீடம், சென்னை, பக். 544, விலை 450ரூ. 1948ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அமுதசுரபி இதழின் தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுத்த கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகளின் தொகுப்பாக இந்த தமிழ்ச்சுரபி வெளிவந்திருக்கிறது. இது முதல் தொகுதி. கட்டுரைகளில் ரா.பி. சேதுப்பிள்ளை, கி.வா. ஜகந்நாதன், கி.ஆ.பெ. விசுவநாதம், யோகி சுத்தானந்த பாரதியார், பி.ஸ்ரீ. போன்றோர் எழுதியவை தமிழர்களின் மனதில் பதிய வேண்டியவை. பசியற்ற, பண்புள்ள நாடாக தமிழகம் அமைய வேண்டும் என்கிறார் ரா.பி. சேதுப்பிள்ளை. எனது தலை சிலருடைய திருவடிகளில் மட்டுமே […]

Read more

இங்கே நிம்மதி

இங்கே நிம்மதி, என். கணேசன், பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன் லிமிடெட், சென்னை, பக். 160, விலை 130ரூ. ஆழ்மன சக்தி, ஆன்மிகம், சுயமுன்னேற்றம், வாழ்வியல், நாவல்கள், சிறுகதைகள் என்று இவரது படைப்புகள் முக்கியத்துவம் பெற்றவை. இவற்றில் சில இலக்கியச் சிந்தனை உட்பட பல பரிசுகளைப் பெற்றுள்ளவை. அந்த வகையில் இந்நூலில் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைத்துத் தரப்பினருக்கும் வரும் எல்லா பிரச்சினைகளையும் சுமார் 42 கட்டுரைகளில் பிரித்துக் காட்டி, இவற்றிற்கு தீர்வு காண்பது எப்படி என்பதையும் மிக எளிமையாக விளக்கியுள்ளார் ஆசிரியர். […]

Read more

சித்தார்த்தா ஓர் ஆய்வு

சித்தார்த்தா ஓர் ஆய்வு, சுரா பதிப்பகம், சென்னை, விலை 80ரூ. சித்தார்த்தன் என்பது புத்தரின் இயற்பெயர். எனினும் இது புத்தரின் வாழ்க்கை வரலாறு அல்ல. புத்தர் காலப் பின்னணியில் எழுதப்பட்ட நாவல். இதை எழுதியவர் ஜெர்மன் எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்லி. இந்த நாவல் 1946ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றது. நான் விரும்பும் புத்தகங்கள் என்ற தலைப்பில் ஓஷோ ஒரு புத்தகம் எழுதினார். அதில் தன்னை மிகவும் கவர்ந்த நாவல் என்று சித்தார்த்தாவைக் குறிப்பிடுகிறார். அவரைப்போலவே இந்த நாவலில் மனதைப் பறிகொடுத்த சுரானந்தா, […]

Read more

இராமாயணம்

இராமாயணம், வெளியிட்டோர் சஞ்சீவியார், சென்னை, விலை 400ரூ. வடமொழியில் வான்மீகி முனிவர் எழுதிய இராமாயண இதிகாசம் 24,000 சுலோகங்களைக் கொண்டது. கம்பர் இக்காவியத்தை ஆறு காண்டங்களாக 12,000 விருத்தப்பாக்களால் பாடியுள்ளார். அவர் இந்நூலுக்கு வைத்த பெயர் இராமாவதாரம். இராமபிரானை மனிதத் தன்மையிலேயே வைத்து போற்றியவர் வான்மீகி முனிவர். கம்பர் இராமபிரானைத் தெய்வமாகப் போற்றியவர். கம்பரின் கவிதை கடவுள் பற்றை அடிப்படையாகக் கொண்டது. தமிழ் மக்கள் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டது. எனவே எழுதப் படிக்கத் தெரிந்த அனைவரும் இராமாயணத்தைப் படித்து, இன்புறுமாறு உரைநடை வடிவில் […]

Read more

ஒரு கதை ஒரு விதை

ஒரு கதை ஒரு விதை, குமுதம் பதிப்பகம், சென்னை, விலை 90ரூ. வாழ்க்கை என்பதே போராட்டம்தான். தினமும் எத்தனையோ பிரச்சினைகளை சந்திக்கிறோம். எதிர்நீச்சல் போடுகிறவர்கள்தான், வாழ்க்கையில் முன்னேற முடியும். பிரச்சினைகளை சமாளித்து, வெற்றி பெறுவது எப்படி என்பதை, சின்னச்சின்ன கதைகள் மூலம் விளக்குகிறார், இராம்குமார் சிங்காரம். ஒவ்வொரு கதையிலும், நம்பிக்கையூட்டும் பொறிகள் பளிச்சிடுகின்றன. வெற்றி பெறுவோர் கையில் இருக்க வேண்டிய புத்தகம். நன்றி: தினத்தந்தி, 13/5/2015.   —- வேரென நீ இருந்தாய், வசந்தா அம்பலவாணன், காரைக்கால், விலை 150ரூ. உலகிற்கு நல்லறம் புகட்டிய […]

Read more

கலையில் எரிந்த கலைஞன் சந்திரபாபு

கலையில் எரிந்த கலைஞன் சந்திரபாபு, தோழமை பதிப்பகம், சென்னை, விலை 159ரூ. தமிழ்த்திரை உலகில் சிறந்த நகைச்சுவை நடிகராகக் கொடிகட்டிப் பறந்த சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு இந்தப் புத்தகம். 1958 ஜனவரி 23ந்தேதி மதுரையில் ஷீலா என்ற ஆங்கிலோ இந்தியப்பெண்ணை சந்திக்கிறார் சந்திரபாபு. கண்டதும் காதல் கொள்கிறார். அந்த ஆண்டு மே 29ம் தேதி இரு வீட்டாரின் சம்மதத்துடன் சந்திரபாபு ஷீலா திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்த பிறகுதான், ஏற்கனவே தான் ஒருவரை காதலித்த தகவலை சந்திரபாபுவிடம் வெளியிடுகிறார் ஷீலா. இதனால் சந்திரபாபு மனம் […]

Read more
1 2 3 7